சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக, இந்திய நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இருபது ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் தேர்வாகி இருக்கிறார்.ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் நெதர்லாந்தில் உள்ள ஹாக் நகரில் உள்ளது. இந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் இந்தியாவின் சார்பில் முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி தல்வீர் பண்டாரி போட்டியிட்டார். இவரை எதிர்த்து பிலிப்பைன்ஸ் நீதிபதி புளோரின்டினோ பெலிசியானோ போட்டியிட்டார்.













