Tuesday, January 24, 2012

இந்தியா: கடும் எதிர்ப்பால் சல்மான் ருஷ்டியின் வீடியோ உரை ரத்தானது


ஜெய்ப்பூர்: இலக்கிய விழாவில் சல்மான் ருஷ்டி வீடியோ உரை நிகழ்த்துவதை எதிர்த்து ஜெய்ப்பூரில் போராட்டம் வெடித்ததால் அவரது உரை ரத்து செய்யப்பட்டது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடந்து வரும் இலக்கிய விழா பெரும் சர்ச்சைகளுடன் கூடியதாக மாறி விட்டது -  முதலில் அவர் விழாவுக்கு வருவதாக இருந்தது. ஆனால் ராஜஸ்தான் போலீஸார் தீவிரவாததாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாக கூறவே தனது பயணத்தை ரத்து செய்தார் ருஷ்டி.

Monday, January 23, 2012

அணு உலையில் மீண்டும் கதிர்வீச்சு- ஜப்பானில் பரபரப்பு.

once again atomic rays attacked in japan nuclear unit.
ஜப்பான் அணு உலை தண்ணீரில் மீண்டும் கதிர் வீச்சு பரவியது.   ஜப்பானில் கடந்த மார்ச் மாதம் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டது. அதில் 20 ஆயிரம் பேர் பலியானார்கள். 


புகுஷிமா அணுமின் நிலயத்தில் உள்ள அணு உலைகள் வெடித்தன. இதனால் அங்கிருந்து கதிர் வீச்சு வெளியேறியது. குடிநீர், பால், கீரை வகைகள் உள்ளிட்ட உணவு பொருட்களில் கதிர் வீச்சு பரவியது.

பிக்னிக் உட்பட கூகிளின் 6 சேவைகள் நிறுத்தம் !


கூகிள் தனது 6 பயன்தரும் சேவைகளை அவற்றின் மேம்படுத்தல்களுக்காக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதில் முக்கியமானது போட்டோக்களை மேருகேட்ட உதவும் இணையத்தளமான பிக்னிக் ஆகும். "போட்டோவை எடிட் செய்து மெருகேற்ற வேண்டும். ஆனால் இதற்கெல்லாம் ஒரு புரோகிராமை நகலிறக்கம் செய்து, வேலையை முடிக்க நேரம் இல்லை என்பவர்களுக்கு (தூரி)கை கொடுத்த ஆன்லைன் ஃபோட்டோ எடிட்டர் பிக்னிக் வெப்சைட்டை கூகிள், ஏப்ரல் 19, 2012-ஆம் தேதி மூடப்போகிறது. 

சிறுபான்மையினரை வஞ்சிக்கிறது,மத்திய அரசு,எம்.ஹெச்.ஜவாஹிருல்லா அறிக்கை


மனிதநேய மக்கள் கட்சி தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரத்தில் மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிராக வஞ்சனையுடன் செயல்பட்டு வருகிறது. 


அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழுவை தூத்துக்குடி மறை மாவட்ட நிர்வாத்துடன் இணைந்த சிறுபான்மை தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புபடுத்தி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொச்சைப்படுத்தும் வகையில் நடந்து வருகின்றது.
கூடங்குளத்தில் நடைபெற்று வரும் அணு உலை எதிர்ப்பு போராட்டம் இந்த நாட்டின் நலனில் உண்மையில் அக்கறைக் கொண்ட மக்கள் தன்னெழுச்சியாக நடத்தி வரும் போராட்டமாகும். இந்த போராட்டத்திற்கு கிறிஸ்த்தவ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியை அளித்து வருகின்றன என கூறுவது அபாண்டமாகும்.

ஒபாமாவை படுகொலை செய்வதற்கு மொஸாதிற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்-யூத பத்திரிக்கை.


ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்க தவறிய அமெரிக்க அதிபர் ஒபாமாவை படுகொலை செய்ய மொஸாதிற்கு உத்தரவிட வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யகுவிடம் யூத பத்திரிக்கை ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து பிரசுரமாகும் அட்லாண்டிக் ஜூயஸ் டைம்ஸின் ஜனவரி 13-ஆம் தேதி எடிட்டோரியல் பக்கத்தில் எழுதியுள்ள கட்டுரையில், இஸ்ரேலுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாத நிலைபாட்டை மேற்கொள்ளும் ஒபாமாவை கொலை செய்ய உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இப்பத்திரிக்கையின் உரிமையாளர் ஆண்ருட் அட்லர் என்பவர் தாம் இக்கட்டுரையை எழுதியுள்ளார். 

இந்தியா: ஜெய்ப்பூர் இலக்கிய விழா-ருஷ்டி புத்தகத்தை வாசித்த 4 எழுத்தாளர்கள் வெளியேற உத்தரவு !


ஜெய்ப்பூர்: சர்ச்சைக்குரிய சல்மான் ருஷ்டியின் தி சாத்தானிக் வேர்சஸ் என்ற நூலிலிருந்து சில பகுதிகளை வாசித்த நான்கு எழுத்தாளர்களை ஜெய்ப்பூர் இலக்கிய விழாவிலிருந்து வெளியேறுமாறு நிகழ்ச்சி அமைப்பாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் சர்ச்சை மேலும் வலுவாகியுள்ளது. ஜெய்ப்பூரில் நடந்து வரும் இலக்கிய விழாவில் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தார் சல்மான் ருஷ்டி. இருப்பினும் அவருக்கு கொலை மிரட்டல் இருப்பதாக ராஜஸ்தான் போலீஸார் கூறியதைத் தொடர்ந்து அவர் தனது பயணத்தை ரத்து செய்தார்.

Sunday, January 22, 2012

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவை எதிர்க்கும் வேட்பாளராக ஜின்கிரீச் தேர்வு !


அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தல் வருகிற நவம்பர் 6-ந்தேதி நடக்கிறது. அதில், ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். 


குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. மாகாண அளவில் நடைபெறும் தேர்தலில் குடியரசு கட்சியின் பிரதிநிதிகள் ஓட்டு போட்டு வேட்பாளரை தேர்ந்தெடுத்து வருகின்றனர்.  

இஸ்ரேல் ஈரானை தாக்கினால் பெரும் அழிவு நிச்சயம் : ரஷ்யாவை தொடர்ந்து பிரான்சும் எச்சரிக்கை மணி அடித்தது !


இஸ்ரேல் ஈரானைத் தாக்கினால், மத்திய கிழக்கு நாடுகளில் குழப்பமும் உலகம் முழுவதும் போரும் ஏற்படும்" என்று பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி எச்சரிக்கை விடுத்துள்ளார். 


ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட பிரான்ஸ் நாட்டின் நான்கு இராணுவ வீரர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி சர்கோசியை அந்நாட்டின் முக்கிய உயரதிகாரிகள் சந்தித்து பேசினர். 

நாட்டை விட்டு வெளியேறுங்கள் தப்லிக் ஜமாத்திற்கு இலங்கை அரசு அதிரடி உத்தரவு !


இலங்கையில் இஸ்லாமியப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மதக்குழுவினரை இரண்டு வாரங்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. முஸ்லிம் மக்கள் மத்தியில் இஸ்லாமிய மதத்தை பின்பற்றுமாறு பிரச்சாரம் செய்து வரும் தப்லீக் ஜமாத் என்ற குழுவினர் கொழும்பில் தங்கி மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் கொழும்பிலுள்ள கிராண்ட்பாஸிலுள்ள தப்லீக் ஜமாத்தின் தலைமையகத்தில் தங்கியிருந்தனர்.


வியாழக்கிழமை தலைமையகம் வந்த காவல்துறையினர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு உள்ளிட்ட 161 நாடுகளிலிருந்து வந்துள்ள தப்லீக் ஜமாத்தைச் சார்ந்தவர்கள் அனைவரையும் வெளியேறுமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தலிபானுடன் அமெரிக்கா ரகசிய உடன்பாடு - ஆப்கான் ராணுவ தளபதி கூறுகிறார்.

அமெரிக்க அரசுடன் தலிபான்கள் ரகசிய உடன்பாடு செய்து கொள்ள வாய்ப்புள்ளதாக ஆப்கான் ராணுவ தளபதி அப்துல் கரீம் குர்ரம் தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் மேலும் தெரிவித்தது, தலிபான்களுடன் அமைதிக்கான பேச்சு நடத்துவதற்காக கத்தாரில் அலுவலகம் திறக்க அமெரிக்கா அனுமதித்தது, இந்த அலுவலகத்தை ஆப்கானில் திறக்கவே நாங்கள் விரும்பினோம் இருப்பினும் தலிபான்களுடனான போர் முடிவுக்கு வர விரும்பியே நாங்கள் அதனை ஆதரித்தோம். 

Saturday, January 21, 2012

அமெரிக்காவில் மனநலபாதிப்பு உடையவர்கள் அதிகம்!

அமெரிக்காவில் வசிக்கும் 5 பேரில் ஒருவருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் அந்நாட்டின் மனநல சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 


ஏறத்தாழ ஐந்து கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளர்கள், இதில் 23 சதவிகிதம் பேர் பெண்கள் 16.8 சதவிகிதம் பேர்  இளைஞர்கள் ஆவர்,அதிலும் 50 வயது கடந்தவர்களை விட இளைஞர்கள் தான் இரண்டு மடங்கு அதிகம் என்றும் சுமார் 1 கோடியே 14 லட்சம் இளைஞர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 12 வயது முதல் 17 வயது வரையில் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 19 லட்சம் என்றும் இந்த தகவல் தெரிவிக்கிறது. 

நடுவானில் ரஷ்ய பைலட் மாரடைப்பில் மரணம் !

Russian pilot dies of heart attack mid-flight
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது ரஷ்ய பைலட் திடீரென இறந்ததால் பதற்றம் ஏற்பட்டது. ரஷ்யாவின் போயிங் விமானம் ஒன்று பாங்காக்கில் இருந்து ரஷ்யாவின் நோவோசிபிர்ஸ்க் பகுதிக்கு விமானம் சென்று கொண்டிருந்த சீன வான் பகுதியில் பறந்து கொண்டிருந்த போது, பைலட் செர்ஜி கோலெவ்வுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. காக்பிட்டில் அவருக்கு எல்லாவித முதலுதவியும் அளிக்கப்பட்டது. அத்துடன் விமானத்தில் பயணம் செய்த இருதயவியல் டாக்டர் மூலமும் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

உடனடியாக தலைமை பைலட் சீனாவின் சென்டு விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்தார். அதற்குள் பைலட் செர்ஜி மாரடைப்பில் இறந்துவிட்டார். அதனால் விமானம் தரையிறங்கவில்லை.

செர்ஜிக்கு வயது 44தான் ஆகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது. இதுவரை இத்தகவல் வெளியிடப்படவில்லை. இப்போதுதான் வெளியாகி உள்ளது.

அல்லாஹ் பெயரால் பதவி பிரமாணம்,உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !



அல்லாஹ் பெயரால் பதவி பிரமாணம் எடுத்தது அரசியல் சட்டப்படி செல்லும்" என அதற்கு எதிராக தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. வழக்கு தொடுத்தவர்மீது 1 லட்சம் அபராதமும் உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. 2011 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதி ஜார்கண்ட் மாநில ஆளுநராக சையதுஅஹ்மது "அல்லாஹ் கே நாம் பர்"

(அல்லாஹ் வின் திருப்பெயரால்) என்று கூறி பதவிபிரமாணம் செய்தார். அரசியல் சட்டப் பிரிவு 159ன் கீழ் அல்லாஹ் பெயரால் அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி கமல் நாயன் பிரபாகர் என்ற மாணவர் ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை ஜார்கண்ட் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Friday, January 20, 2012

தமிழ்நாடு: புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக்க உயர்நீதிமன்றம் தடை !


New Assemblyசென்னை: புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறப்பட வேண்டும். அது கிடைக்கும் வரை அப்பணிகளைத் தொடங்கக் கூடாது என்று கூறி புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது. சென்னை வாலாஜா சாலையில் உள்ள அரசினர் தோட்ட வளாகத்தில் பிரமாண்டமான அளவில் பல நூறு கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் புதிய சட்டசபையை கடந்த திமுக ஆட்சி கட்டியது. அங்கு சட்டசபையும் இடமாற்றம் செய்யப்பட்டு கூட்டமும் நடத்தப்பட்டது.



இந்த நிலையில், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் புதிய தலைமைச் செயலகத்தையும், சட்டசபையையும் மூட உத்தரவிட்டு விட்டது. சட்டசபையும், தலைமைச் செயலகமும் தொடர்ந்து புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலேயே நீடிக்கிறது.

போராளிகளின் அதிரடி தாக்குதலால் ஒரு நகரத்தை இழந்த சிரியா ராணுவம் !



சிரியா நாட்டு ராணுவம் நேற்று (வியாழக்கிழமை) தமது கட்டுப்பாட்டில் இருந்த நகரம் ஒன்றைக் கைவிட்டுப் பின்வாங்கியுள்ளது. அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல், ராணுவம் இந்த முடிவை எடுக்க நேர்ந்தது. ராணுவத்தினர் சராமாரியாகச் சுட்டபடி, நகருக்குள் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்களில் பின்வாங்கிச் சென்றனர்.அரசுக்கு எதிராக யுத்தம் புரியும் போராளி அமைப்பு, தமது வெற்றியை அறிவித்துள்ளது. 


தமது ராணுவம் பின்வாங்க நேர்ந்தது குறித்து சிரிய அரசு இதுவரை வாய்திறக்கவில்லை. கடந்த சில தினங்களாக இரு தரப்புக்கும் இடையே கடுமையான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த ஜபாதானி நகரமே ராணுவத்தின் கையைவிட்டு போயிருக்கின்றது. சிரிய அரசுக்கு இதிலுள்ள ஆபத்தான விஷயம், ஜபாதானி நகரம் தலைநகர் டமாஸ்ஸில் இருந்து அதிக தொலைவில் இல்லை. (வெறும் 30 கி.மீ. மட்டுமே) இந்த நகரத்தைக் கைப்பற்றியுள்ள அரசு எதிர்ப்பாளர்கள், அருகில் உள்ள தலைநகரை குறிவைக்க நிச்சயம் திட்டமிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். 

குவைத்: அத்தியாவசிய பொருட்களின் விலை உயருகிறது.

அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலை உயரும் என்று பயன் கூட்டுறவு சங்கத்தின் துணை தலைவர் எமாத் அல்-பரஜாஸ் கூறியுள்ளார், இது கடந்த ஆண்டை விட ஐந்து சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்றார். 


மேலும் அவர் கூறியதாவது "கடந்த ஆண்டு 15 சதவிகிதம் விலை உயர்வு இருந்தது, ஆனால் இந்த ஆண்டு 20 சதவிகிதமாக இருக்கும். இதற்கு சிரியாவில் உள்ள அரசியல் சூழ்நிலைகளே முக்கிய காரணம்,

உ.பி சட்டப்பேரவை தேர்தல்:எஸ்.டி.பி.ஐ வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியீடு


புதுடெல்லி: அடுத்த மாதம் துவங்கவிருக்கும் உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ போட்டியிடுகிறது.

Thursday, January 19, 2012

சர்ச்சையை கிளப்பிய குடியரசு கட்சி வேட்பாளரின் துருக்கி விமர்சனம்.

Texas Gov. Rick Perry speaks in Houstonஅங்காரா: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான குடியரசு கட்சியின் வேட்பாளர் பதவிக்காக மிட் ரூம்னியுடன் மோதும் டெக்சாஸ் ஆளுநரின் துருக்கி குறித்த விமர்சனம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 


துருக்கி "இஸ்லாமிய தீவிரவாதிகளின் கீழ் உள்ளது" என்ற மோசமான விமர்சனம் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. 

ஈரானைத் தாக்கினால்.அமெரிக்காவிற்கு அழிவு நிச்சயம் ! ரஷ்யா எச்சரிக்கை !


ஈரானை அமெரிக்கா தாக்கினால் அது மிகப் பெரிய அழிவுக்கு வழிவகுக்கும்" என ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யா வெளிவிவகாரத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரவ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.


ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் மேலும் தெரிவிக்கும்போது, “மேற்கத்திய நாடுகள் டெஹ்ரானுடன் பேச்சுவார்த்தையை தொடர்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்” என்றார்.

Tuesday, January 17, 2012

தமிழ்நாடு: இடஒதுக்கீடு பேரணிக்கான சுவர் விளம்பரங்கள் சென்னையில் தொடங்கியது!


சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி அன்று சென்னையில் முஸ்லிம்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கக்கோரி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இதற்கான பிரச்சாரங்கள் தற்போது சென்னை மாநகரில் தொடங்கியுள்ளது.