பெரம்பூர்: கொடுங்கையூர் காவல் நிலையத்தில் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பெட்டிகளை உடைத்து 2 போலீசாரின் சம்பளப் பணம் மற்றும் அடையாள அட்டைகளை திருடிச் சென்றுள்ளனர். கொடுங்கையூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் ஓய்வு எடுக்க ஓய்வு அறை ஒன்று உள்ளது. அந்த அறையில் சீருடையை வைப்பதற்காக ஒவ்வொருவருக்கும் ஒரு பெட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றிரவு 2 போலீசார் தங்களுடைய சம்பளப் பணம் மற்றும் சீருடையை அந்த பெட்டிகளில் வைத்து பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர்.
Monday, February 20, 2012
Sunday, February 19, 2012
டில்லி வெடிகுண்டு: ஏன் ‘இவர்களே’ வெடிக்க வைத்திருக்க முடியாது?
வெளிநாடுகளில் இஸ்ரேலிய இலக்குகள் மீது குண்டு வெடிப்புத் தாக்குதல்கள் நடப்பதற்கும், தமது அமைப்புக்கும் எந்த தொடர்பும் கிடையாது என ஹெஸ்பொல்லா அமைப்பு மறுத்துள்ளது.
இந்தியா, தாய்லாந்து, ஜேர்ஜியா ஆகிய நாடுகளில் இந்த வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன. இந்த தாக்குதல்களின் பின்னணியில் ஈரானிய அரசும், ஹெஸ்பொல்லா அமைப்பும் உள்ளதாக இஸ்ரேல் கூறியிருந்தது. ஹெஸ்பொல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, “எமக்கும் இந்தத் தாக்குதல்களுக்கும் எதுவித தொடர்பும் கிடையாது என்று உங்களுக்கு நான் உறுதிகூற விரும்புகிறேன்” என்று தமது ஆதரவாளர்களுக்கு வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ஆதரிக்காது – சர்தாரி
மத்தியதரைக்கடல் பகுதியில் ஈரான் கப்பல்கள் விரைகின்றன. போர்ப்பதட்டம் அதிகரிப்பு !
Saturday, February 18, 2012
பிசுபிசுத்துப்போன பா.ஜ.கவின் வாக்குறுதிகள்
உத்திர பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் அயோத்தியில் இராமர் கோயிலை கட்டுவதே பா.ஜ.கவின் லட்சியம் என்று கூறியது. ஆனால் இந்த முறை பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கைகள் இந்துக்களிடம் வரவேற்பை பெறவில்லை என்பதும் அவர்கள் பா.ஜ.கவை ஆதரிக்க தயாரக இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. இதற்கு காரணம் இன்று வாக்களிப்பவர்களில் 60% இளைஞர்களாக இருக்கின்றார்கள். கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றிலேயே ஆர்வம் காட்டும் அவர்கள் இது போன்று மதத்தின் பெயரால் பிளவை ஏற்படுத்துவதை அவர்கள் விரும்புவதில்லை என டாக்டர் முஹம்மது ஆரிஃப் தெரிவித்தார்.
பிரான்ஸ்- பிரிட்டனின் புதிய அணுசக்தி ஒப்பந்தம்
ஜெவுக்கு ஒண்ணுமே தெரியாது... எல்லாவற்றுக்கும் நானே பொறுப்பு!' - நீதிபதி முன் கதறியழுத சசிகலா !
இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை நிச்சயம் என்று கூறப்பட்ட நிலையில், அவருடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக உடன்பிறவா சகோதரி என்ற அந்தஸ்தில் இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 15-க்கும் மேற்பட்டோர் போயஸ் கார்டன் மற்றும் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
Friday, February 17, 2012
அமெரிக்க உளவு விமானம் "RQ-170" ஈரான் அதிகாரிகளிடம் சிக்கியது!
பிப்ரவரி :17, ஈரானில் அத்துமீறி நுழைந்த அமெரிக்க உளவு விமானமொன்றினை ஈரான் இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட நவீன RQ-170 என்ற விமானமே இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த விமானத்தை கைப்பற்றியுள்ளதாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விமானம் தம்முடையது தான் என்ற உண்மையை அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக் கொண்டனர். சி.ஐ.ஏ உளவு விமானத்தை எப்படி ஈரான் கைப்பற்றியது என்பது இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த விமானம் வெளிநாடுகளை உளவு பார்ப்பதற்காக சி.ஐ.ஏ.வால் இரகசியமாக உபயோகிக்கப்பட்ட விமானம் ஆகும்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு உதவி செய்த முஸ்லிம் தொண்டு நிறுவனம்

அஹமதாபாத்: "நரோடா பாட்டியா" கடந்த 2002 ஆம் ஆண்டு சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட இடம். அப்பாவி முஸ்லிம்களில் பெண்கள் குழந்தைகள் என 90ற்கும் மேற்பட்டவர்கள் சங்கப்பரிவாரங்களால் காட்டுமிராண்டித்தனமான முறையில் கொலை செய்யப்பட்டனர். அதே சமயம் இவ்வூரில் தனது அக்கம்பக்கத்தினராக இருந்த இந்துக்களுக்கு கலவரத்தால் பாதிக்கப்பட்ட அவர்களுடைய வீட்டை சீரமைப்பதற்கு முஸ்லிம்களே உதவிசெய்துள்ளனர்.
தில்லி பாட்லா ஹவுஸ் பகுதியில் நள்ளிரவு சோதனை, போலீஸ் மக்கள் மோதலால் பரபரப்பு !
உள்ளூர் காவல்துறை வராமல் தெற்கு தில்லியின் பங்களாதேஷ் பிரிவை சார்ந்த காவல்துறையினர் வியாழன் அதிகாலை 1.30க்கு ஜாமியா நகரில் உள் நுழைந்து சோதனை நடத்தினர். தில்லி குண்டு வெடிப்பு சம்பந்தமாக ஈரானிய இளைஞர்களை பிடிக்க காவல்துறை வந்திருப்பதாக பரவிய செய்தியால் உள்ளூர் மக்கள் 500 நபர்கள் வெகுண்டெழுந்து காவல்துறையுடன் மோதலில் ஈடுபட்டனர்.
Thursday, February 16, 2012
பயங்கரவாதிகளை உருவாக்குகிறது ஆர் எஸ் எஸ் : சி.பி. ஐ.(எம்) கடும் தாக்கு !
கைது செய்யப்பட்டவர் குறித்து சி.பி. ஐ.(எம்)-ன் மூத்த தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறியிருப்பதாவது:- இவர் மத்திய பிரதேசத்தில் நீண்ட காலமாக ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளராக உள்ளார். அதனால் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இந்த குண்டுவெடிப்பில் தொடர்பு இருக்கிறது. இந்துத்துவா பயங்கரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் ஆர்.எஸ்.எஸ். செயல்படுகிறது.
இஸ்லாத்தை ஏற்ற நடிகை பூஜா மாலாவை நோகடிக்கும் கும்பல் !
நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகையும்,பாடகருமான "பூஜா லாமா" சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவினார் அல்ஹம்துலில்லாஹ்.இவருடைய வயது 28 என்பதும் இவர் புத்த குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தனது துபாய் கத்தார் பயணத்தை முடித்து விட்டு திரும்பும்போது காத்மாண்டு என்ற இடத்தில இஸ்லாத்தை தழுவினார்.
பேட்டி ஒன்றில், இஸ்லாத்தை தழுவிய பிறகு பூஜா லாமா என்ற தனது பெயரை "ஆம்னா ஃபாரூகி" என்று மாற்றிக் கொண்டதாக கூறினார்.மேலும்"இஸ்லாம் மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் மனித நேயத்தின் அடிப்படையில் தீர்வு அளிக்கிறது.இஸ்லாத்தின் அழகு தனக்கு நேர் வழி காண்பித்தது இல்லையெனில் நான் இருளிலேயே இருந்திருப்பேன்.இஸ்லாம் அமைதியான மதம் என்பதை நான் உலகுக்கு கூற விரும்புகிறேன்." என்பதாக கூறினார்.
முஸ்லிம்கள் மீண்டும் தங்களது விசுவாசத்தை காண்பிக்க வேண்டுமாம் - பல இடங்களில் குண்டு வைத்த ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது !
கடந்த புதன்கிழமை இமாம்பாரா என்னும் இடத்தில் சில முஸ்லிம் மொளலவிகள் நடத்திய் மீலாது விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் இவ்வாறு கூறியுள்ளார். முஹம்மது நபியும்ஒருவர் தன்னுடைய தாய் நாட்டின் மீது விசுவாசமாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கிறார். தாய் நாட்டின் மீது விசுவாசமாக இருக்க வேண்டுமென்பது ஒவ்வொரு முஸ்லிமிடத்திலும் இருக்க வேண்டிய தனித்துவமிக்க அம்சமாகும். எல்லா முஸ்லிம்களும் தங்களது நபி கூறியபடி நடப்பார்கள் என்று நம்புகிறேன் இவ்வாறு மொபைல் போனின் மூலம் பேசியுள்ளார்.
Wednesday, February 15, 2012
ஹரியானாவில் லஞ்சம் பெற்ற நீதிபதி கைது !
இந்த சம்பவம் குறித்து பிவானி மாவட்டத்தை சேர்ந்த பர்தீப் என்பவர் மாநில லஞ்ச ஊழல் கண்காணிப்பு துறையிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில் தனது லாரியில் ராஜஸ்தானில் இருந்து ஹரியானாவுக்கு வந்துகொண்டிருந்த போது தரம்வீர் ரூ.7000 லஞ்சம் கேட்டு தன்னை துன்புறுத்தியதாகவும், மேலும் இந்த தொகையை வழியில் இருக்கும் பாலத்தில் நிற்கும் ராஜ்குமார் என்பவரிடம் கொடுக்க வேண்டும் என்று தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார்.
தேவேந்திர குல மக்கள் - முஸ்லிம்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்த சதி: ஜான்பாண்டியன் குற்றச்சாட்டு !
சங்கரன்கோவில் கலவரத்திற்கு காரணமான தென்மண்டல ஐ.ஜி.யை மாற்ற வேண்டும் என்று தமமுக தலைவர் ஜான் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். சங்கரன்கோவிலில் ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்த காளிராஜ், பெருமாள் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.அவர்களை தமமுக தலைவர் ஜான்பாண்டியன் சந்தித்து ஆறுதல் கூறினார். மாநகர செயலாளர் கண்மணி மாவீரன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, காவல்துறை பாதுகாப்பு கொடுத்தும் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு தெரியும்.
Tuesday, February 14, 2012
அப்பாவிகள் கைது முயற்சி முறியடிப்பு : போலீசார் மீது வழக்கு பதிவு!
புது டெல்லி: பிப்ரவரி 13, நேற்று பிற்பகல் தெற்கு டெல்லியில், முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் மகாராஷ்டிரா, A.T.S. படை பிரிவை சேர்ந்த, சாதாரண உடை அணிந்த 3 போலீசார், போலி சம்மன்களை வைத்துக் கொண்டு, முஹம்மது தகீ, என்ற வாலிபரை கைது செய்ய முயன்றனர்.
அந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்களின் விழிப்புணர்வு காரணமாக, போலீசின் சதி முறியடிக்கப்பட்டதுடன், உள்ளூர் போலீஸ் துணையுடன் போலி சம்மன்களுடன் அப்பாவியை குறிவைத்த, மகாராஷ்டிரா போலீசார் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதே போல மற்றொரு போலீஸ் அத்து மீறலும் நேற்று முறியடிக்கப்பட்டது.
ஆசிய, பசிபிக் பகுதியில் படை குவிப்பு: அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்
ஆசியா பசிபிக் கடல் பகுதியில் அமெரிக்கா, சீனா இரு நாடுகளுக்கும் தேவையான இடங்கள் உள்ளன. ஆனால் இந்த மண்டலத்தில் அமெரிக்கா தனது படைகளைகுவித்து வருகிறது. இதை நாங்கள் விரும்பவில்லை. இது நம்பிக்கை இழக்கும் வகையில் உள்ளது.
கோலிவுட் முதல் பாலிவுட் வரை கொலையை கற்றுக் கொடுக்கும் கொடூர சினிமா படங்கள் !
காதலர் தினம் கார்பெரெட் முதலாளிகள் தினம் !

காதல் ஒரு பருவகால உந்தல். பருவ வயதை அடைந்த ஆண்,பெண் ஒருவேர்மேல் ஒருவர் கொள்ளும் ஈர்ப்பே காதல் ஆகும்.ஒருவர் மேல் காதல் உண்டாக அழகு என்கிற புறதோற்றங்களோ அல்லது அறிவு சார்ந்த கல்வி, வீரம், விவேகம், சமூக சிந்தனைகள் போன்ற அக தோற்றங்களோ ஒரு காரணமாக இருக்கலாம். தனது மனதுக்கு பிடித்தவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பது தான் காதலின் கடைசி இலக்காக இருக்கிறது. அதாவது காதல் என்பதின் கடைசி இலக்கு திருமணமே. ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு காலத்தில், காதல் அனுபவம் வந்து சென்றிருக்கும். அது பருவ வயதில் ஏற்ப்படும் சுகமான அனுபவம். காதல் என்றால் செல்போன் காதல் என்று நினைத்து விடாதீர்கள். நாம் பருவ வயதை கடந்து வரும்போது யாரையாவது நமது மனதுக்கு பிடிக்கும்.
Monday, February 13, 2012
'நடுவானில்' ஸ்டாலின், விஜயகாந்த், கார்த்தி சிதம்பரம் ரகசிய ஆலோசனை !
அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா என்பார் ஒரு படத்தில் கவுண்டமணி. அதேபோல தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் எது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும், எதற்காக வேண்டுமானாலும் நடக்கும். கொள்கை, லட்சியம், கோட்பாடு, குறிக்கோள் என்று எதுவும் அரசியலுக்குத் தேவையில்லை. தேவைப்பட்டால் கூடிக் கொள்வார்கள், தேவையில்லாவிட்டால் கூச்சலிட்டுக் கொண்டு பிரிந்து கொள்வார்கள். யார் யாருடன் சேருகிறார்கள் என்பதெல்லாம் இங்கு முக்கியமே இல்லை.
Subscribe to:
Posts (Atom)