டெல்லி: பெட்ரோல் பயன்பாட்டை குறைக்கும் வகையில் இரவு நேரத்தில் பெட்ரோல் பங்குகளை மூடுவது குறித்து மத்திய அரசு தீவிரமாக யோசித்து வருகிறது என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பல ஐடியாக்கள் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறோம்
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பல ஐடியாக்கள் குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறோம். இரவு நேரத்தில் பெட்ரோல் பங்குகளை மூடுவது அதில் ஒன்று ஆகும்.
ஆனால் இது குறித்து இன்னும் ஒரு முடிவு எடுக்கவில்லை. இது என்னுடைய கருத்தும் இல்லை என்றார். பெட்ரோல் தேவையை 3 சதவீதம் குறைத்து ரூ. 16,000 கோடியை சேமிக்கும் வகையில் பெட்ரோல் சிக்கனம் குறித்து வரும் 16ம் தேதி முதல் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த பெட்ரோலியத் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் தேவையை கட்டுப்படுத்த காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே நகரங்களில் உள்ள பெட்ரோல் பங்குகள் திறந்து வைக்கப்பட வேண்டும் என்று எந்த திட்டமும் எங்கள் அமைச்சகத்திடம் சமர்பிக்கப்படவில்லை என்று பெட்ரோலியத் துறை செயலாளர் விவேக் ரே தெரிவித்தார்.

No comments:
Post a Comment