Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Wednesday, September 12, 2012

கர்நாடகா : குர்-ஆன் ஓதி முடித்த "அன்ன பூரணி"


ஹுப்ளி, பஞ்சாரா தெருவை சேர்ந்த சுரேஷ்-ராஜேஸ்வரி தம்பதியினரின் மகள் அன்னபூரணி, திருமறை குர்-ஆன் முழுவதையும், அதன் மூல மொழியான அரபியில் ஓதி முடித்துள்ளார்.
ஹுப்ளி "விமன்ஸ் பாலிடெக் கல்லூரி"யில் படித்து வரும் அன்னபூரணிக்கு, சிறு வயது முதல், தானும் முஸ்லிம் குழந்தைகளைப்போல குர்-ஆன் ஓத வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டு, அதை தனது தாயிடம் கூறியுள்ளார். அதை தொடர்ந்து, அன்னபூரணி குடும்பத்தினர் "காசின் பாஷா-குல்ஜார் பானு தம்பதி"களை அணுகியுள்ளனர்.

அவர்களது ஏற்பாட்டின் பேரில், பள்ளிவாசல் இமாமின் மனைவி பீபிஜான், அன்னபூரணிக்கு குர்-ஆன் (பார்த்து) ஓத பயிற்சி கொடுத்து வந்தார். கல்லூரி படிப்புக்கிடையிலும், தினமும் பிற முஸ்லிம் குழந்தைகளுடன் சேர்ந்து, குர்-ஆன் ஓதிவந்த அன்ன பூரணிக்கு, குர்-ஆன் முழுமையாக ஓதி முடிக்க, 4 ஆண்டுகளானது.

Monday, July 16, 2012

ரமலானை வரவேற்போம்!!!

புனிதமும்,கண்ணியமும்,ரஹ்மத்தும் நிறைந்த மாதமான ரமலான் நம்மை நெருங்கி கொண்டிருக்கிறது. ஈமான் கொண்ட அனைவரும் இந்த மாதத்தை எதிர்நோக்கியவாறு தங்களுடைய 5 கடமைகளில் ஒன்றான நோன்பை நிறைவேற்றி அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைய ஆவலாகவும், சந்தோஷமாகவும் உள்ளனர். 


ஏனென்றால் நோன்பு முஸ்லிம்களின் உள்ளங்களிலும்,வாழ்க்கையிலும் நல்லதொரு மாற்றங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அடுத்து வருகின்ற பதினோரு மாதங்களுக்குகான ஒரு பயிர்ச்சியாகவும் உள்ளது. மேலும் முஸ்லிம்களுக்கு இது ஒரு வசந்த காலம் என்று கூறும் அளவுக்கு நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன.


இறைவனை நினைவு கூர்தல், தர்மம் செய்தல், நோன்பு நோற்றல், ஐவேளை தொழுதல், இரவு நேர வணக்கங்கள், சொல்-செயல்-எண்ணங்கள் என்று அனைத்திலும் இறையச்சத்தை பேணுதல் என்று ஒரு அமைதியான, நிம்மதியான சூழலை ரமலான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது. ரமலானின் முழு பலனையும் அடைய வேண்டும் என்பதில் எந்த ஒரு முஸ்லீமுக்கும் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

Sunday, May 13, 2012

சென்னையில் நாளை மறுநாள் குலுக்கல் மூலம் ஹஜ் பயணிகள் மூலம் தேர்வு


சென்னை: 2012-ம் ஆண்டுக்கான ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோரைத் தேர்வு செய்ய நாளை மறுநாள் தமிழ்நாடு மாநில ஹஜ் குழு குலுக்கல் நடத்த உள்ளது.
ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக தமிழகத்தைச் சேர்ந்த 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால், தமிழ்நாட்டிற்கான ஒதுக்கீடு சுமார் 3000 மட்டுமே. இதனால் மத்திய ஹஜ் குழுவின் அறிவுறுத்தலின் படி நாளை மறுநாள் குறா எனப்படும் குலுக்கல் நடைபெற உள்ளது.. 

சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி வளாகத்தில் ஆனைக்கார் அப்துல் ஷூக்கர் கலையரங்கத்தில் நாளை மறுநாள் மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது.

Friday, May 11, 2012

பன்றிக் கொழுப்பு.. உஷார்....................


கடந்த மாதத்தில் இணையத்தில் தமிழ் சகோதரர்களுக்கு மத்தியில் உலா வந்த மின்னஞ்சல் செய்தி சற்று அதிர்ச்சியளிக்கு முகமாகவே இருந்தது. அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த செய்தி:
அதாவது ஷேக் சாஹிப் என்னும் சகோதரர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிகால் (Pegal)என்ற நகரத்தில் உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றும் துறை தரத்தை நிர்ணயம் செய்யும் துறை (Quality Control) என்பதால் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஆய்வு செய்து அதன் தரத்தை பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.

எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் தயாரிப்பை விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தும் போது உணவுப் பொருளாக இருந்தாலும், மருந்துப் பொருளாக இருந்தாலும் அதை சோதனைக்குட்படுத்திய பின்பே அறிமுகப்படுத்தும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனையில் விற்பனைக்கு வரவிருக்கும் உணவு மற்றும் மருந்துகளின் கலவையை (ingredients) சோதனை செய்து அதை பிரான்ஸ் நாட்டின் உணவு தரக்கட்டுப்பாடு மையம் அங்கீகாரம் அளித்தபின் மட்டுமே விற்பனைக்காக வெளிவரும். உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தில் உணவுப்பொருட்களை பிரித்து அதன் கலவையை (ingredients) ஆய்வு செய்வார்கள். இந்த கலவைகள் சிலவற்றிற்கு அறிவியல் பெயர்களும் இருக்கும், சிலவற்றிற்கு குறியீட்டுப் பெயர்களும் இருக்கும். எடுத்துக்காட்டாக E-904, E-141 என்று.

Thursday, April 19, 2012

எங்கே சென்றுக்கொண்டிருக்கிறது முஸ்லிம் சமூகம்?


கடப்பா : ஏப்ரல் 18, ஒரு பக்கம் முஸ்லிம்களுக்கு எதிராக, வதந்திகளை பரப்பி - வன்முறைகளை தூண்டி, முஸ்லிம்களின் உயிருக்கும் உடமைக்கும் சேதம் ஏற்படுத்தப்படுறது.

மறுபக்கம், இஸ்லாத்தின் அடிப்படைகளையே தெரியாமல், ஓரிறை கொள்கைகளை தெரியாமல், பல முஸ்லிம்கள், அறியாமையில் வாழ்ந்துக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்லுவது? தெலுங்கு வருடப்பிறப்பை, ஆந்திராவில் "உகாதி பண்டிகை" என்று, ஹிந்து சமூக மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Tuesday, April 3, 2012

குவைதில் இஸ்லாத்தை ஏற்றுகொண்ட மகாராஜன்

குவைத் சிட்டி: குவைதில் பல்வேறு சமூக நல பணிகளை செய்து வரும் குவைத் இந்தியா ஃபிராடர்நிட்டி  ஃபாரம் சார்பாக அதன் தன்னார்வ தொண்டர்கள் மூலம் செய்து வரும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்து சொல்லும் தாவா பணி கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. மகபுல்லா, அபுகலிபாஹ், மினாப்துல்லாஹ் போன்ற இடங்களில் நடைபெற்றது. 

Monday, February 27, 2012

முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு !


The text, reportedly worth $22 million, is said to contain Jesus’ prediction of the Prophet’s coming but was suppressed by the Christian Church for years.அங்காரா:இஸ்லாத்தின் இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து இயேசு(ஈஸா நபி) முன்னறிவிப்புச் செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில் கண்டெடுக்கப்பட்டது. பர்ணபாஸின் சுவிசேஷம் என்று அழைக்கப்படும் இந்த நூல் 12 ஆண்டுகளாக துருக்கியில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. பைபிளில் கூறப்படும் பர்ணபாஸ் இயேசுவின் முக்கிய சீடராவார்.

Thursday, February 16, 2012

இஸ்லாத்தை ஏற்ற நடிகை பூஜா மாலாவை நோகடிக்கும் கும்பல் !



நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகையும்,பாடகருமான "பூஜா லாமா" சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவினார் அல்ஹம்துலில்லாஹ்.இவருடைய வயது 28 என்பதும் இவர் புத்த குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தனது துபாய் கத்தார் பயணத்தை முடித்து விட்டு திரும்பும்போது காத்மாண்டு என்ற இடத்தில இஸ்லாத்தை தழுவினார். 

பேட்டி ஒன்றில், இஸ்லாத்தை தழுவிய பிறகு பூஜா லாமா என்ற தனது பெயரை "ஆம்னா ஃபாரூகி" என்று மாற்றிக் கொண்டதாக கூறினார்.மேலும்"இஸ்லாம் மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் மனித நேயத்தின் அடிப்படையில் தீர்வு அளிக்கிறது.இஸ்லாத்தின் அழகு தனக்கு நேர் வழி காண்பித்தது இல்லையெனில் நான் இருளிலேயே இருந்திருப்பேன்.இஸ்லாம் அமைதியான மதம் என்பதை நான் உலகுக்கு கூற விரும்புகிறேன்." என்பதாக கூறினார்.

Friday, January 13, 2012

குவைத்: மாற்று மத நண்பர்களை சந்திக்கும் நிகழ்ச்சி.

குவைத் சிட்டி: குவைதில் பல்வேறு சமூக நல பணிகளை செய்து வரும் குவைத் இந்தியா ஃபிராடர்நிட்டி ஃபாரம் சார்பாக அதன் தன்னார்வ தொண்டர்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்து சொல்லும் தாவா பணி கடந்த டிசம்பர் மாத இறுதியில் குவைதில் உள்ள பல்வேறு இடங்களில் நடைபெற்றது. 

பிரபல பாடகர் ஜோஸ் கெமிலன் புனித இஸ்லாத்தை ஏற்றார்


எல்லாப் புகழும் இறைவனுக்கே! 

ஆம்.. வழக்கமாக இசைத் துறையில் மற்றுமொரு புயல் வீசத் தொடங்கியுள்ளது. ஆனால் இவரது இந்த முடிவை இவரது மனைவி டேனிலா விரும்பவில்லை. கிருத்தவத்தை விட்டு இஸ்லாத்தை தேர்ந்தெடுத்த இவரோடு தன்னால் வாழ முடியாது என்று விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடியிருக்கிறார்.

Saturday, November 19, 2011

வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை!



ஒரு  வாலிபன் ஒரு பெண்னை  திருமணம் செய்வதற்காக வேண்டி இஸ்திஹாரா தொழுகையை தொழுகின்றான்;  பின்னர் திருமணத்துக்காக    தயாராகின்றான்;  அப்போது     அவனது சகோதரன்  அப்பெண்னை  திருமணம்  முடிப்பதை விட்டும் அவனைத் தடுக்கின்றான். வேறு குடும்பத்தில் பெண் பார்க்க வேண்டுகிறான்.  அந்த வாலிபனோ, தான் பார்த்த பெண்னை மணம் முடிப்பதற்காக தனது சகோதரனை  கவரும் வகையில் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்;  ஆனால் அனைத்து முயற்சிகளும்  பயனளிக்கவில்லை.  இறுதியில்  வேறொரு பெண்னை மணக்கின்றான்.  குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பின்னர் அவ்வாலிபனுக்கு முதலாவது திருமணம்  பேசப்பட்ட அப்பெண் மரணிக்கின்றாள். தற்போது அவனுக்கு தான் தொழுத அந்த இஸ்திஹாரா தொழுகையில் முழுமையான திருப்தி ஏற்பட்டதோடு தன்னை தடுத்த தனது சகோதரனின் விருப்பமின்மை அவனுக்கு நல்லதாக அமைந்தது.


ஒரு வாலிபன் தொழிற்சாலை ஒன்றில் காலை மாலை என இரண்டு நேரங்களிலும் வேலை பார்த்து வந்தான்;  ஆனால் அவனது சம்பளமோ தனது அடிப்படைத் தேவையைக்கூட நிறைவேற்ற  போதாது; அல்லாஹ் அவனுக்கு நேரான வழியைக் காட்டினான்;  அல்- குர்ஆன் மனனப்பிரிவில் சேர்ந்தான்;  அத்தோடு பள்ளியில் நடக்கக்கூடிய மார்க்க வகுப்புக்களிலும், மார்க்க சொற்பொழிவுகளிலும் தவறாமல் கலந்து கொள்பவனாக இருந்தான். என்றாலும் அவனது தொழிலோ அதற்குத் தடையாகவே இருந்து வந்தது. இதனால், தான் மனைவி மக்களுடன் வீட்டில் இருப்பதற்கும் வீட்டின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கும்  மிக மிக குறைவாகவே  அவனுக்கு நேரம் கிடைத்தது.

ஒரு நாள் அறிஞர் ஒருவரிடம் சென்று, தனது கஷ்டத்தை, முறைப்பாட்டை முன் வைக்கின்றான்.  அவர் சில அறிவுரைகளைக் கூறினார். அன்றிலிருந்து அந்த வேலையை வெறுத்தவனாக  தான் அல்-குர்ஆனையும் கற்று, மார்க்க வகுப்புக்களிலும் கலந்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கோடு வேறொரு வேலையை தேடுகிறான். ஆனாலும் எங்கு தான் செல்ல? பின்னர் மார்க்க அறிஞர் அவனை பார்த்து,  நன்மையை, தனது தேவையை வேண்டி தொழும்  தொழுகையைப் பற்றி (இஸ்திகாரா தொழுகை) தெரியுமா? என்று கேட்க, அவன் தெரியாது என்று கூறினான். பின்னர் அதனை கற்றுக் கொடுத்தார். அவன் உடனே இஸ்திகாரா தொழுகையைத் தொழுதுவிட்டு இறைவன் பால் நம்பிக்கை வைத்தவனாக பிரார்திக்கின்றான். பின்னர் முயற்ச்சி செய்து ஒரு வேலையை பெற்றுக் கொள்கின்றான்.