Thursday, August 30, 2012

அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு : குஜராத் குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை!

மும்பை தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து கசாப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

அஜ்மல் கசாப்புக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை சரிதான், என்று கூறி அதனை உறுதி செய்ததோடு, தூக்குத் தண்டனையை எதிர்த்து கசாப் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

உலக அளவில் வளரும் நாடுகளின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டும்: அணிசேரா நாடுகளின் மாநாட்டில் மன்மோகன்சிங்

 Voice Developing Nations Should Increase
டெஹ்ரான்: வளர்ந்து வரும் நாடுகளின் குரல் உலகளவில் ஓங்கி ஒலிக்க வேண்டும் என்று அணிசேரா நாடுகளின் மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இன்று தொடங்கிய அணிசேரா நாடுகளின் மாநாட்டில் மன்மோகன்சிங் பேசியதாவது:
அணிசேரா நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஏற்க இருக்கும் ஈரானுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும். உலகத்தில் அமைதி, பொருளாதார நிலை, பாதுகாப்புத் தன்மை, மேம்பாடு என அனைத்திலும் அணிசேரா நாடுகளின் முக்கியத்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறிவரும் உலகச் சூழலில் அணிசேரா நாடுகள் அமைப்பின் தேவை அவசியமானதாக இருக்கிறது. மேற்கு ஆசியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வரவேற்கத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா ஆதரிக்கிறது. இப்படியான மாற்றங்களில் அன்னிய சக்திகளின் தலையீடு இருக்கக் கூடாது.

Tuesday, August 28, 2012

செவ்வாய் கிரகத்திலிருந்து மனிதக் குரலை அனுப்பிய கியூரியாசிட்டி

 Mars Rover Sends Back Human Voice Recording
பஸடேனா (கலிபோர்னியா): செவ்வாய் கிரகத்தில் முதல் மனிதக் குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூமியிலிருந்து பதிவு செய்து அனுப்பப்பட்ட இந்தக் குரல், செவ்வாய்கிரகத்திலிருந்து நாசாவுக்குத் திரும்பியுள்ளது.
இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் முதல் சுவடு குரல் மூலம் பதிவாகியுள்ளது.
க்யூரியாசிட்டி தனது டெலிபோட்டோ கேமிராவில் எடுத்து அனுப்பியுள்ள புதிய படத்துடன் இந்த குரலையும் நாசா வெளியிட்டுள்ளது.

ஏசி காரில் தூக்கம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்?


ஏசி காரில் நீண்ட நேரம் தூங்கும்போது கேபினுக்குள் கார்பன் மோனாக்சைடு வாயு பரவுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இந்த வாயு உயிருக்கு ஆபத்தை விளைக்கும் என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு மட்டுமே காரை பயன்படுத்துவதில்லை. சிலருக்கு பொழுதுபோக்கு இடம். சிலருக்கு மனதையும், உடலையும் ரிலாக்ஸ் செய்யும் இடமாக பயன்படுகிறது.
இன்னும் சிலர் அலுவலக இடைவேளையில் காருக்குள் ஏசியை ஆன்செய்துவிட்டு ஒரு தூக்கம் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும், நீண்ட தூரம் செல்லும்போது களைப்பை போக்கிக் கொள்ள காரை ஓரங்கட்டிவிட்டு ஒரு தூக்கத்தை போட்டு விட்டு செல்வோரும் இருக்கின்றனர்.

Sunday, August 26, 2012

1992ல் "பாபரி மஸ்ஜித்" இடிக்கப்பட்டது!...... 2012 ல் "அக்பரி மஸ்ஜித்" இடிக்கப்படுகிறது!!

உயர்ஜாதி இந்துக்குக்களால் 1992ல் அயோத்தியில் "பாபரி பள்ளிவாசல்" இடிக்கப்பட்டதென்றால்,  2012ல் டெல்லியில் உள்ள "அக்பரி பள்ளிவாசலை" இடித்து தரைமட்டமாக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மசூதி இடிக்கப்பட்டால் சட்டம் ஒழுங்கு நிலை சீர்கெடும் என்று போலீஸ் எடுத்துக்கூறியும், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் சஞ்சய்கிஷன் மற்றும் ராஜீவ் "எதை பற்றியும் தங்களுக்கு கவலை இல்லை, எப்பாடு பட்டாகிலும் சட்டம் நிலை நாட்டப்படவேண்டும்" என்று உத்தரவிட்டனர்.  இது பற்றிய விரிவான செய்தியாவது: 

டெல்லியில் "மெட்ரோ ரயில்" பணிகளுக்காக பல இடங்களில் பூமிக்கடியில் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தபோது, டெல்லி செங்கோட்டை (லால் கிலா) அருகில் பூமிக்கடியில் புதையுண்டு - சிதிலமடைந்து இருந்த முழுமையான பள்ளிவாசல் கட்டிட இடிபாடுகள் கண்டெடுக்கப்பட்டன. 

போலீசாரின் தடியடி, கண்ணீர்புகை குண்டு வீச்சால் டெல்லி வீதிகளில் சிதறி ஓடிய அன்னா ஹசாரே கோஷ்டி

 Arvind Kejriwal Defiant Calls Both Congress Bjp Threats டெல்லி: நிலக்கரி சுரங்க ஊழல் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் பாஜக தலைவர் நிதின் கத்காரி ஆகியோரது வீடுகளை டெல்லியில் முற்றுகையிட முயன்ற அன்னா ஹசாரே குழுவினர் மீது போலீசார் தடியடி நடத்தி , கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டியடித்தனர்.
டெல்லியில் இன்று காலை பிரதமர் மன்மோகன்சிங்கை கெஜிர்வால் தலைமையில் ஒரு குழுவினரும் சோனியா வீட்டை மனிஷ் சிஷோடியா,விஸ்வாஸ் தலைமையிலான குழுவினரும் பாஜக தலைவர் நிதின் கத்காரிவீட்டை சஞ்சய்சிங் தலைமையிலான குழுவினரும் முற்றுகையிட ஒன்று திரண்டனர். டெல்லியில் ஏற்கெனவே உஷாராக இருந்த போலீசார் அன்னா குழுவைச் சேர்ந்த அனைவரையும் கூண்டோடு தடுத்து வைத்து அப்புறப்படுத்தினர். அனைவரும் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.

Saturday, August 25, 2012

மு.க.ஸ்டாலின்,திருமாவளவன் உட்பட அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் கலந்து கொண்ட பிரமாண்ட பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் இயக்கமாக எஸ்.டி.பி.ஐ கட்சி இருந்து வருவது பாராட்டுக்குரியது என்று தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின்(எஸ்.டி.பி.ஐ) சார்பாக நேற்றைய தினம் இரவு சென்னை பெரியார் திடலில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் எஸ்.எம்.ரஃபீக் அஹ்மத், துணைத் தலைவர் ஏ.பிலால் ஹாஜியார், செயலாளர்கள் கே.செய்யது இப்ராஹீம், ஜி.அப்துல் ஸத்தார், வி.எம்.அபூதாஹிர், ஏ.செய்யது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

பாப்புலர் ப்ரண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் முஹமது யூசுப் காவல் துறை அதிகாரிகள் மீது தொடுத்த வழக்கில் நீதிமன்றம் பிறபித்த உத்தரவு

Friday, August 24, 2012

ஃபாசிஸ்டுகளின் நவீன ஆயுதம்: ஸைபர் தாக்குதல்!

ஒரு சமூகத்தில் நன்றியறிதல்களும்,பரஸ்பர பாராட்டுகளும் குறைந்து கண்டன குரல்கள் பெருகினால் அது நிம்மதி இழந்த சமூகமாக மாறிவிடும். 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் அப்படி ஒரு சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது என்றால் அது கண்டிப்பாக சிறுபான்மையினராக வாழும் முஸ்லிம்களை தான் சாரும் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருக்க வாய்ப்பில்லை. 

சமீபத்தில் ஒரு சில விஷமிகளால் பரப்பப்பட்ட வதந்தி இந்தியாவையே உலுக்கியது.தென் மாநிலங்களில் வாழும் வட மாநிலத்தவர்களுக்கு முஸ்லிம்களால் ஆபத்து என்றும் அதற்கு சில பதிவுகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஆதாரமாக வைத்து சமூக வளைதளங்கள் மூலமாகவும், குறுஞ்செய்திகள் மூலமும், இன்டர்நெட் வழியாகவும் பரப்பிய செய்திகளால் வட மாநில மக்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கே இடம்பெயர்ந்த காட்சி பத்திரிக்கை வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பார்த்த எல்லோருடைய மனதிலும் இயல்பாகவே ஒரு கேள்வி எழுப்பியது இது ஜனநாயக நாடுதான? இது மத சார்பற்ற நாடுதான? 

Wednesday, August 22, 2012

அசாஞ்சேவுக்கு ஆதரவு: இங்கிலாந்தில் அரசு இணையத்தளங்கள் முடக்கம்


விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் மீதான நடவடிக்கைகளை எதிர்க்கும் விதமாக இங்கிலாந்து அரசின் இணையத்தளங்களை மர்ம நபர்கள் முடக்கிப் போட்டுள்ளனர்.
விக்கிலீக்ஸ் இணைய தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரசு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியவர்.
அமெரிக்க அரசு அவர் மீது கடும் கோபத்துடன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில் சுவீடன் நாட்டில் 2 பெண்களை பலாத்காரம் செய்ததாக அசாஞ்ச் மீது வழக்கு தொடரப்பட்டது.

Tuesday, August 21, 2012

பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றது செல்லாது- உச்சநீதிமன்றத்தில் பி.ஏ.சங்மா வழக்கு

 Sangma Moves Sc Against Pranab S Election As President
டெல்லி: நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வலியுறுத்தி அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பி.ஏ.சங்மா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சார்பில் பிரணாப் முகர்ஜி நிறுத்தப்பட்டார். பாஜக, அதிமுக, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பி.ஏ.சங்மா போட்டியிட்டார். குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுக்களின் பரிசீலனையின் போதே பி.ஏ.சங்மா இத்தகைய ஆட்சேபத்தை தெரிவித்திருந்தார். இதையடுத்து வேட்புமனு பரிசீலனை ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டது.

Friday, August 17, 2012

ரூ.24,000 கோடி நிலத்தை ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.100க்கு குத்தகைக்கு தந்த மத்திய அரசு

 Cag Slams Development Fee Concessional Land Delhi
டெல்லி: ரூ. 24,000 கோடி மதிப்புள்ள நிலத்தை ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ. 100க்கு குத்தகைக்குக் கொடுத்துள்ளது மத்திய அரசு. இதன்மூலம் நாட்டுக்கு ரூ. 24,000 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கை அமைப்பான சிஏஜி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பான சிஏஜியின் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்து. அதில், டெல்லியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க ஜிஎம்ஆர் நிறுவனத்துக்கு 239 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 24,000 கோடியாகும். ஆனால், அதை ஆண்டுக்கு ரூ. 100க்கு குத்தகைக்குத் தந்துள்ளனர்.

2ஜி ஊழலை விஞ்சிய நிலக்கரி சுரங்க ஊழல்: அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு: சிஏஜி குற்றச்சாட்டு

 Coal Block Allotments Cag Final Report Puts Loss
டெல்லி: கடந்த 2004-2009ம் ஆண்டில் நாட்டின் 57 நிலக்கரி சுரங்கங்களை ஏலமே விடாமல் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கியதில் தேசத்துக்கு ரூ. 1.86 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கைத் துறை (Comptroller and Auditor-General- CAG) குற்றம் சாட்டியுள்ளது.
இது தொலைத் தொடர்புத்துறையில் நடந்த  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டால் ஏற்பட்ட ரூ. 1.76 லட்சம் கோடியை விட அதிகமாகும்.

Thursday, August 16, 2012

ராஜஸ்தான் : முஸ்லிம்களின் மீது "பஜ்ரங் தள்" தாக்குதல் -ஊரடங்கு உத்தரவு!


ராஜஸ்தானின் சரோஹி மாவட்டம் "கிருஷன் கஞ்" பகுதியில் நேற்று பள்ளிக்கூடம் ஒன்றில் தேசியக்கொடி ஏற்றிய பிறகு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
காலை 11.30 மணி அளவில் "கால்பந்து" விளையாட்டின் போது பந்து ஒருவரின் மீது பட்டது தொடர்பாக வாக்குவாதம் நடந்தது. அதை தொடர்ந்து "பஜ்ரங் தள்" அமைப்பின் கன்வீனர் "இந்தர் சிங்" தலைமையில் 500 பேர் கொண்ட கும்பல், பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் முஸ்லிம்களின் வீடுகளை குறிவைத்து தாக்க தொடங்கியது.  இதில் ஒரு வீடு முற்றாக சேதப்படுத்தப்பட்டது.

அமெரிக்க கடற்பகுதிக்குள் ரகசியமாக ஊடுருவி விட்டு திரும்பி வந்த ரஷ்ய நீர்மூழ்கி!

 Russian Attack Submarine Slipped Pa வாஷிங்டன்: ரஷ்யாவின் அணு சக்தியால் நீர்மூழ்கிக் கப்பல் அமெரிக்க கடற்படையின் அனைத்துக் கண்காணிப்புகளையும் மீறி அமெரிக்க கடற்பகுதியில் ஊடுருவி பல நாட்கள் உளவு பார்த்துவிட்டு திரும்பிச் சென்றுள்ளது.

ஏராளமான ஏவுகணைகளோடு அமெரிக்காவின் மெக்சிகோ வளைகுடா பகுதியில் உலா வந்த இந்த நீர்மூழ்கிக் கப்பல் அகுலா ரகத்தைச் சேர்ந்த தாக்குதல் கப்பலாகும்.

சுதந்திரதின வாழ்த்துச் செய்தி

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் மக்களுக்கு 65வது சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

அவர் தன்னுடைய சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் " நாட்டின் நிலவி வரும் பொருளாதார ஸ்திரத் தன்மையற்ற சூழல், விலைவாசி உயர்வால் கேள்விக்குறியாகிப்போன மக்களின் அன்றாட வாழ்க்கை, பொருளாதாரம் ஒரு சிலர்டிஅம் மட்டுமே தேங்குதல், கார்ப்பரேட் கம்பெனிகளின் முறைகேடான அதீத வளர்ச்சி, பழங்குடி, ஆதிவாசிகளின் வாழ்வாதாரங்கள்  சுரண்டல், நாட்டில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக நடத்தப்படும் அரச பயங்கரவாதம், வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்று வரும் இனமோதல், ஃபாசிஸ சக்திகளின் சதி என சுதந்திர இந்தியா தன்னுடைய சுதந்திர அடையாளத்தை இழக்கச் செய்வதற்கான முயற்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதைப் போன்ற ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நாடு இன்று உள்ளது.

Tuesday, August 14, 2012

சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்களின் அறிக்கை

Freedom parade
சுதந்திர தினத்தை கௌவுரவிக்கும் விதமாக தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட, ரத்தம் சிந்திய தியாகிகளை போற்றும் விதமாகவும் பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கும் விதமாகவும், போராடிப் பெற்றசுதந்திரத்தை பாதுகாக்க அனைத்துத் தரப்பு மக்களும் உறதிமொழி ஏற்கும் விதமாகவும், சுதந்திரப் போராட்ட நினைவலைகளை மக்கள் மனதில் பூத்துக்குலுங்கச் செய்யும் விதமாக தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தோம்.

அதன் ஒரு பகுதியாக கடந்த 2007 முதல் 2010 வரை மதுரை, கும்பகோணம் மற்றும் மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி வந்தோம். 2011 ஆகஸ்ட்ல் நெல்லையில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த தீர்மானித்திருந்தோம். ஆனால் சிறுபான்மை விரோதப் போக்குடன் செயல்பட்ட காவல்துறை நீதிமன்றத்தை அணுகக்கூட எங்களுக்கு வாய்ப்பு கிடைத்து விடாத அளவிற்கு கடைசி நேரத்தில் அனுமதியை ரத்து செய்தது.

ராம்தேவின் வருமான வரி மோசடிகள்.. நடவடிக்கைக்கு தயாராகும் மத்திய அரசு!

 Govt May Slap Tax Evasion Charges On Hostile Yoga Guru
டெல்லி: பாஜகவுடன் கைகோர்த்துக் கொண்டு நெருக்கடி கொடுத்து வரும் பாபா ராம்தேவுக்கு எதிராக வருமான வரித்துறையை களமிறக்கவுள்ளது மத்திய அரசு.
ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது தான், டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்திய ராம்தேவின் கூட்டத்தில் நள்ளிரவில் போலீசார் நுழைந்து லத்தியை சுழற்றி கூட்டத்தை கலைந்து ஓடச் செய்தனர்.
இந் நிலையில் கொஞ்ச காலம் சும்மா இருந்த ராம்தேவ், இப்போது அன்னா ஹசாரே தனது அமைப்பைக் கலைத்துவிட்டு இடத்தைக் காலி செய்ததும் அந்த இடத்தை முழுவதுமாக பிடிக்க முயன்று வருகிறார். முதலில் உண்ணாவிரதம் என்று கூறிவிட்டு திடீரென நாடாளுமன்றம் நோக்கி பேரணி என்று கூறிக் கொண்டு நேற்று டெல்லியையே அல்லோலப்படுத்தினார் ராம்தேவ்.

இதுதான் கடைசி அவகாசம்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ.தரப்புக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை


 Sc Notice Sasikala On Dmk Leader Plea
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதா தரப்பு பதிலளிக்கும் வகையில் 3 வாரங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த வழக்கின் விசாரணையை எப்படி இழுத்தடிக்க முடியுமோ அப்படி ஜெயலலிதா தரப்பு இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.