குஜராத் மாநில அரசு கொண்டு வந்த லோக் ஆயுக்தா கமிட்டி மசோதாவை மறு ஆய்வு செய்யும்படி, ஆளுநர் கமலா பெனிவால் திங்கள்கிழமை அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
இந்த மசோதா கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
லோக்ஆயுக்தா நீதிபதி தேர்வு, கமிட்டியின் நியமனம் தொடர்பான அனைத்து ஆதிகாரங்களும் முதல்வருக்கே அளிக்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில், கமிட்டியின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் செயல்பட வேண்டும் என்று அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. மாநில தலைமை நீதிபதிக்கு இந்த மசோதாவில் அதிகாரம் அளிக்கப்படவில்லை.
கடந்த மாதம் ஆளுநரால் நியமிக்கப்பட்ட லோக்ஆயுக்தா நீதிபதி மேத்தா, லோக் ஆயுக்தாவில் மோடி அரசின் செயல்பாட்டை குறை கூறி அப்பதவியை ஏற்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment