Showing posts with label விமர்சனங்கள். Show all posts
Showing posts with label விமர்சனங்கள். Show all posts

Friday, August 24, 2012

ஃபாசிஸ்டுகளின் நவீன ஆயுதம்: ஸைபர் தாக்குதல்!

ஒரு சமூகத்தில் நன்றியறிதல்களும்,பரஸ்பர பாராட்டுகளும் குறைந்து கண்டன குரல்கள் பெருகினால் அது நிம்மதி இழந்த சமூகமாக மாறிவிடும். 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அப்படி ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அது கண்டிப்பாக சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களை தான் சாரும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை. 

சமீபத்தில் ஒரு சில விஷமிகளால் பரப்பப்பட்ட வதந்தி இந்தியாவையே உலுக்கியது.தென் மாநிலங்களில் வாழும் வட மாநிலத்தவர்களுக்கு முஸ்லிம்களால் ஆபத்து என்றும் அதற்கு சில பதிவுகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஆதாரமாக வைத்து சமூக வளைதளங்கள் மூலமாகவும், குறுஞ்செய்திகள் மூலமும், இன்டர்நெட் வழியாகவும் பரப்பிய செய்திகளால் வட மாநில மக்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கே இடம்பெயர்ந்த காட்சி பத்திரிக்கை வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பார்த்த எல்லோருடைய மனதிலும் இயல்பாகவே ஒரு கேள்வி எழுப்பியது இது ஜனநாயக நாடுதான? இது மத சார்பற்ற நாடுதான? 

Tuesday, April 3, 2012

மிஞ்சியது ஏமாற்றமே!!



வழக்கத்திற்கு மாறாக அன்று நான் மிகவும் குழம்பிய நிலையில் என்னுடைய அலுவலக பணிகளை செய்து கொண்டிருந்தேன். அந்த குழப்பத்திற்கான காரணத்தை யாரிடமாவது சொல்லவேண்டும் என்று என்னுடய மனம் எண்ணியது. மதிய இடைவேளை அப்போது. என்னுடைய நண்பன் அமீர் எனதருகில் வந்து "நீ ஏதோ குழம்பிய நிலையில் உள்ளாய். அதற்கான காரணம் என்ன?" என்று வினவினான்.


எனக்கோ ஒரு ஆறுதல் வந்தது போல, "ஆம். நானும் காலையில் தினசரிகளை புரட்டிய பிறகே என்னுடைய அலுவல்களை தொடங்கினேன். இன்றைய ஒரு செய்தி என்னை மிகவும் குழம்பிய நிலைக்கு கொன்டு சென்றுவிட்டது. அதுதான் ராணுவத்தில் நடந்த ஊழலை பற்றி ராணுவ தளபதி வி.பி. சிங் அளித்த பேட்டி" என்றேன்.

Monday, March 26, 2012

நானும் வறுமைக் கோடும்


காலை 07:30 மணியளவில் புழுக்கம் குறைந்த, மிதமான சூரிய வெளிச்சத்துடன் தொடர்ந்த பொழுதில் பசிப்பதாய் உணர்கிறேன். இறைவனின் உதவியால் நான் ஒரு நாளும் பசியால் வாடியிருந்ததில்லை. உடலின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உணவருந்த அமர்ந்தேன். என் இந்திய தேசத்தில் திட்ட கமிஷன் என்ற அறிவாளிகளின் கூடாரத்திலிருந்து வெளியான வறுமைக் கோட்டிற்கான வரையறை மனதில் ஆடியது. நாளொன்றுக்கு ரூ. 28.65 (மாதமொன்றிற்கு ரூ. 859.60) சம்பாதிக்கும் (அ) செலவழிக்கும் திராணி உடைய யாரும் வறுமை கோட்டிற்குள் வர மாட்டார்கள் என்ற அதிர்ச்சியான அறிவிப்பை பற்றியே மனம் ஓடியது. 

இந்த சென்னை முழுவதும் தேடினாலும் இப்படி ஒரு ஏழைத் தமிழனை (அ) இந்தியனைக் காண முடியுமா? வறுமைக் கோட்டிற்கான இன்றைய சமன்பாடு இதுவென்றால், கடந்த 5 வருடங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கூறியிருப்பதற்கு பயன்படுத்தப் பட்ட வாய்ப்பாடு என்னவாக இருக்கும்?

Sunday, February 19, 2012

டில்லி வெடிகுண்டு: ஏன் ‘இவர்களே’ வெடிக்க வைத்திருக்க முடியாது?


வெளிநாடுகளில் இஸ்ரேலிய இலக்குகள் மீது குண்டு வெடிப்புத் தாக்குதல்கள் நடப்பதற்கும், தமது அமைப்புக்கும் எந்த தொடர்பும் கிடையாது என ஹெஸ்பொல்லா அமைப்பு மறுத்துள்ளது.
இந்தியா, தாய்லாந்து, ஜேர்ஜியா ஆகிய நாடுகளில் இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. இந்த தாக்குதல்களின் பின்னணியில் ஈரானிய அரசும், ஹெஸ்பொல்லா அமைப்பும் உள்ளதாக இஸ்ரேல் கூறியிருந்தது. ஹெஸ்பொல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, “எமக்கும் இந்தத் தாக்குதல்களுக்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்று உங்களுக்கு நான் உறுதிகூற விரும்புகிறேன்” என்று தமது ஆதரவாளர்களுக்கு வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Tuesday, February 7, 2012

அரசியலின் பெயரில் விஷமப் பிரச்சாரம்!


உலக அரங்கில் மதச்சார்பற்ற நாடு இந்தியா மட்டும் தான் என்று நாம் சொல்லும் போது நம்மை அறியாமலேயே நம்மிடம் உணர்வுபூர்வமான தேசப்பற்று வெளிப்படும், அதை நாம் உண்மையான தேசப்பற்று என்று கூட கூறலாம்.  

மேலும் அதற்க்கு எந்தவிதமான மதமும், ஜாதியும் தடையல்ல என்பது நம்முடைய தேசப்பற்றின் அடையாளம் என்று கூடசொல்லலாம். ஆனால் இந்தியாவை இந்துராஷ்ட்ரமாக அறிவிக்க வேண்டும் என்ற தங்களின் கொள்கையை உறுதி செய்யும் விதமாக உ.பி தேர்தல் பிரச்சாரத்தின் போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் தான் எனது லட்சியம் நிறைவேறும் என்று பாபர் மஸ்ஜித் இடிப்பு புகழ் அத்வானி கூறியுள்ளது இந்தியாவின் மதசார்பற்ற கொள்கையை தகர்தெரிவதாகத்தான் உள்ளது.