Wednesday, September 4, 2013

மோடி பதவி விலக வேண்டும்: சி.பி.எம்.!

புதுடெல்லி: போலி என்கௌண்டர்களுக்கு ஒப்புதல் அளித்தது மோடிதான் என்று ஒரு சிறையிலுள்ள போலீஸ் அதிகாரி கூறியிருப்பதால் மோடி பதவி விலக வேண்டும் என்றும், அவர் மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்றும் சி.பி.எம். கூறியுள்ளது.

“இது சம்பந்தப்பட்ட வழக்குகளில் மோடியை சேர்க்க வேண்டும், ஆதலால் அவர் பதவி விலக வேண்டும்” என்று சி.பி.எம். இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

“அமித் ஷாவின் ஜாமீனும் ரத்து செய்யப்பட வேண்டும். பெரும்பாலான மக்களுக்கு மோடிதான் அனைத்து கொலைகளுக்கும் காரணம் என்று தெளிவாகத் தெரியும். அதனை இன்று வன்சாரா வெளிப்படையாக தனது இராஜினாமா கடிதத்தில் உறுதிப்படுத்தி விட்டார்.

‘குஜராத் அரசின் கொள்கையைத்தான் நாங்கள் செயல்படுத்தினோம்!’ - போலி என்கவுண்டர் போலீஸ் அதிகாரி டிஜி வன்சரா மோடி மீது குற்றச்சாட்டு!

குஜராத்தில் நடைபெற்ற போலி என்கவுண்டர்கள் தொடர்பாக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் உயர் போலீஸ் அதிகாரி டிஜி வன்சரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மேலும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளையும் அக்கடிதத்தில் எழுதியுள்ளார். இக்கடிதத்தை குஜராத் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளருக்கு வன்சரா அனுப்பியுள்ளார்.
குஜராத்தில் நடைபெற்றுவரும் பாஜக ஆட்சியில் சுமார் இருபதுக்கும் மேற்ப்பட்ட போலி என்கவுண்டர்கள் நடந்துள்ளன. குஜராத் போலீஸால் போலி என்கவுண்ட்டரில் சொராஹ்புதீன் ஷேக் என்பவர் கொல்லப்பட்டார். பின்னர் அவரது மனைவியும், என்கவுண்டர் சாட்சியான பிரஜாபதி ஆகியோரும் போலி என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டனர். இது போல் மேலும் சில போலி என்கவுண்ட்டர்கள் நடந்ததும் தெரியவந்தது. இந்த போலி என்கவுண்ட்டர்கள் பற்றி சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.

குஜராத் அரசின் லோக் ஆயுக்தா மசோதா! - திருப்பி அனுப்பினார் ஆளுநர்!


குஜராத் மாநில அரசு கொண்டு வந்த லோக் ஆயுக்தா கமிட்டி மசோதாவை மறு ஆய்வு செய்யும்படி, ஆளுநர் கமலா பெனிவால் திங்கள்கிழமை அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
இந்த மசோதா கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
லோக்ஆயுக்தா நீதிபதி தேர்வு, கமிட்டியின் நியமனம் தொடர்பான அனைத்து ஆதிகாரங்களும் முதல்வருக்கே அளிக்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

போலி என்கவுண்டர்: அமித்ஷாவை தப்ப வைக்கும் முயற்சி! ஸ்டிங் ஆபரேசன் மூலம் அம்பலம்!

துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கில் குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சரும், மோடியின் நெருக்கமான அமித்ஷாவை தப்ப வைக்க செய்த முயற்சி ரகசிய கேமரா ஆபரேசன் மூலம் வெளிவந்துள்ளது.
பா.ஜ.க செய்தி தொடர்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான பிரகாஷ் ஜாவேத்கர், பூபேந்தர் யாதவ் எம்.பி, பா.ஜ.க பொதுச் செயலாளர் ராம்லால் குப்தா ஆகியோர் நடத்திய சதித்திட்டம் பத்திரிகையாளரான புஷ்ப குமார் ஷர்மா, ரகசிய கேமரா ஆபரேசன் மூலம் உண்மையை வெளிக்கொணர்ந்துள்ளார்.

எகிப்திய போராட்டம் வெற்றிப்பெறுமா?



சுமார் 50 வருடங்களுக்கு மேலாக பிர்அவ்னிய பிடியில் இருந்த எகிப்து சென்ற வருடம்தான் விடுதலைப பெற்றது. மத்திய கிழக்கில் மக்கள் புரட்சி வேகமாக எழுந்து வந்தபோது, தூனிஸியா தொடக்கம் எகிப்து வரை மாபெரும் எழுச்சி ஏற்பட்டது. 

தற்போது சிரியாவில் நவீன ஷைத்தான் பிர்அவ்னின் வாரிசுகளில் ஒரு வரான பஸார் அல் அஸதின் கொடுங்கோலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான முஸ்லிம் கள் உயிர் தியாகம் செய்த வண்ணமுள்ளனர். ஜனநாயகம்| என உலகம் கூறும் கட்டமைப்பிற்குள் எகிப்து நாட்டை உருவாக்கிட எகிப்திய மக்கள் ஒட்டுமொத்தமாக விரும்பினார்கள். 

இதன் விளைவாகவே அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் ஆத்ம நண்பனான ஹுஸ்னி முபாரக்கின் 30 வருட ஆட்சிக்கு எதிராக சுயாதீனமான சுதந்திரமான ஆட்சியை வேண்டி சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டு, வெற்றி கண்டார் கள். முபாரக் பதவியிலிருந்து ஒதுங்கினார். தேர்தல் நடாத்தப்பட்டது. பல்வேறு கட்சி கள் தேர்தலில் குதித்தன. இஹ்வானுல் முஸ்லிமூன் கட்சி வெற்றி பெற்றது. சகோதரர் முர்ஸி ஜனாதிபதியானார்.

முர்ஸியின் கட்சிக்கு மக்களின் ஆதரவு அதிகமாகவே கிடைத்தது. மாற்றத்தை எதிர்பார்த்த மக்களின் உள்ளங்களுக்கு ஆறுதல் கிடைத்தது. முர்ஸியின் ஒரு வருட ஆட்சியில் பலசீரமைப்புகள் நடக்கலாயின. தன்னி றைவு அடைந்த நாடாக எகிப்தை ஆக்கிட முயற்சித்தார். இது ஒரு பாரிய சவால். 

பொருளாதார வீழ்ச்சியை சரி செய்ய சர்வதேச நாணய நிதியத்தை மத்திய அரசு நாட வேண்டும்! – தேசிய தலைவர் கோரிக்கை


இந்தியாவின் தற்பொதைய பொருளாதார வீழ்ச்சியை சரி செய்ய மத்திய அரசு சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் சையத் தெரிவித்துள்ளார்.இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் குறைந்திருப்பது உள்ளிட்டவை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இறங்குமுகமாகவே செல்கிறது. அதலபாதாளத்திலிருக்கும் இந்திய பொருளாதாரத்தை கட்டுக்குள் கொண்டுவருவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குலைக்கும் என்பதில் சந்தேகமில்லை.வங்கதேசம், இந்தோனேஷியா போன்ற சிறிய நாடுகள் கூட பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணும்போது, இந்தியாவுக்கு மட்டும் ஏன் அவ்வாறு ஏற்படவில்லை.

Tuesday, September 3, 2013

சிரியா மீது போர்: அமெரிக்காவுக்கெதிராக உலகம் முழுவதும் கண்டனங்கள்!

வாஷிங்டன்: சிரியா மீது போர் தொடுப்பதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா காங்கிரஸ் ஒப்புதல் தேடி கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவுக்கெதிராக உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
“Hands off Syria” (சிரியாவை விட்டு விடு) போன்ற பதாகைகளை ஏந்தி மக்கள் வீதிகளில் இறங்கி அமெரிக்காவுக்கெதிராக போராடி வருகிறார்கள்.
ஸ்பெயினில் வாழும் சிரிய மக்கள் பார்சிலோனாவில் உள்ள ஒரு சதுக்கத்தில் சிரியாவுக்கெதிராக அந்நிய நாடுகள் தலையிடுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
சிரியா மீது இராணுவத் தாக்குதல் தொடுக்க அமெரிக்கா நடவடிக்கைகள் எடுத்து வருவதற்கு சிரியாவும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

உணவுப் பாதுகாப்பு மசோதா: மாநிலங்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்!

காங்கிரஸ் அரசின் கனவுத் திட்டமான உணவுப் பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று மாநிலங்களவையில் நீண்டநேர விவாதத்திற்குப் பின்னர், குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
எதிர்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் தெரிவிக்கப்பட்ட திருத்தங்கள், நிராகரிக்கப்பட்டன. அதன் பின்னர், மசோதா குரல் வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் உணவுப் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Monday, September 2, 2013

சீனி - சில கசப்பான உண்மைகள்


மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளூகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.


சீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.

சிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரழிவு நோய், இப்படி சீனி உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சீனி அதிகம் சேர்க்கப்படுகிறது.

ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்தால் ரூ. 57,000 கோடி லாபம் : வீரப்ப மொய்லி

அமெரிக்கத் தடையை மீறி இந்தியா ஈரான் நாட்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் ரூ, 57,000 கோடியை மிச்சப்படுத்த முடியும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி யோசனை தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி அந்த நாட்டுடன் எந்த வர்த்தகமும் செய்யக் கூடாது என்று ஐ.நாவில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்திருந்தது நினைவிருக்கலாம் எனினும் இந்தியா பழைய ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாங்குவதாகக் கூறி ஈரானிடம் வர்த்தகத்தைத் தொடர்ந்து வந்தது.
தற்போது ஈரானுடனான 27 சத எண்ணெய் இறக்குமதியை நிறுத்தியதும் ரூபாயின் வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகச் சொல்லப்பட்டு வருகிற நிலையில், வீரப்ப மொய்லியின் யோசனை நல்லதாக அமையும் என்பதால் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் இந்த யோசனையை வரவேற்றுள்ளார்..

கத்தார் நாட்டு புதிய விசா நடைமுறை: 188 பிரிவினருக்கு ஏர்போர்ட்டில் விசா!

கத்தார் அரசு, புதிய விசா நடைமுறையை அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையில், 188 பிரிவுகளில் தகுதி பெற்றவர்கள் கத்தார் வருவதற்கு முன்கூட்டியே விசா எடுக்க தேவையில்லை. GCC நாடுகளில் வசிப்பவர்கள் (அந்த நாடுகளின் பிரஜைகளாக இருக்க தேவையில்லை) தோஹா விமான நிலையத்தில் வந்து இறங்கும்போதே விசா வழங்கப்படும்.

ரஷியாவில் 2050-ல் முஸ்லிம்களின் ஆட்சி

உலக முஸ்லிம் அறிஞர்களுக்கான சர்வதேச ஒன்றியத்தின் டிரஸ்டிகள் கமிட்டி உறுப்பினரும் இஸ்லாமிய சிந்தனையாளருமான டாக்டர் முஹம்ம்த் அமாரா அண்மையில் தமது ஆய்வு ஒன்றை வெளியிட்டார்.

ரஷிய ஒன்றியத்தின் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒரு உண்மையை வெளியிட்டுள்ளது. ரஷ்யாவை முன்பு தாதாரியர்கள் ஆட்சி செய்ததை போன்று 2050-ல் முஸ்லிம்கள் ஆட்சி செய்வார்கள் என்பதே அந்த செய்தியாகும்.

துருக்கி ஐரோப்பாவை சுமக்கிறது; ஐரோப்பா இஸ்லாத்தை சுமக்கிறது, அப்படியானால் எதிர்காலம் இஸ்லாத்திற்கே! என்று டாக்டர் அமாரா குறிப்பிட்டார்.

வக்ஃப் சொத்துக்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த ரூ.500 கோடி முதலீட்டில் தேசிய வக்ஃப் கார்ப்பரேசன்! - மத்திய அரசு முடிவு!

வக்ஃப் சொத்துக்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் நோக்கில் ரூ.500 கோடி முதலீட்டில் உருவாக்கும் தேசிய வக்ஃப் டெவலப்மெண்ட் கார்ப்பரேசனின் நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
வக்ஃப் சொத்துக்களில் இருந்து வருமானத்தை உருவாக்கி அதனை முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக பயன்படுத்தவே வக்ஃப் கார்ப்பரேசனை மத்திய அரசு உருவாக்குகிறது. இதுத் தொடர்பாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான் கான், உயர் அதிகாரிகள், மத்திய வக்ஃப் கவுன்சில் உறுப்பினர்கள் இன்று விவாதிக்கின்றனர்.

இந்தியாவில் வரதட்சணைக் கொடுமையால் மணிக்கொரு மரணம்! - புள்ளிவிவரங்கள்!

இந்தியாவில் சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சணைக் கொடுமை காரணமாக உயிரிழப்பதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்தியா முழுவதும் 2012 ஆம் ஆண்டில் வரதட்சணைக் கொடுமை சம்பந்தமான உயிரிழப்புகளாக 8233 சம்பவங்கள் பதியப்பட்டுள்ளதாக நேசனல் க்ரைம் ரிக்கார்ட் பீரோ வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
2007 ஆம் ஆண்டு முதல் இந்த எண்ணிக்கை எட்டாயிரத்துக்கும் கூடுதலாகவே இருந்து வந்துள்ளது என்றும் தெரியவருகிறது. தவிர 2007 க்கும் 2011 க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வந்துள்ளது.

காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டும் பெட்ரோல் பங்கை திறக்க மத்திய அரசு பரிசீலனை


டெல்லி: பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இரவு நேரத்தில் பெட்ரோல் பங்குகளை மூடுவது குறித்து மத்திய அரசு தீவிரமாக யோசித்து வருகிறது என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பல ஐடியாக்கள் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறோம்

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பல ஐடியாக்கள் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறோம். இரவு நேரத்தில் பெட்ரோல் பங்குகளை மூடுவது அதில் ஒன்று ஆகும்.

அமெரிக்காவின் இணைய திருட்டு எதிரொலி! அரசின் முக்கிய துறைப் பணிகளில் ஜீமெயிலை நிறுத்த முடிவு!

அமெரிக்காவின் இரகசிய இணைய தகவல் திருட்டை தொடர்ந்து அரசின் முக்கிய பணிகளில் கூகுள் நிறுவனத்தின் ஜீமெயில் மின்னஞ்சலை பயன்படுத்துவதை நிறுத்த இந்திய தகவல் தொழில்நுட்ப துறை முடிவு செய்துள்ளது.
மேலும் உத்தியோகபூர்வமான தகவல் தொடர்புக்கு கூகுளின் ஜீமெயில் பயன்படுத்துவதை நிறுத்த அனைத்து பணியாளர்களுக்கும் விரைவில் அறிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் கூகுள் உள்ளிட்ட இணைய சர்வர்கள் மூலம் தனிப்பட்ட மற்றும் உலக நாடுகளின் மின்னஞ்சல்கள் திருடப்பட்டு வேவு பார்க்கப்பட்ட தகவல் வெளியான பிறகு, இரகசியமாக அரசாங்க தகவல்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அதிகரிக்க இந்திய தகவல் தொழில்நுட்ப துறையால் திட்டமிடப்பட்டுள்ளது.

Sunday, September 1, 2013

SDPI கட்சி நடத்திய மாபெரும் ஆர்ப்பாட்டம்


மாணவர்களுக்கு அரசு வழங்கும் கல்வி உதவித் தொகை குறித்து பா.ஜ.க பரப்பும் அவதூறு பிரச்சாரத்தை கண்டித்தும், கல்வியில் பின்தங்கியுள்ள தலித் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை அதிகரித்து முறையாக வழங்கக்கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் ஆகஸ்ட் போராட்டம் என்ற பெயரில் போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று ஆகஸ்ட் 31 சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார். 

டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: 17 வயது சிறார் குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை!

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில், 17 வயதுடைய சிறார் குற்றவாளிக்கு டெல்லி சிறார் நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது.
டெல்லியில் 23 வயது மருத்துவ மாணவி ஒருவர், கடந்த  டிசம்பர் 16 ஆம் தேதி இரவு தனது ஆண் நண்பருடன் பேருந்தில் சென்றபோது பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார். டிசம்பர் 17 ஆம் தேதி இந்த சம்பவம் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டனர். டிசம்பர் 20 ஆம் தேதி பீகாரில் பதுங்கியிருந்த ஐந்தாவது குற்றவாளி தாகூர் கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 21 ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி, சப்தர்ஜங் மருத்துவமனையில் உதவி கோட்ட மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்தார். டிசம்பர் 22 ஆம் தேதி, இதில் தொடர்புடைய 6வது குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டது யாஸீன் பட்கல் அல்ல!-வழக்கறிஞர்

புதுடெல்லி: யாஸீன் பட்கல் என்று கூறி 2 தினங்களுக்கு முன்பு போலீஸ் கைது செய்ததாக கூறப்படும் நபர் உண்மையில்  யாஸீன் பட்கல் அல்ல என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இது குறித்து வழக்கறிஞர் எம்.எஸ். கான் கூறியது: யாஸீன் பட்கல் என்று கைது செய்யப்பட்ட நபர் முஹம்மது அஹ்மத் சித்தி பாபா ஆவார். இந்தியாவால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள 12 நபர்களில் ஒருவராக இண்டலிஜன்ஸ் அதிகாரிகள் இவரை குறிப்பிடுவது தவறாகும். இவர்தாம் யாஸீன் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு புலனாய்வு ஏஜன்சிகளுக்கு உண்டு. கைது செய்யப்பட்டவர் யாஸீன் என்பதை நிரூபிக்க அவர்களின் வசம் ஆதாரம் எதுவுமில்லை.
அஹ்மத் சித்தி பாபாவை யாஸீன் பட்கல் என்று பெயர் மாற்றியது இண்டலிஜன்ஸ் ஏஜன்சிகள் என்று அவரது உறவினரும், பெங்களூரைச் சார்ந்த வழக்கறிஞருமான அக்மல் ரஸ்வி நேற்று முன் தினம் குற்றம் சாட்டியிருந்தார். 10-வது வகுப்பு கூட வெற்றி பெறாத முஹம்மது அஹ்மத் சித்தி பாபாவை, பொறியியல் பட்டதாரியாக மாற்றியது மற்றும் 1983-ஆம் ஆண்டு பிறந்த அஹ்மதை 1973-ஆம் ஆண்டு பிறந்தார் என்று கூறுவது குறித்து அக்மல் ரஸ்வி விமர்சித்திருந்தார்.

Wednesday, October 3, 2012

நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக்கப்பட்ட ஆ.ராசா- கல்மாடி.. அப்போ ஊழல் விவகாரம்?

 Congress Nominates Raja Suresh Kalmadi
டெல்லி: நாடாளுமன்றத்தின் நிலைக்குழு உறுப்பினராக ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைதாகி ஜாமீனில் உள்ள முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ.ராசாவை காங்கிரஸ் நியமித்துள்ளது.

அதே போல காமன்வெல்த் ஊழலில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் சுரேஷ் கல்மாடியும் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். 
இதன்மூலம் இருவரது ஊழல்களையும் மத்திய அரசு லேசாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது தெளிவாகிறது.
எரிசக்தித்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக ராசாவும், வெளி விவகாரத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் உறுப்பினராக கல்மாடியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.