Friday, March 9, 2012

காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: மின்தடை நேரம் குறைப்பு


Wind Millசெங்கோட்டை: நெல்லை மாவட்டத்தில் காற்றாலை மின்உற்பத்தி துவங்கியுள்ளதால் மின்வெட்டு நேரம் வெகுவாகக் குறைந்துள்ளது. நெல்லை மாவட்ட மேற்கு பகுதிகளான செங்கோட்டை, சுரண்டை, ஆய்க்குடி, சேர்ந்தமரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான காற்றாலைகள் இயங்கி வருகின்றன. 


கடந்த ஒன்றரை மாதமாக போதிய அளவு காற்று இல்லாததால் இப்பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் காற்று வீசத் துவங்கியுள்ளதால் சுமார் 10 மணி நேரமாக இருந்த மி்ன்தடை திடீரென 2 மணி நேரமாகக் குறைந்துள்ளது.

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அதிமுகவிற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆதரவு


சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவரும், அகில இந்திய பொதுச் செயலாளருமான பாத்திமா முசாபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, சங்கரன்கோவில் தொகுதி இதுவரை அதிமுகவின் கோட்டையாகவும், காலம் சென்ற முன்னாள் அமைச்சர் கருப்பசாமியின் சொந்த வீடாகவும் உள்ளது. இந்த தொகுதியில் பல கட்சிகள் போட்டி போட்டாலும் இறுதி வெற்றி அதிமுகவுக்கு தான்.

Wednesday, March 7, 2012

சங்கரன்கோவில் இடைதேர்தல் மதிமுக விற்கு SDPI ஆதரவு

சங்கரன்கோவிலில் அமைச்சர் கருப்பசாமி இறந்ததால் அந்த தொகுதிக்கு இடைதேர்தல் அர்விக்கபட்டுள்ளது.இந்தே தேர்தலில் திமுக ,அதிமுக ,தேதிமக,மதிமுக உட்பட மேலும் பலர் பட்டியிடுகின்றனர்,இந்த தேர்தலில் SDPI யாருக்கு ஆதரவாக உள்ளது என்பதை தெரிய பலர் ஆர்வமாக இருந்தனர்,இந்த் ஆர்வத்தை போக்கும் பொருட்டு SDPI மாநில தலைவர் தெக்லான் பாக்கவி இன்று நெல்லையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.


அப்பொழுது அவர் கூறியதாவது இப்பொழுது உள்ள சூழ்நிலையில் பல மக்கள் பிரச்சினைகளை உறுதியுடன் போராடும் கட்சி மதிமுக மேலும் நம்மிடம் வந்து ஆதரவு கேட்டதன் அடிப்டையில் மதிமுக விற்கு SDPI ஆதரவு கொடுக்கிறது.

கிருஷ்ணகிரியில் குண்டு வெடிப்பு ஒருவர் பலி : ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் சதியா?


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே டீக்கடை அருகில் திடீரென குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். சீனிவாசன் என்பவர் ராணுவத்தில் பணியாற்றுபவர். இவர் சொந்த ஊர் ஊத்தங்கரை அருகே உள்ள மோட்டான் கொட்டாய். சீனிவாசன் தனது நண்பர் ஒருவருடன் நேற்று(திங்கள்கிழமை) மாலை ஊத்தங்கரை பகுதியில் உள்ள டீக்கடையில் குடித்துவிட்டு பணம் கொடுத்துவிட்டு திரும்பும் வேளையில் குண்டு வெடித்துள்ளது. இதில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். அவ்வேளையில் சீனிவாசனுடன் வந்த நபர் தப்பி ஓடிவிட்டார்..

உ.பி தேர்தல்:69 முஸ்லிம்கள் வெற்றி! 64 தொகுதிகளில் 2-வது இடம் !


At least 69 Muslim candidates won the election
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 69 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். 64 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள்2-வது இடத்தை பிடித்துள்ளனர். கடந்த தேர்தலை(2007) விட இந்த தடவை முஸ்லிம் வேட்பாளர்கள் 13 பேர் கூடுதலாக வெற்றிப் பெற்றுள்ளனர். 2007-ஆம் ஆண்டு 56 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றனர். அவர்களில் 2 பேர் முஸ்லிம் பெண்கள் ஆவர். இம்முறை(2012) 69 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். அவர்களில் 3 பேர் முஸ்லிம் பெண்களாவர்.

காங்கிரஸை கைவிட்ட முஸ்லீம்கள்.. மாயாவதியை கைவிட்ட தலித்கள்!


லக்னெள: உத்தரப் பிரதேசத்தில் வெறும் 3.3 சதவீத வாக்கு வித்தியாசத்தில் தான் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை முலாயம் சிங் யாதவ் தோற்கடித்துள்ளார். இந்த 3.3 சதவீத வாக்கு வித்தியாசம் முலாயம் சிங் யாதவுக்கு கூடுதலாக 127 இடங்களைத் தந்துள்ளன.


இந்தத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் சதவீத விவரம்:



சமாஜ்வாடி கட்சி - 29.2%. இது கடந்த தேர்தலைவிட 3.3% அதிகம்
பகுஜன் சமாஜ் கட்சி - 25.9%. இது கடந்த தேர்தலைவிட 3.3% குறைவு
பாஜக - 15%
காங்கிரஸ் - 11.6%. இது கடந்த தேர்தலைவிட 3% அதிகம்
ராஷ்ட்ரீய லோக் தள் - 3.7%
சுயேச்சைகள்-மற்றவர்கள் - 16%

Tuesday, March 6, 2012

5 மாநில தேர்தல் முடிவுகள்: அன்னா குழுவால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை


Anna Hazareடெல்லி: சமூக ஆர்வலர் அன்னா குழுவினர் காங்கிரஸுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தும் அக்கட்சி 5 மாநிலங்களிலும் கடந்த சட்டசபை தேர்தலைவிட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலின்போது பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.



இதில் மணிப்பூரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் ஆளும் கோவா பாஜகவுக்கு கிடைத்துள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தர்கண்டில் கடந்த சட்டசபை தேர்தலைவிட இந்த தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடித்துள்ளது அல்லது இருக்கும் இடங்களை தக்க வைத்துள்ளது.

மர்வா ஸபா கவாக்ஸி: இந்நூற்றாண்டின் புரட்சிகரமான பெண்களில் ஒருவர் !


Marwa-Qwaksiஆபிரிக்காவின் மொரோக்கோ முதல் ஆசியாவின் இந்தோனேசியா வரை பரந்து விரவிக் கிடக்கும் இஸ்லாமிய உலகில் பல கோடிப் பெண்கள் ஹிஜாபை துறந்திருக்கின்றபோது,ஹிஜாபுக்காக தனது குடியுரிமையையும் பாராளுமன்ற அங்கத்துவ உரிமையையும் உதறித் தள்ளிமைதான் மர்வா செய்த மாபெரும் புரட்சி.1999 இல் துருக்கிய பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினருக்கான சத்தியப் பிரமாணத்தை எடுப்பதற்கு நுழைந்தபோது அங்கிருந்த கொடுங்கோன்மை மிக்க மதச்சார்பற்ற சக்திகள் கூக்குரலிட்டனர். அவரை ஒரு இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரி என்று வர்ணித்ததோடு பாராளுமன்றத்தை விட்டு வெளியேறிச் செல்லுமாறும் காட்டுக் கூச்சல் போட்டனர்.
கலாச்சார உரிமைகள் குறித்து பேசும் ஐரோப்பாவில் உடுப்பதற்கான உரிமை மறுக்கப்பட்ட நிலையில், தனது குடியுரிமையையும் இழந்து அமெரிக்காவில் குடியேறியவர் கவாக்ஸி. இஸ்லாமிய அறிவுத் துறையிலும் சமூகப் பணிகளிலும் தஃவாவிலும் அரசியல் செயற்பாட்டிலும் ஓர் உயிர்த் துடிப்புள்ள ஆளுமையாக விளங்குகின்றவர். இந்நூற்றாண்டு கண்ட புரட்சிகரமான பெண்களில் ஒருவர்.

ஈரானுக்கு வக்காலத்து வாங்குகிறதா சீனா?


அணுச்சக்திவளப் பாவனையைக் காரணம் காட்டி ஈரான் மீது தடைகளை விதிப்பதை அனேகமான உலக நாடுகள் எதிர்க்கின்றன" என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் யாங் ஜியேச்சி குறிப்பிட்டுள்ளார்.


இன்று (06.03.2012) சீன நாடாளுமன்ற அமர்வின்பின் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், "ஈரான்மீதான தடைகள் ஒருதலைப்பட்சமானவை. உலகின் பெரும்பான்மையான நாடுகளைப் போல நாமும் அதனை ஏற்றுக்கொள்வதற்கில்லை" என்று தெரிவித்துள்ளார்.

Monday, March 5, 2012

உதயகுமார் பள்ளியின் சுற்று சுவரை இடித்து தள்ளிய ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் !


நாகர்கோவில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும், அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் சுப. உதயக்குமாரின் மனைவி நடத்தி வரும் பள்ளிக்கூடத்தின் சுற்றுச் சுவரை ஹிந்துத்துவ பயங்கரவாதிகள்  இடித்து விட்டனர். இதுகுறித்துப் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது. உதயக்குமாரின் போராட்டத்தால்தான் தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் வதந்தி யை கிளபியுள்ளதால்  அவருக்கு எதிரான போராட்டங்கள் ஆங்காங்கு நடந்து வருகின்றன.

டெல்லி, வட மாநிலங்களில் 5.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-மக்கள் ஓட்டம்


Delhi
டெல்லி: வட இந்தியாவில் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் டெல்லியிலும் பலத்த அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததால் வீடுகள், கட்டடங்களை விட்டு அலறியடித்து ஓடி வந்தனர். இன்று பிற்பகல் 1.10 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு டெல்லி, மத்திய டெல்லி உள்பட பல பகுதிகளில் நில அதிர்வு இருந்தது. அதேபோல புறநகர்ப் பகுதிகளான காசியாபாத், நொய்டா, குர்கான் போன்ற இடங்களிலும் மக்கள் நில அதிர்வை உணர்ந்தனர்.

பஹ்ரைன் புரட்சியாளர்களுக்கு டுனீசியர்கள் ஆதரவு !


வளைகுடா நாடுகளில் அண்மைக் காலமாய் மையங்கொண்டுள்ள புரட்சி அலைக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்குமுகமாக, "பஹ்ரைனின் நண்பர்கள்" எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் டூனீசியர்கள் குழுவொன்று கடந்த சனிக்கிழமை (03.03.2012) தலைநகர் டூனிஸில் ஒரு மாபெரும் கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தது. டூனீஸிய நோக்கில் பஹ்ரைன் புரட்சி' என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த மாபெரும் கருத்தரங்கில் ஏராளமான பஹ்ரைன் செயற்பாட்டாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Sunday, March 4, 2012

ஈரானில் மிகப்பெரிய எண்ணெய்க்கிணறு கண்டுபிடிப்பு !



தென் ஈரான் பிராந்தியத்தில் மிகப்பெரியதோர் எண்ணெய்க் கிணறு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஈரானின் தேசிய எண்ணெய்க் கம்பெனியின் பணிப்பாளர் செய்யத் மஹ்மூத் மஹத்திஸ் நேற்று(சனிக்கிழமை, 03.03.2012) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இப்பிராந்தியத்தில் ஏற்கெனவே ஓர் எண்ணெய்க் கிணறு தோண்டப்பட்டிருந்தது எனவும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறு இதுவரை ஈரானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிணறுகளிலேயே மிகப் பெரியதாகும் என்றும் தெரிவித்துள்ளார். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிணற்றைப் பரிசோதித்த ஈரானிய நிபுணர்கள், இக்கிணற்றில் மிக உயர்தரமான எண்ணெய், பெருமளவில் சுரப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் அழிவு தொடங்கிவிட்டது


அமெரிக்காவின் அழிவு தொடங்கிவிட்டது
"அமெரிக்கா ஈரானுக்கு எதிராக ஒரு யுத்தத்தில் குதிக்குமாயின், அது அமெரிக்காவின் முடிவாகவே இருக்கும்" என்று துருக்கியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் துருக்கிய சனநாயகக் கட்சியின் தலைவருமான நாமிக் காமில் ஸெய்பிக் நேற்று(சனிக்கிழமை, 03.03.2012) எச்சரிக்கை விடுத்துள்ளார்.  "ஈரானுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்பவர்கள், 1980-1988 காலப்பகுதியில் ஈராக்-ஈரான் யுத்தத்தில் சுமார் எட்டு வருடகாலம் சளைக்காமல் தன்னைத் தற்காத்துக்கொண்ட அதன் வல்லமையை நினைவுகூர்வது நல்லது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தை முன்கூட்டியே செயற்கைக்கோள் மூலம் கண்டறியும் ஆய்வில் சீன விஞ்ஞானிகள் வெற்றி !


பூமியின் மேல் ஓடுகள் நகர்வதையும், அதன் மூலம் நிலநடுக்கம் ஏற்படுவதையும் செயற்கைக் கோள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் புதிய முறையை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கடந்த 2007ல், 35 விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஒன்று சீன அரசின் பல்வேறு அறிவியல் துறைகளுடன் இணைந்து நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறிவதைக் குறித்த ஆய்வில் ஈடுபட்டது. மொத்தம் 83.2 மில்லியன் டாலர் செலவில் இக்குழு நடத்திய ஆய்வில் செயற்கைக்கோள் மூலம் பூமியின் மேல் ஓடுகள் நகர்வதையும் அதன் மூலம் நிலநடுக்கம் ஏற்படுவதையும் தெரிந்து கொள்ளும் புதிய முறை கண்டறியப்பட்டது.

Saturday, March 3, 2012

சமூக மேம்பாட்டுதுறை - பிப்ரவரி மாத ரிப்போர்ட்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூகத்தை மேம்படுத்தும் பணியில் தனது செயல்பாட்டை தொய்வின்றி தொடர்ந்து செய்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் அதற்கான அறிக்கையை சமுதாய மக்கள் மன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் சென்ற மாதம் முதல் ஒவ்வொரு மாதத்திற்கான ரிப்போர்டை நமது தளத்தில் பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற செயல்பாடுகள், பணிகல் மற்றும் உதவிகள் பற்றிய ஓர் பார்வை!

சென்னையில் சமூக மேம்பாட்டு துறை சார்பாக ஏழை பெண்ணிற்கு திருமண உதவி அளிக்கும் பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர் சுலைமான்



கன்னியாக்குமரி:


குளச்சல் ஜமாத்திற்கு உட்பட்ட அப்துர் ரஹ்மானின் மகன்  அல்-அமீனுடைய படிப்பு செலவிற்காக கல்வி உதவித்தொகையாக ரூபாய் 5000/-  வழங்கப்பட்டது.

கூடங்குளத்தை சுற்றி வளைத்தது போலீஸ் !



சென்னை: கூடங்குளத்தை கிட்டத்தட்ட சுற்றி வளைத்துவிட்டது போலீஸ். அணுஉலை உள்ள பகுதிக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சுற்றுப் பகுதி மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதும் தடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போராட்டக்காரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, அணு உலையை பிரச்சினையின்றித் திறக்க மத்திய மாநில அரசுகள் முயல்கின்றன.


இன்னுமொரு என்கவுன்டருக்குத் தயாராவது போன்ற முன்னேற்பாடுகளை கூடங்குளத்தில் செய்து வருகிறது போலீஸ் என்கிறது அங்கிருந்து வரும் தகவல்கள்.

முஹம்மத் நபியையும் , கேடுகெட்ட கூத்தாடி ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு விளம்பரம் !


Muslims fired dinamalar and dinathanthi in velloreமுஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக முஹம்மது நபியை நினைத்து கொண்டு இருக்கையில்  முஹம்மது நபியையும்,  கேடுகெட்ட கூத்தாடி ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு விளம்பரம் வெளியானதை அடுத்து  வேலூர் மாவட்டம் மேல்விஷாரத்தில் தினத்தந்தி நாளிதழை எரித்து முஸ்லிம்கள் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. அதிமுக மேற்கு மாவட்ட விவசாய அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு ஆம்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

இதற்காக மேற்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட செயலாளர் ஆர்.வெங்கடேசன் விளம்பரம் கொடுத்திருந்தார். அதில், நபிகள் நாயகத்தையும்,கேடுகெட்ட கூத்தாடி ஜெயலலிதாவையும் ஒப்பிடும் விதமாக வாசகங்கள் இடம் பெற்றிருந்தது, முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Friday, March 2, 2012

கணினி வேலையா ? உங்களுக்கு சீக்கிரம் வயசாயிடும் ! – எச்சரிக்கை ரிப்போர்ட்

தகவல் தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சியினால் இன்றைக்கு அனைத்து துறைகளிலுமே கணினி பயன்பாடு என்பது இன்றியமையாததாகிவிட்டது. இதில் தகவல் தொழில்நுட்ப துறை போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றுபவர்கள்,அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்களை விரைவில் முதுமை ஆட்கொள்வதாக ஆய்வு முடிவு ஒன்று எச்சரிக்கின்றது. குறிப்பாக பெண்களுக்கு முதுமை சீக்கிரம் ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் மறுஏலம்: 400 நாள் அவகாசம் கேட்கும் மத்திய அரசு!


டெல்லி: உச்ச நீதிமன்றம் ரத்து செய்த 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் காரணமாக 6.9 கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவர் என்றும், இந்த லைசென்ஸ்களை மறுஏலம் விட குறைந்தது 400 நாட்களாவது ஆகும் என்றும், அதற்கான கால அவகாசத்தைத் தர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது.


ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு தொலைபேசி நிறுவனங்களுக்கு நாட்டின் பல்வேறு மண்டலங்களில் வழங்கப்பட்ட 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. 4 மாதங்களுக்குள் புதிய விதிகளை வகுத்து ஸ்பெக்ட்ரத்தை மறு ஏலம் விட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.