Thursday, January 5, 2012

இந்தியா: மக்களவை சிறப்பு கூட்டம் தேதி அறிவிப்பு.

புதுடெல்லி: 1952-ம் ஆண்டு மக்களவையின் முதல் கூட்டம் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் மக்களவை சிறப்பு கூட்டம் வருகிற மே மாதம் 13-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதை தொடர்ந்து மூன்று நாள் கொண்டாட்டங்கள் நடைபெறும். மேலும் இந்த சிறப்பு கூட்டத்தை குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் தொடங்கி வைப்பார் என எதிர்பர்க்கபடுகிறது.

 இந்த சிறப்பு கூட்டம் மக்களவை தலைவர் மீரா குமாரின் சிந்தனையில் தோன்றியதாகும். அன்றாட நிகழ்வுகளை பற்றியே பேசிக்கொண்டிருக்காமல் அதையும் தாண்டி விவாதிக்க இந்த நூற்றாண்டில் இந்தியா எட்ட வேண்டிய இலக்குகள், மனித வள மேம்பாடு போன்றவற்றை குறித்து விவாதிக்க இக்கூட்டம் பயன்படும்  என்று மக்களவை பொது செயலர் டி.கே.விசுவநாதன் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment