வக்ஃப் சொத்துக்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் நோக்கில் ரூ.500 கோடி முதலீட்டில் உருவாக்கும் தேசிய வக்ஃப் டெவலப்மெண்ட் கார்ப்பரேசனின் நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
வக்ஃப் சொத்துக்களில் இருந்து வருமானத்தை உருவாக்கி அதனை முஸ்லிம் சமுதாயத்தின் நலனுக்காக பயன்படுத்தவே வக்ஃப் கார்ப்பரேசனை மத்திய அரசு உருவாக்குகிறது. இதுத் தொடர்பாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான் கான், உயர் அதிகாரிகள், மத்திய வக்ஃப் கவுன்சில் உறுப்பினர்கள் இன்று விவாதிக்கின்றனர்.
வக்ஃப் கவுன்சிலின் கீழ் கார்ப்பரேசன் இயங்கும் என்று சிறுபான்மை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கார்ப்பரேசனின் 51 சதவீத பங்குகள் மத்திய அரசுக்கும், மீதம் வக்ஃப் போர்டுகளுக்கும் உரியதாகும்.
நேசனல் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் கார்ப்பரேசனின் மாதிரியில் உருவாகும் வக்ஃப் கார்ப்பரேசன், வக்ஃப் சொத்துக்களை ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், வணிக வளாகங்கள் மற்றும் கோபுரங்களை கட்ட பயன்படுத்தும் என்று உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான வருமானம் கிடைக்கும். இதனை முஸ்லிம்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திற்கு அரசு பயன்படுத்தும். இதனை இந்த அரசின் ஆட்சிக் காலத்திலேயே உருவாக்க விரும்புவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment