Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Wednesday, September 4, 2013

எகிப்திய போராட்டம் வெற்றிப்பெறுமா?



சுமார் 50 வருடங்களுக்கு மேலாக பிர்அவ்னிய பிடியில் இருந்த எகிப்து சென்ற வருடம்தான் விடுதலைப பெற்றது. மத்திய கிழக்கில் மக்கள் புரட்சி வேகமாக எழுந்து வந்தபோது, தூனிஸியா தொடக்கம் எகிப்து வரை மாபெரும் எழுச்சி ஏற்பட்டது. 

தற்போது சிரியாவில் நவீன ஷைத்தான் பிர்அவ்னின் வாரிசுகளில் ஒரு வரான பஸார் அல் அஸதின் கொடுங்கோலுக்கு எதிராக ஆயிரக்கணக்கான முஸ்லிம் கள் உயிர் தியாகம் செய்த வண்ணமுள்ளனர். ஜனநாயகம்| என உலகம் கூறும் கட்டமைப்பிற்குள் எகிப்து நாட்டை உருவாக்கிட எகிப்திய மக்கள் ஒட்டுமொத்தமாக விரும்பினார்கள். 

இதன் விளைவாகவே அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் ஆத்ம நண்பனான ஹுஸ்னி முபாரக்கின் 30 வருட ஆட்சிக்கு எதிராக சுயாதீனமான சுதந்திரமான ஆட்சியை வேண்டி சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டு, வெற்றி கண்டார் கள். முபாரக் பதவியிலிருந்து ஒதுங்கினார். தேர்தல் நடாத்தப்பட்டது. பல்வேறு கட்சி கள் தேர்தலில் குதித்தன. இஹ்வானுல் முஸ்லிமூன் கட்சி வெற்றி பெற்றது. சகோதரர் முர்ஸி ஜனாதிபதியானார்.

முர்ஸியின் கட்சிக்கு மக்களின் ஆதரவு அதிகமாகவே கிடைத்தது. மாற்றத்தை எதிர்பார்த்த மக்களின் உள்ளங்களுக்கு ஆறுதல் கிடைத்தது. முர்ஸியின் ஒரு வருட ஆட்சியில் பலசீரமைப்புகள் நடக்கலாயின. தன்னி றைவு அடைந்த நாடாக எகிப்தை ஆக்கிட முயற்சித்தார். இது ஒரு பாரிய சவால். 

Tuesday, September 4, 2012

ஆசிரியர்கள் தினம்!!!

கருவறையில் இருந்து வெளிவரும் ஒரு குழந்தைக்கு அந்த தாய் உலகை அடையாளம் காட்டுகிறாள். அந்த உலகை புரிந்து பண்பட்டவனாய் வாழும் கலையை ஆசிரியர் தான் அந்த குழந்தைக்கு செவ்வனே கற்று கொடுத்து மனிதனை மனிதனாக மாற்றும் வேலையை செய்கின்றனர். 

அந்த உண்ணதமான பணியை செய்யும் ஆசிரியர்களை நினைவுகூறும் விதமாகவும், நன்றி தெரிவிக்கும் விதமாகவும் இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி சர்வபள்ளி திரு.ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். 

அவர் ஒரு சிறந்த ஆசிரியராக மட்டும் இல்லாமல் சிறந்த தத்துவமேதையாகவும், சிறந்த கல்வியாளராகவும் விளங்கினார். இந்தியாவில் 1962 முதல் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 5ஆம் தேதியை ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 

Tuesday, August 7, 2012

மோட்சம் வேண்டுமா மோடியே...?


"குஜராத் இனக்கலவரம்"எத்துனை ஆண்டுகாலம் கடந்தாலும் இந்திய முஸ்லிம்களால் எளிதில் மறந்துவிட முடியாத ஒரு துயர சம்பவம். 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அயோத்தியிலிருந்து அஹமதாபாத் நோக்கி வந்து கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் எஸ்-6 பெட்டியில் பயணம் செய்த கரசேவகர்கள் 56 பேர் உடல் கருகி உயர்ந்தனர். இதில் 56 நபர்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஒரு தரப்பு செய்திகள் வந்தாலும் மறுதரப்பில் சிலர் உயிர் பிழைத்தனர் என்று கூறுகிறது.


இந்த கோர விபத்து நடைபெற்ற மருநாளே மாநிலம் தழுவிய கடை அடைப்பிற்கு ஃபாசிஸ பயங்கரவாத அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்தது. அதே போன்று குஜராத்தி பத்திரிக்கையான சந்தேஷ் நாளிதழ் முஸ்லிம்கள் தான் இரயிலுக்கு தீ வைத்தனர் என்ற விஷமச் செய்தியை பரப்பினர். மேலும் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த இளம்பெண் கற்பழிக்கப்பட்டுவிட்டதாகவும் செய்திகளை கட்டவிழ்த்துவிட எல்லாவற்றிற்கும் தயாராக இருந்த ஃபாசிஸ் சங்கப்பரிவார கும்பல்கள் அப்பாவி மக்களுக்கு எதிராக கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட்டனர்.

Thursday, May 10, 2012

இறைவா!...என் மாமியாரை மன்னிப்பாயா!(சிறுகதை)


ஓரளவு வசதியான வீடுதான். ரஹீம்: அவன் மனைவி ஆயிஷா: மற்றும் அவனது வயதான தாய் மர்யம்:. இந்த மூன்று பேரையும் சேர்த்து ஆயிஷாவின் வயிற்றில் வளரும் ஆறு மாத குழந்தை. இந்த நான்கு பேர் வசதியாக வாழ இந்த வீடு போதும்தான். ரஹீமுக்கு திருமண மாகி 6 வருடங்கள் ஆகி விட்டது. இந்த வருடம் தான் அவனது மனைவி உண்டாகி இருப்பது அவனுள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு புறம் மகிழ்ச்சி: மறுபுறம் அவனது தாயார் ஒரு வாரம் முன்பு வாத நோயால் பாதிக்கப்பட்டு ஒரு கால் ஒரு கை விளங்காமல் போன சோகம். டாக்டரும் கையை விரித்து விட்டார். இனி படுக்கையில்தான் தனது வாழ்நாளை தனது தாயார் கழிக்க வேண்டுமாம். சிந்தனை வயப்பட்டவனாக தனது மளிகை கடையை திறக்க ரஹீம் சென்று கொண்டிருந்தான்.

ஆயிஷா தனது மாமியாருக்கு மருந்துகளை கலக்கி கொடுத்துக் கொண்டிருந்தாள். இரண்டு நாட்களாகி விட்டது. மாமியாரின் துணிகளையும் மாற்றியாக வேண்டும். தனது கணவன் வருவதற்குள் மதிய உணவையும் தயார் பண்ண வேண்டும்: என்று எண்ணியபடியே வேலைகளில் மும்முரமானாள் ஆயிஷா. 'ஆயிஷா..கொஞ்சம் இங்கே வாம்மா..' மாமியாரின் குரல் கேட்டு அடுப்பங்கரையிலிருந்து ஹாலுக்கு வந்தாள் ஆயிஷா. ஆயிஷாவின் முகத்தை பார்ப்பதற்கே வெட்கப்பட்டுக் கொண்டு தனது முகத்தை திருப்பிக் கொண்டார் மர்யம். நிலைமையை புரிந்து கொண்ட ஆயிஷா மாமியாரின் உடைகளை மாற்ற ஆயத்தமானாள். ஆம்...படுக்கையையே கழிவறையாக்கிய மாமியாரை பரிதாபமாக பார்த்துக் கொண்டே அவரை தூக்கி சுவற்றோடு சாய வைத்தாள். உடுத்திய துணிகள், விரிப்பு அனைத்தையும் ஒன்று விடாமல் எடுத்து துவைக்க போட்டாள் ஆயிஷா.. தனது மருமகள் தனக்காக செய்யும் அனைத்து வேலைகளையும் நோட்டம் விட்டுக் கொண்டே இருந்தார் மர்யம்....

Friday, May 4, 2012

மாவீரன் திப்புசுல்தான் நினைவு நாள்


மாவீரன் திப்புசுல்தான்இன்று மாவீரன் திப்பு சுல்தான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கெதிராக தனது இன்னுயிரை தியாகம் செய்த நாள்.
1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.
“ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் வாழ்ந்து பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்”
எதிரிகளுடன் தீரமுடன் போரிட்டு குண்டு காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடந்த திப்புவிடம் அவரது பணியாள், “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேயே அதிகாரியை அழைக்கட்டுமா? சரணடைந்து விடலாம்” என பதறியவாறு கூறிய வேளையில் திப்பு உதிர்த்த உன்னத வார்த்தைகள் தாம் மேலே கண்டவை.

Thursday, April 26, 2012

பெற்றோர்களின் வெற்றி

இன்றோடு எனது பரீட்சை முடிந்து விட்டது நான் இனிமேல் நன்றாக விளையாடலாம், வெளியூர்களுக்கு செல்லலாம், உறவினர்களை பார்க்கலாம் என்று மனதில் ஒரு கற்பனை கோட்டையை கட்டிக் கொண்டு பரீட்சை முடித்து கோடை விடுமுறையை கொண்டாட வீட்டிற்க்கு வரும் குழந்தைகளுக்கு ஒரு அதிர்ச்சி "இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் அதனால் நாளை முதல் அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டும்" என்ற தன் பெற்றோரின் அன்பான உத்தரவு. இதற்கு "இன்றைய இயந்திரதரமான வாழ்க்கையில் என்னுடைய பிள்ளைகள் எப்போதும் ஒரு படி மேலே தான் இருக்க வேண்டும், எஞ்ஜினியராகவோ, டாக்டராகவோ தான் வர வேண்டும் அப்போது தான் அவனுடைய வாழ்க்கை பிரகாசமாக இருக்கும், அதற்கு தேவையான பயிற்சிகளை இப்போதிருந்தே எடுக்க வேண்டும்" என்ற கற்பனையான காரணங்களை சொல்லும் பெற்றோர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள். 

Friday, February 24, 2012

ஹலா பிப்ரவரி - பிப்ரவரி திருவிழா

வருடந்தோறும் பிப்ரவரி 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் குவைத் திருவிழா கோலம் பூணுகிறது. இந்த இரட்டை நாட்களை கொண்டாட முதன்மை காரணம் பிப்ரவரி 25-யை தேசிய தினமாகவும், பிப்ரவரி 26-யை சுதந்திர நாளாகவும் குவைத் அரசாங்கம் அனுஷ்டிப்பதே ஆகும். பிரிட்டிஷாரின் காலனியாதிக்கத்தில் இருந்து 1961-இல் விடுபட்ட பிறகு வருடத்தில் ஒரு நாளை மட்டுமே கொண்டாடி வந்த குவைத் மக்கள், மறைந்த ஈராக் அதிபர் சதாம் ஹுசைனின் ஆக்கிரமிப்பை சர்வதேச சக்திகளின் ஆதரவுடன் அகற்றிய பிறகு இரட்டை தின கொண்டாட்டமாக பிப்ரவரி 25 மற்றும் பிப்ரவரி 26 தேதிகளில் "ஹலா பிப்ரவரி" என்ற பெயரில் 1999-ம் ஆண்டு அறிமுகபடுத்தபட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு திருவிழாவாக நடத்தி அமர்களபடுத்தி வருகிறது. மேலும் இவ்விழாவுக்கான ஏற்பாடுகள் ஒரு மாத காலத்திற்கு முன்பாக திட்டமிடப்பட்டு கோலாகலபடுதபடுகிறது. 


இந்த வருடமும் பிப்ரவரி திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பிப்ரவரி 2 அன்று  தொடங்கப்பட்டு  அதை கொண்டாட தயாராகி கொண்டிருக்கிறார்கள் குவைத் மக்கள். இதன் ஒரு பகுதியாக ஓங்கி உயர்ந்த தனியார் மற்றும் அரசு கவர்னரேட், முனிசிபாலிடி கட்டடங்கள் குவைதின் மூவர்ண தேசிய கொடியை மின்விளக்குகளால் கம்பீரமாக ஜொலித்து கொண்டிருக்க செய்கின்றன.

Thursday, February 23, 2012

இம்சை அரசன் 2012 ம் புலிகேசி !



இந்தியாவில் விவசாயம் அழிந்து வருகிறது. நூறு கோடிக்கும் அதிகமான மக்களின் உணவு தேவையை வரும் காலங்களில் நாம் எப்படி சம்மாளிக்கப் போகிறோம் என்கிற கேள்வி எழுத்துள்ளது. ஒருபுறம் விவசாயத்திற்கு தேவையான போதிய மழை இல்லாதது மறுபுறம் உரம், விதை போன்றவற்றின் விலை உயர்வால் தவிக்கும் விவசாயிகள் குடும்பத்தோடுதற்கொலை செய்து கொள்வது அன்றாடம் செய்தி ஆகிவிட்டது. இதுவரை உரங்களின் விலையை கட்டுபடுத்தி வந்த மத்திய அரசு இனி அதை உரகம்பெனிகளே தீர்மானித்து கொள்ளட்டும் என்று விட்டுவிட்டது. இதை தொடர்ந்து உர நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கி கொண்டு விலைகளை கண்டபடி உயர்த்தி விவசாயிகளின் வயிற்றில் அடிக்கின்றனர்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி ஆகும் உரங்களை பதுக்கல் வியாபாரிகள் கள்ளச்சந்தையில் விற்று கொள்ளை லாபம் அடிக்கின்றனர். இந்தியாவில் உற்பத்தியாகும் உரங்களுக்கு மத்திய அரசு ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் மானியமாக வழங்குகிறது. அதையும் அதிக உற்பத்தி செய்ததாக போலி ஆவணங்களை காட்டி கொள்ளை அடிக்கின்றன இந்த உர நிறுவனங்கள்.

Tuesday, February 21, 2012

டில்லியில் பாகிஸ்தான் உளவாளி.. “தமாஷ் பண்ணாதிங்க சாப்!”


இந்தியாவில் 20 வருடங்களாக வாழ்ந்துவரும் நிலையில், பாகிஸ்தானிய உளவாளி என்ற குற்றச்சாட்டில் 39 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அறிவித்துள்ளது டில்லி போலீஸ். (அப்படியானால் இவர் 19 வயதில் இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும்) இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய ஆவணங்கள் இவரிடம் இருந்து கைப்பற்றப் பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ளவரின் பெயர், காம்ரான் அக்பர். கடந்த 1992-ல் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த அக்பர், கடந்த 20 ஆண்டுகளாக கொல்கத்தாவில் வசித்து வருகிறார். 2009-ல் இந்தியப் பெண் ஒருவரையும் மணந்து கொண்டார். டில்லி போலீஸ் வைத்திருக்கும் தகவல்களின்படி, அக்பர் இந்தியாவுக்கு வந்தது, ஒரு பாகிஸ்தானி பாஸ்போர்ட்டில். தரை மார்க்கமாக அத்தாரி எல்லைப் பகுதியைக் கடந்து இந்தியாவுக்குள் வந்த இவர், கொல்கத்தாவில் தமது உறவினர் ஒருவருடன் தங்கியிருக்கிறார். சுமார் 4 ஆண்டுகள் இந்தியாவில் வசித்த நிலையில், ஆசிஃப் ஹொசேன் என்ற பெயரில் இந்திய பாஸ்போர்ட் ஒன்றுக்கு விண்ணப்பித்தார். எதுவித சிக்கலும் இல்லாமல் பாஸ்போர்ட்டையும் பெற்றிருக்கிறார்.

Saturday, February 18, 2012

பிசுபிசுத்துப்போன பா.ஜ.கவின் வாக்குறுதிகள்


வழக்கம் போல் ஒவ்வொரு தேர்தலின் போதும் பா.ஜ.க விடுக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இந்த முறையும் உத்திர பிரதேச தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது.

உத்திர பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் அயோத்தியில் இராமர் கோயிலை கட்டுவதே பா.ஜ.கவின் லட்சியம் என்று கூறியது. ஆனால் இந்த முறை பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கைகள் இந்துக்களிடம் வரவேற்பை பெறவில்லை என்பதும் அவர்கள் பா.ஜ.கவை ஆதரிக்க தயாரக இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. இதற்கு காரணம் இன்று வாக்களிப்பவர்களில் 60% இளைஞர்களாக இருக்கின்றார்கள். கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றிலேயே ஆர்வம் காட்டும் அவர்கள் இது போன்று மதத்தின் பெயரால் பிளவை ஏற்படுத்துவதை அவர்கள் விரும்புவதில்லை என டாக்டர் முஹம்மது ஆரிஃப் தெரிவித்தார்.

Tuesday, February 14, 2012

கோலிவுட் முதல் பாலிவுட் வரை கொலையை கற்றுக் கொடுக்கும் கொடூர சினிமா படங்கள் !


அக்னிபத் இந்திப் படத்தை பார்த்து, ஆசிரியை உமா மகேஸ்வரியை கொலை செய்ய கற்றுக்கொண்டேன். தமிழகத்தையே உலுக்கி எடுத்த ஆசிரியை கொலை வழக்கில் கைதான 9-ம் வகுப்பு மாணவன் அளித்த வாக்குமூலம் இது. பருத்தி வீரன் சினிமாவில் பெண் சாராய வியாபாரியின் முகத்தை சாக்கு பையில் மூடி கழுத்தை அறுத்து கொலை செய்யும் காட்சியை பார்த்தோம். அதைப் போலவே மகளிர் குழு தலைவியை துடிக்க துடிக்க கொன்றோம். மாங்காட்டில் கடந்த மாதம் நடந்த சுய உதவி குழு பெண் அம்பிகா கொலையில் கைதான கொலையாளிகள் இப்படி வாக்குமூலம் அளித்தனர்.

காதலர் தினம் கார்பெரெட் முதலாளிகள் தினம் !



காதல் ஒரு பருவகால உந்தல். பருவ வயதை அடைந்த ஆண்,பெண் ஒருவேர்மேல் ஒருவர் கொள்ளும் ஈர்ப்பே காதல் ஆகும்.ஒருவர் மேல் காதல் உண்டாக அழகு என்கிற புறதோற்றங்களோ அல்லது அறிவு சார்ந்த கல்வி, வீரம், விவேகம், சமூக சிந்தனைகள் போன்ற அக தோற்றங்களோ ஒரு காரணமாக இருக்கலாம். தனது மனதுக்கு  பிடித்தவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் காதலின் கடைசி இலக்காக இருக்கிறது. அதாவது காதல் என்பதின் கடைசி இலக்கு திருமணமே. ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு காலத்தில், காதல் அனுபவம் வந்து சென்றிருக்கும். அது பருவ வயதில் ஏற்ப்படும் சுகமான அனுபவம். காதல் என்றால் செல்போன் காதல் என்று நினைத்து விடாதீர்கள். நாம் பருவ வயதை கடந்து வரும்போது யாரையாவது நமது மனதுக்கு பிடிக்கும்.

Saturday, February 11, 2012

ஊழலுக்கு புரோக்கர் வேலை செய்யும் சோ !


ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக செயல்பட்டு வருபவர் ஆச்சார்யார். இவரை கர்நாடக அரசின் தலைமை வழக்கறிஞராக கடந்த ஆகஸ்ட் மாதம் பாரதிய ஜனதா கட்சி நியமித்தது. 


இந்த நிலையில் அவர் அந்த பதவியில் இருந்து 08.02.2012 அன்று ராஜினாமா செய்தார். இது குறித்துஅவர் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் ’’ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் பதவியிலிருந்து விலகுமாறு கர்நாடக அரசு என்னை தொடர்ந்து வற்புறுத்தியது.

ஹலோ! நான் அயோத்தி ராமர் பேசுகிறேன் !



ரிங் ரிங் ..ஹலோ ... யாரு பேசுறது அத்வானியா? ஆமா நீங்க யாரு . நான்தான் ராமர் பேசுறேன். எந்த ராமரு! என்னை வைத்து கட்சி நடத்தி விட்டு என்னையே மறந்துட்டியா?  உன் பத்திரிகை பேட்டி பார்த்தேன் "வாழ்நாளில் ராமர் கோவில் கட்டுவது தான் என்  இலட்சியம்"  என்ற வார்த்தையை கேட்டு  மெய்மறந்து விட்டேன். ஏன்பா அயோத்தியாவில் மட்டும் ராமர் கோவில் கட்டினா போதுமா?  நாடாளுமன்றத்தில் ஒரே சண்டையும், கூப்பாடுமா இருக்குது.அந்த கட்டிடம் நமக்கு தேவையா? முதலில் அதை  இடித்து விட்டு ராமர் கோவில் கட்டுகாங்கிரஸ்காரங்க நம்ம ஆளுதான் அவர்களிடம் பேசு ஒத்துகொள்வார்கள். BJPக்கு எல்லாம் கட்சி அலுவலகம் தேவையா?  அதையெல்லாம் உடைத்து விட்டு கோவில் கட்டுங்கள்.



எந்த BJP அலுவுலகத்திலாவது  எனக்கு ஒரு கோவில் கட்டி இருக்கியா? நீயெல்லாம் ஒரு பக்தனா! எல்லாம் அரசியல்தானா. சரி மனு தர்மம் இருக்கும் போது எதுக்குப்பா அம்பேத்கர்  எழுதிவைத்த சட்ட புத்தகமெல்லாம். உயர்நீதி, உச்சநீதி மன்றம் என்று சொல்லிக்கிட்டு  ஒரே பிரச்சனை. அதை இடித்துவிட்டு கோவிலை கட்டு.

Thursday, December 15, 2011

இந்தியா விற்பனைக்கு.


ஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சந்தைகளில் ஒன்று... மதுக்கூர் சந்தை. ஒரு குடும்பத்துக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் கிடைக்கும். சாமான்கள் மிகத் தரமாகவும் விலை வெகு மலிவாகவும் இருக்கும். மதுக்கூர் சந்தையின் முக்கியமான அம்சம், கருவாடும் நல்லெண்ணெயும். ``அட... அந்த நல்லெண்ணெயும் கருவாடும் கூடிக் குழம்புக்குக் கொடுக்கும் ருசியே தனி`` என்பார்கள். தமிழ்நாட்டில் கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், கொல்லிமலை, பொள்ளாச்சி, வால்பாறை, தேனி, பாவூர்சத்திரம் என்று ஒவ்வொரு பகுதிக்கும் இப்படி ஒவ்வொரு சந்தையின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தச் சந்தை மரபு இன்று, நேற்றல்ல; பல நூற்றாண்டுகளாகத் தொடர்வது.

 பண்டைய தமிழக அரசர்கள் பத்துப் பதினைந்து கிராமங்களுக்கு மையமாக ஓர் ஊரைத் தேர்ந்தெடுத்து  பெரிய கோயில்களைக் கட்டினார்கள். எங்கெல்லாம் இப்படிப் பெரிய கோயில்களைக் கட்டினார்களோ, அங்கெல்லாம் அருகிலேயே சந்தைகளை அமைத்தார் கள். திருவிழாக்கள், அதையட்டிப் போடப்படும் திருவிழாக் கடைகள்... எல்லாமே சந்தை என்கிற அமைப்பை மக்களின் வாழ்வோடு பிணைக்கும் அம்சங்கள். தமிழகம் மட்டும் அல்ல; இந்தியா முழுக்க இந்த மரபு இருக்கிறது. இந்த மரபின் நீட்சியே இன்றைய கோயம்பேடு சந்தை முதல் தெருவோர மளிகைக் கடைகள் வரை.

Tuesday, November 22, 2011

தோல்வியை தழுவிய ஜனசேதனா ரத யாத்திரை!




pm race yatra
கராச்சியில் பிறந்து இந்தியாவில் குடியேறிய லால் கிருஷ்ணா அத்வானியின் பிரதமர் பதவி மீதான தீராத மோகத்தால் உருவான ஜன சேதனா யாத்திரை நமத்துப்போன பட்டாசு போல டெல்லியில் பிசுபிசுத்து போனதில் எவருக்கும் கவலை இருப்பதாக தெரியவில்லை. இந்த யாத்திரை தோல்வியை தழுவியதில் அதிகம் மகிழ்ச்சி அடைபவர்கள் அவரது கட்சியான பா.ஜ.கவை சார்ந்தவர்களே ஆவர்!
ஊழலுக்கு எதிரான மத்திய தர வர்க்கத்தினரிடையே வீசும் எதிர்ப்பு அலையை தீவிர வலதுசாரி ஹிந்துத்துவாவுக்கு சாதகமாக்கி மீண்டும் அதிகாரத்தின் ஏணிப் படியாக மாற்றுவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக அத்வானி ரதயாத்திரைக்கு கிளம்பினார். முன்பு இதே அத்வானி  நடத்திய ராம ரதயாத்திரையின் மூலம் சிறுபான்மை முஸ்லிம்களின் குருதியால் இந்திய தேசம் வன்முறைக் காடாக மாறியதை யாரும் மறந்துவிட முடியாது.
1990-ஆம் ஆண்டு அத்வானி  சோமநாதபுரத்திலிருந்து துவக்கி வைத்த முதல் யாத்திரை 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களின் படுகொலையுடன் முடிவடைந்தது. அவற்றுடன் ஒப்பிடுகையில் தற்போதைய ஊழல் எதிர்ப்பு ரத யாத்திரை அமைதியாக நடந்தது என கூறலாம். அதற்கு காரணம், ஆர்.எஸ்.எஸ்ஸின் வன்முறை மனோநிலையை கொண்ட பிரிவினர் இந்த யாத்திரைக்கு போதுமான ஆதரவை அளிக்காததே ஆகும்.
பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுத்துதான் அடிக்கடி வழியில் பஞ்சரான ரதயாத்திரைக்கு பா.ஜ.க உற்சாகம் அளித்தது. வெடிக்குண்டு கைப்பற்றப்பட்டதாக ஒரு சில செய்திகள் வெளியானதும், ஜெயலலிதாவின் ஒத்துழைப்புடன் ஒரு சில ‘பயங்கர….வாதிகள்(?)’  கைதுச் செய்யப்பட்டாலும் அதனால் எவ்வித பலனும் ஏற்படவில்லை.
டெல்லியில் ஜெயின் சகோதரர்களிடமிருந்து ஹவாலா பணத்தை கைப்பற்றிய நற்பெயரும் அத்வானிக்கு உண்டு. அன்று ஹவாலா மோசடியில் சிக்கியவர்கள் தேசிய தலைவர்கள் என்பதால் ஜே.கே.ஜெயினின் டைரிக் குறிப்பு ஆதாரமாக ஏற்றுக் கொள்ளபடவில்லை.
அத்வானியின் செல்வாக்கு கொடிக்கட்டி பறந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியின் போது பொதுச் சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்க்க தனியாக அமைச்சகம் ஒன்று துவங்கப்பட்டது. தலித்-சிறுபான்மை எதிர்ப்பாளரான அருண்சோரிதான் இத்துறைக்கு அமைச்சராக அதாவது இடைத்தரகராக செயல்பட்டார்.
கனிமொழியும், ஆ.ராசாவும் சிறையில் அடைக்கபடுவதற்கு காரணமான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் துவங்கியதும் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ ஆட்சியின் போதுதான். பாதுகாப்புத் துறையிலும், கார்கில் போரில் இறந்துபோன ராணுவ வீரர்களின் உடல்களை கொண்டுசெல்வதற்கு வாங்கிய சவப்பெட்டியிலும் கூட ஊழல் புரிந்து சாதனைப் படைத்த கட்சிதான் பா.ஜ.க. இத்தகைய புகழ்பெற்ற கட்சியின் முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன் லஞ்சமாக ஒரு கோடி ரூபாயை கைப்பற்றியதை டெஹல்கா தனது ரகசிய கேமராவில் பதிவுச் செய்தது.
குஜராத்தில் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திரமோடி பொதுச் சொத்துக்களை டாட்டாவுக்கும், அம்பானிக்கும் தாரை வார்த்துவிட்டு வளர்ச்சியின் நாயகனாக நடித்து வருகிறார்.
வடமாநிலங்களில் அத்வானி குளிரூட்டப்பட்ட ரதத்தில் ஊழலைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்டிக் கொண்டிருக்கும் வேளையில்தான் பா.ஜ.கவின் தென்னக ஹீரோ எடியூரப்பா நிலமோசடி வழக்கில் கைதுச் செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இதற்கு முன்னர் சட்டவிரோத சுரங்கத் தொழில் மூலமாக 16 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பீட்டை ஏற்படுத்தியதாக லோக ஆயுக்தா குற்றம் சாட்டிய ஜனார்த்தன ரெட்டி சி.பி.ஐயால் கைதுச் செய்யப்பட்டுள்ளார். உத்தராகண்டில் அம்மாநில பா.ஜ.க முதல்வர் ரமேஷ் பொக்ரியால் பதவி விலக நேர்ந்ததற்கு ஊழல்தான் காரணம். இந்நிலையில் பா.ஜ.க ஊழலை குறித்து பேசுவதே காமெடியாகும். திருடனை குறைகூறும் கொள்ளையர்களுக்கு சமமானதுதான் பா.ஜ.க.
அக்கட்சியில் பிரதமருக்கான ஆடையை தைத்து இஸ்திரி போட்டு கசங்காமல் காத்து வரும் நரேந்திர மோடியும், கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு உடலிலிருந்து ஊளைச் சதைகளை குறைத்து ஃபெய்ஸ் லிஃப்டிங் நடத்தி அழகனாக முயற்சிக்கும் நிதின் கட்கரியும், இளமையை இன்னமும் நாம் இழந்துவிடவில்லை என கருதும் முன்னாள் பல்கலைக்கழக பேராசிரியர் முரளி மனோகர் ஜோஷியும் எழுப்பும் சவால்களை சந்திக்க கூட ஜனசேதனா யாத்திரை அத்வானிக்கு உதவாது என்பதுதான் உண்மை.
அ.செய்யது அலீ.

Friday, October 21, 2011

மனதோடுமனதாய் – கருணையில்லா கஞ்சத்தனம்


manathodu_manathai1
யமனில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து வந்தார். அறுவடை காலங்களில் அவரது தோட்டத்தைச் சுற்றிலும் ஊர்க்காரர்கள் ஒன்று கூடுவார்கள். அந்தத் தோட்டத்திலிருந்து கிடைக்கும் கனி வர்க்கங்களில் கணிசமான ஒரு பகுதியை அந்த நல்ல மனிதர் ஏழைகளுக்குப் பிரித்துக் கொடுப்பார். இந்த அழகிய தர்மம் மூலம் அவருக்கு செல்வம் இன்னும் அதிகரிக்கவே செய்தது.
ஆனால் அவருடைய குடும்பத்தார் அதனைப் புரிந்து கொள்ளவில்லை. ஊர்க்காரர்களுக்கு இவர் அள்ளி இரைப்பது அனைத்தும் தமக்கு ஏற்படும் இழப்பாக அவர்கள் கருதினார்கள். தந்தையைப் பிள்ளைகள் எதிர்த்தார்கள். இருந்தாலும் அவருக்கு உதவிகளும் செய்து வந்தார்கள்.