Thursday, December 22, 2011

ஆபிரிக்காவின் பின்னடைவுக்கு கிறிஸ்தவமே காரணம் - தென்னாபிரிக்கா ஜனாதிபதி


ஆபிரிக்கக் கண்டத்தில் 19 ஆம் நூற்றாண்டுப் பகுதியில் கிறிஸ்தவம் அறிமுகப்படுத்தப்பட்டமையே அங்கு தற்போது நிலவும் பிரச்சினைகளுக்குக் காரணம் என தென்னாபிரிக்க ஜனாதிபதி கருத்து தெரிவித்துள்ளமை பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஜேகப் சூமா தனது சொந்த மாகாணமான கிவாசூலு - நடாலில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார். 
கிறிஸ்தவமே அனாதைகள் மற்றும் முதியோர் இல்லத்தினை ஆபிரிக்காவுக்கு கொண்டுவந்ததெனவும் இதனால் ஆபிரிக்காவின் பாரம்பரியம், கலாசாரம் ஆகியன பாதிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

புதிய மதங்களின் வருகைக்கு முன்னர் ஆபிரிக்கா தனக்கென தனித்துவத்தைக் கொண்டிருந்ததாகவும், அது இருண்ட காலம் என பலர் கூறியபோதிலும் அக்காலப்பகுதியில் மேற்கூறிய பிரச்சினைகள் எதுவும் இருக்கவில்லையெனவும் சூமா குறிப்பிட்டுள்ளார். 

இவரின் இக்கருத்திற்கு அங்குள்ள கிறிஸ்தவ அமைப்புகள் தமது கவலையைத் தெரிவித்துள்ளன. மேலும் பல அமைப்புகள் அவரின் கருத்துக்குக் கண்டனம் வெளியிட்டுள்ளன. 

எனினும் அந்நாட்டு ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இதனை மறுத்துள்ளது. சூமா தவறான அர்த்தத்தில் அக்கருத்தைத் தெரிவிக்கவில்லையெனவும், ஆபிரிக்கர்கள் தங்களது பாரம்பரியத்தைக் காக்கவேண்டுமெனும் அர்த்தத்திலேயே அவர் அவ்வாறு கூறியதாகவும் அப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது. சூமா தென்னாபிரிக்காவின் முதல் 'சூலு' இன ஜனாதிபதியான அவர் பழங்குடியின மக்களின் கலாசாரத்தையே அதிகமாகப் பின்பற்றுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்!


பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம்சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.
இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேதயுனானிசித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது. சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்துகால்சியம்சத்துவைட்டமின் ஏபிபி2, பிமற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

Wednesday, December 21, 2011

ஜப்பான்: புகுஷிமா அணுஉலையை முற்றிலும் அகற்ற 30-40 வருடங்கள் ஆகும்



ஜப்பானின் புகுஷிமா நகரத்தில் உள்ள அணுஉலை கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் மோசமான பாதிப்புக்கு உட்பட்டது. எதிர்பராத இந்த நிகழ்வின் மூலம் அணுக்கரு உலையின் குளிரூட்டு அமைப்புகள் செயலிழந்தன, அதனால் கதிர்வீச்சு மிக அதிகமாக ஏற்பட்டது. அதனால் ஜப்பான் அரசாங்கம் அந்த அணுஉலையை மூட முடிவு செய்து தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஜப்பானின் வர்த்தக அமைச்சர் யூகி எடனோ வெளியிட்டுள்ள அறிக்கையில் "அணு கழிவுகளை முற்றிலும் வெளியேற்றுவதற்கு அதிக சிரத்தையும், அதிக பொருளாதாரத்தையும் எடுக்க வேண்டியுள்ளது. 15 பில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவிட வேண்டிவரும்".

சி.ஐ.ஏ. உளவாளியை விடுவியுங்கள் - ஈரானிடம் கெஞ்சுகிறது அமெரிக்கா


ஈரானில் கைதான அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏவின் ஏஜண்டை விடுதலைச் செய்யவேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலாண்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

டிசம்பர் 17-ஆம் தேதி டெஹ்ரானில் அமீர் மிர்ஸாஇ ஹிக்மதி என்ற அமெரிக்க உளவாளியை அதிகாரிகள் கைது செய்தனர். தான் சி.ஐ.ஏ உளவாளி என்பதை ஹிக்மதி ஒப்புக்கொண்டார். ஹிக்மதியின் குற்ற ஒப்புதல் தொடர்பான வீடியோ காட்சிகளை நேற்று முன் தினம் ஈரானின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி வெளியிட்டது.

ஹிக்மதியை சுவிட்சர்லாந்து தூதரகம் மூலமாக ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. 2001-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தில் சேர்ந்த ஹிக்மதி அமெரிக்காவிலும், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தளமான பக்ராமிலும் பயிற்சி பெற்ற பிறகு டெஹ்ரானுக்கு வந்துள்ளார். அமெரிக்க ராணுவத்தில் ஹிக்மதி அரபு மொழிப் பெயர்ப்பாளராக பணியாற்றியுள்ளார். இவருடைய குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. தென்மேற்கு அமெரிக்காவின் அரிஸோனாவில் பிறந்தவர் ஹிக்மதி.

கடாபி நரகத்தில் இருப்பார் - அமெரிக்க குடியரசு கட்சித் தலைவரின் ஆணவம்

நேற்று முன்தினம் மரணித்த வட கொரியாவின் தலைவர் கிம் ஜோங் இல்லிற்கு நரகம்தான் என அமெரிக்க குடியரசு கட்சியின் தலைவர் மெக்கெய்ன் சாபமிட்டுள்ளார்.

இதுக்குறித்து மெக்கெய்ன் கூறுகையில்,’கிம் ஜோங் இல், ஜோஸஃப் ஸ்டாலின், கர்னல் கத்தாஃபி ஆகியோருடன் இனி நரகத்தில் இருப்பார். கிம் இறந்ததன் மூலம் உலகம் மேலும் நல்லதொரு இடமாக மாறி உள்ளது’ அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவிடம் தோல்வியை தழுவிய மெக்கென் தெரிவித்துள்ளார்.
கிம்மின் மரணம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்து எதுவும் தெரிவிக்காத சூழலில் அமெரிக்காவின் பிரபல தலைவர்கள் கிம் குறித்து மோசமான கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். மக்களை பட்டினி போட்ட அடக்குமுறையாளர் என குடியரசு கட்சியில் இன்னொரு பிரபல தலைவரான மிட் ரோம்னி கூறியுள்ளார்.

குவைத் தேர்தல்: வேட்பாளர்கள் மனு தாக்கல் தொடக்கம்

வருகின்ற பிப்ரவரி ௨ அன்று நடைபெற உள்ள பொது தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று 21-12-2011 முதல் ஆரம்பமாகிறது, தொடர்ந்து பத்து நாட்களுக்கு மனு தாக்கல் நடைபெறும் என்றும் விடுமுறை நாட்களிலும் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. ஜனவரி 28 வரை மனுக்களை திரும்ப பெற்று கொள்ளலாம். குவைத் சட்டப்படி விருப்பமுள்ள நபர் அந்த பிரதேசத்துக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் மனுக்களை தாக்கல் செய்யலாம், மேலும் அந்த நபர் தாக்கல் செய்யும் தேதி அன்று அவருக்கு 30 வயது பூர்த்தி ஆயிருக்க வேண்டும், எந்த விதமான கொலை குற்றதிற்கு ஆளாகி இருக்க கூடாது.

Tuesday, December 20, 2011

போராளிகளுடன் தொடர்பு - ஈராக் துணை ஜனாதிபதிக்கு கைது வாரண்ட்



ஈராக்கில் போராளிகளுடன தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டு துணை அதிபருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு்ள்ளது. வளைகுடா நாடான ஈராக்கின் துணை அதிபராக தாரிக்-அல்-ஹஸ்மி,65 உள்ளார். இவர் ஈராக்கின் ஷன்னிப்பிரிவு தலைவராக உள்ளார். இப்பிரிவினர் அந்நாட்டின் வடக்கே குர்தீஷ் இனத்தவர்கள் இணைந்து ஷியா பிரிவு அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் துணை அதிபர் தாரிக்-அல் ஹஸ்மியின் நெருங்கிய பாதுகாவலராக இருந்த குர்தீஷ் இனத்தவர் சமீபத்தில் போராளி அமைப்புடன் தொடர்பு இருந்தன் பேரில் கைதுசெய்யப்பட்டார். 

அவரிடம் நடத்திய விசாரணையில் ஈராக்கில் பல்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களுக்கு அந்நாட்டின் துணை அதிபர் தாரிக் அல்-ஹஸ்மிக்கு தொடர்பிருப்பதாக தெரிவித்தார்.இதன்மூலம் போராளிகளுடன  இவருக்கு உள்ள தொடர்பிருப்பதை கூறியுள்ளார்.

ஈராக்கில் அமெரிக்க இராணுவம் நிலைத்திருக்கும் - அதிர்ச்சித் தகவல் கசிந்தது


அமெரிக்க ராணுவம் ஈராக்கை விட்டு வெளியேறுவதில் மகிழ்ச்சி அடைந்து அமெரிக்க கொடியை எரித்து ஈராக்கின் நகரமான ஃபலூஜாவில் சில தினளுக்கு முன் பல்லாயிரக்கணக்கானோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட செய்தி அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் அமெரிக்கா தனது தூதரக பணிகளுக்காக சுமார் பதினெட்டாயிரம் நபர்களை தெரிவு செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் 3,500 முதல் 5,500 நபர்கள் ஆயுதம் தாங்கிய தனியார் காவல் படையினர். இந்த  தனியார் காவல் படையினரும் அதன் குத்தகைதாரர்களும் அமெரிகர்களே. இதன்மூலம் தான் வெளியேறுவது போன்று ஒரு நாடகத்தை நடத்தி மீண்டும் ஆயுதம் தாங்கிய அமெரிக்கர்களை ஈராக்கில் நிலை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இந்த ஆயுதம் தாங்கிய காவல் படையினரை ஈராக்கில் நிலைநிறுத்துவது ஈரானுக்கு எதிரானது என்பது சர்வதேச அரசியல் நோக்கர்களின் கருத்தாகும். மேலும் எந்த நிலையிலும் ஈராக் ஈரானுடன் நல்லுறவு கொள்ளாதவாறு இருப்பதையே அமெரிக்கா விரும்கிறது.

ஆக மழை விட்டாலும் தூறல் நிற்கவில்லை என்ற கதையாக ராணுவ வீரர்களை வாபஸ் பெற்றுவிட்டு அதற்கு பதிலாக தனியார் காவல்  படையினரை பணியமர்த்துகிறது அமெரிக்கா.

முஸ்லிம் போராளிகள் என சந்தேகிப்போரை தேடிப்பிடித்து கொல்வோம் - நேட்டோ


போராளிகள் என சந்தேகப்படுபவர்களை தேடி கொலை செய்யும் பணிகளை நேட்டோ தொடர்ந்து செய்யும் என்று தெரிவித்துள்ளது. ஆஃப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் இந்த செயல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் நிலையில் நேட்டோ இவ்வாறு தெரிவித்துள்ளது.

நேட்டோவின் செய்தி தொடர்பாளர் பிரிக் ஜென் ஜெகப்சன் தற்போது இரவு நேரங்களில் செய்யப்படும் தேடுதல் வேட்டைகளில் ஆஃப்கனின் சிறப்புப் படை அதிக அளவில் பங்கெடுப்பதாக கூறினார். மேலும் ஆஃப்கானிஸ்தானில் வெளிநாட்டு படைகள் ஆதிக்கம் செலுத்துவதால் மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர் என்றும் கைது நடவடிக்கைகளை அமெரிக்கா செய்வதா அல்லது ஆஃப்கன் செய்வதா என்பதில் பிரச்னை உள்ளது என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில் ஆஃப்கன் அதிபர் கர்சாய் வெளிநாட்டு துருப்புக்கள் ஆஃப்கன் குடிமக்களின் வீட்டினுள் நுழைந்து அடாவடி செய்வதை நிறுத்த வேண்டும் என்றும் ஆயுதம் ஏந்திய அமெரிக்க துருப்புக்கள் நுழைவதால் ஆஃப்கன் மக்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்கின்றனர் என்றும் கூறியுள்ளார். மேலும் அமெரிக்க படைகள் நடு இரவில் வருவார்களோ என்று அச்சத்தில் உள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

Monday, December 19, 2011

சவுதி அரேபியா: சர்வதேச இஸ்லாமிய ஊடக கருத்தரங்கம்


சவுதி அரேபியாவின் தகவல் அமைச்சக செய்திதொடர்பாளர் அப்துர் ரஹ்மான் அல்-ஹச்சா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அடுத்த வருடம் ஜெத்தா நகரில் வைத்து சர்வதேச இஸ்லாமிய ஊடக கருத்தரங்கம் நடைபெறுவதற்கான அனைத்து விதமான ஏற்பாடுகளையும் தகவல் அமைச்சகம் செய்துவருவதாக கூறினார். மேலும் அவர் கூறியதாவது "சர்வதேச அளவில் இஸ்லாமிய ஊடகத்தின் வளர்ச்சி பின்தங்கிய நிலையில் உள்ளது, தனது  திறனை மேம்படுத்துவதற்காக எடுக்க வேண்டிய முயற்சிகளை பற்றி விரிவாக அலசப்படும். மேற்கத்திய ஊடகங்களால் இஸ்லாமிய உலகம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, இதை நல்ல பயிற்சியோடு உள்ள இளைங்கர்களால் மட்டுமே எதிர்த்து போராட முடியும்." 

குவைத்: தேர்தல் தேதி அறிவிப்பு


குவைத் அரசு ராஜினாமா செய்ததை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 2 அன்று தேர்தல் நடைபெறும் என இடைகால அரசாங்கத்தால் முடிவு எடுக்கப்பட்டு குவைத் அமீருக்கு அனுப்பப்பட்டுள்ளது, முதன் முறையாக KTC என்ற தன்னார்வ அமைப்பு மூலம் கண்காணிப்படும் என்ற குவைத் வரலாற்று சிறப்புமிக்க அம்சத்தையும் உள்ளடக்கியது.  மேலும் தேர்தலின் போது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அது பற்றிய தகவல் கொடுப்பதற்கு  தேவையான ஏற்பாடுகளும் செய்யும் முறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  அமிரின் ஒப்புதலுக்கு பிறகு அரசாங்க ஏடான குவைத் அல்-யூம் இல் பிரசுரிக்கபடும். 

வடகொரியா: சர்ச்சைகளின் நாயகன் மரணம்


தன்னுடைய அணுசக்தி கொள்கையின் மூலம் உலக ரௌடி அமெரிக்காவை ஆடவைத்த வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் லீ நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணமடைந்தார். ஏற்கனவே நீரழிவு மற்றும் இருதய நோயால் பாதிக்கபட்டிருந்த இவர் கடந்த சனிக்கிழமை ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்த போது மாரடைப்பால் இறந்தார்.  முதல் ஆட்சியில் இருக்கும் இவர் மக்களால் "அன்பு தலைவன்" என்று அழைக்கப்பட்டவர். இதைடுத்து இவரது மகன் கிம் ஜாங் - உன் அடுத்த அதிபராக பொருபேற்றதாக அந்நாட்டு  அரசாங்கம் அறிவித்துள்ளது. இவரது மரணம் அமெரிக்காவுக்கு நிம்மதியை தந்தாலும் அடுத்து என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. 

Sunday, December 18, 2011

கேரளா மற்றும் மத்திய அரசை கண்டித்து SDPI நடத்திய மாபெரும் தர்ணா

sdpi
பெரியகுளம்:முல்லை பெரியாறு விவகாரத்தில் தேவையற்ற பிரச்சனையை உருவாக்கி அடாவடியில் ஈடுபட்டு வரும் கேரள அரசை கண்டித்தும், மௌனம் காத்து இரு மாநில மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்தும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த வலியுறுத்தியும், தமிழகத்தின் 5 மாவட்டங்களின் விவசாயத்தை பாதுகாக்க வலியுறுத்தி தேனியில் மாபெரும் தர்ணா போராட்டத்தை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI)நடத்தியது.
இன்று (18-12-2011) காலை 10 மணியளவில் பெரிய குளம் ரோட்டில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்திற்கு சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி அவர்கள் தலைமை தாங்கினார்.
தெஹ்லான் பாகவி அவர்கள் தனது உரையில்; “மத்திய அரசு தொடந்து தமிழக நலனை, தமிழர்களின் நலனை புறக்கணித்து வருகிறது. காவிரி ஒரு நாள் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்த கர்நாடகாவை கட்டுப்படுத்தி தமிழகத்திற்கு உரிய நீரை பெற்றுத்தர வேண்டியது மத்திய அரசின் கடமை. ஆனால் இக்கடமையிலிருந்து தொடர்ந்து பின் வாங்கியிருக்கிறது.

ஈராக்கில் மீண்டும் ஆயுதம் தாங்கிய குழு – அமெரிக்காவின் புதிய தந்திரம்


பாக்தாத்:அமெரிக்க ராணுவம் ஈராக்கை விட்டு வெளியேறுவதில் மகிழ்ச்சி அடைந்து அமெரிக்க கொடியை எரித்து ஈராக்கின் நகரமான ஃபலூஜாவில் சில தினளுக்கு முன்  பல்லாயிரக்கணக்கானோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட செய்தி அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில்  அமெரிக்கா தனது தூதரக பணிகளுக்காக சுமார் பதினெட்டாயிரம் நபர்களை தெரிவு செய்ய திட்டமிட்டுள்ளது. இதில்  3,500 முதல் 5,500 நபர்கள் ஆயுதம் தாங்கிய தனியார் காவல் படையினர். இந்த  தனியார் காவல் படையினரும் அதன் குத்தகைதாரர்களும் அமெரிகர்களே. இதன்மூலம் தான் வெளியேறுவது போன்று ஒரு நாடகத்தை நடத்தி மீண்டும் ஆயுதம் தாங்கிய அமெரிக்கர்களை ஈராக்கில் நிலை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இந்த ஆயுதம் தாங்கிய காவல் படையினரை ஈராக்கில் நிலைநிறுத்துவது ஈரானுக்கு எதிரானது என்பது சர்வதேச அரசியல் நோக்கர்களின் கருத்தாகும். மேலும் எந்த நிலையிலும் ஈராக் ஈரானுடன் நல்லுறவு கொள்ளாதவாறு இருப்பதையே அமெரிக்கா விரும்கிறது.
ஆக மழை விட்டாலும் தூறல் நிற்கவில்லை என்ற கதையாக ராணுவ வீரர்களை வாபஸ் பெற்றுவிட்டு அதற்கு பதிலாக தனியார் காவல் படையினரை பணியமர்த்துகிறது அமெரிக்கா.

குவைத் தேர்தல்: பெண்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது - இஸ்லாமிய அறிஞர்கள்.

குவைத்: சமீபத்தில் குவைத் அரசு ராஜினாமா செய்ததை தொடர்ந்து வருகின்ற ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் பெண்கள் போட்டியிட கூடாது என்று இஸ்லாமிய அறிஞரும், ஷரியா மற்றும் இஸ்லாமிய கல்லூரியின் முன்னால் முதல்வருமான டாக்டர். அஜீல் அல்-நாஷ்மி தனது அறிக்கையில் கூறியுள்ளார். அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் "பெண்கள் தேர்தலில் ஒட்டு போடுவதற்கும், அவர்களுடைய உரிமைகளை கேட்டு பெறுவதற்கும் எந்த தடையும் இல்லை. ஏனென்றால் நபி(ஸல்) அவர்களின் காலம் முதல் எந்த பெண்களும் அரசு சம்பந்தமான அலுவல்களில் பங்கேற்றதாக வரலாறுகள் இல்லை. அதன் தொடர்ச்சியாக பெண்கள் அரசு அலுவல்களில் பங்கெடுக்கும் போது அந்நிய ஆடவருடன் பேசுவதற்கும், கலப்பதற்கும் வாய்ப்புள்ளது" என்றார்.

கடைசி சிறைக் கைதியை அமெரிக்க ராணுவம் ஈராக்கிடம் ஒப்படைத்தது


US hands over last detainee in Iraq

பாக்தாத்:அமெரிக்க ராணுவத்தின் காவலில் இருந்த கடைசி சிறைக் கைதியும் ஈராக் அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். லெபனானில் ஹிஸ்புல்லாஹ் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் அலி மூஸா தக்தகி என்பவர்தாம் இறுதியாக ஈராக் அரசிடம் ஒப்படைக்கப்பட்டார்.
2007-ஆம் ஆண்டு கர்பலாவில் ஐந்து அமெரிக்க ராணுவத்தினரை கடத்திச் சென்று கொலைச்செய்த வழக்கில் அலி மூஸா கைது செய்யப்பட்டார். கைதி ஒப்படைக்கப்பட்டதை குறித்து பதிலளிக்க மறுத்த ஈராக்கில் அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் புக்கன்னான் இக்கேள்வியை வாஷிங்டனில் இருப்பவர்களிடம் கேளுங்கள் என கூறினார்.
அதேவேளையில் அலி மூஸாவை அமெரிக்காவிடம் ஒப்படைப்பார்கள் என ஒபாமா அரசு நம்புவதாக வெள்ளைமாளிகை செயலாளர் ஜெ.கார்ணி தெரிவித்துள்ளார். ராணுவ கமிஷன் முன்பாக அலி மூஸா விசாரணை செய்யப்படுவார். இது தொடர்பாக ஈராக் தலைமையுடன் பேச்சுவார்த்தை தொடர்கிறது. அலி மூஸா மீதான குற்றத்திற்கு அவரை விசாரணை செய்யலாம் என்ற உறுதி கிடைத்துள்ளதாக கார்ணி தெரிவித்தார்.
ஒபாமா அரசு அமெரிக்க மக்களை ஏமாற்றியுள்ளது என குடியரசு கட்சியின் தலைவர் ஜான் மெக்கய்ன் குற்றம் சாட்டியுள்ளார். அதேவேளையில் அலி மூஸா, அமெரிக்க ராணுவத்தினரை கொலைச் செய்தார் என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை என ஈராக் நீதிமன்ற அதிகாரி தெரிவித்துள்ளார். ஆதாரம் இல்லை என்பது நீதிமன்றத்தில் நிரூபணமானால் அலி மூஸாவை விடுதலைச் செய்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பகவத் கீதை ரஷ்யாவில் தடைச் செய்யப்படுமா?

rus-bg_large
மாஸ்கோ:ஹிந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத்கீதை ரஷ்யாவில் தடைச்செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளது.
தீவிரவாதத்தை தூண்டும் நூல்களின் பட்டியலில் பகவத் கீதையை சேர்த்து அதனை தடைவிக்க முயற்சி நடைபெறுகிறது. இதுத்தொடர்பாக இறுதி தீர்ப்பு திங்கள் கிழமை நீதிமன்றம் வெளியிடும்.
பகவத் கீதையின் ரஷ்ய மொழிப்பெயர்ப்பை தடைச்செய்யக் கோரி டாம்ஸ்க் சிட்டி நீதிமன்றத்தில் கடந்த ஜுன் மாதம் முதல் வழக்கு நடைபெற்று வருகிறது.
பகவத் கீதையை தடைச்செய்யும் முயற்சியில் தலையிட பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ரஷ்யாவில் வாழும் ஹிந்து சமூகம் முறையிட்டுள்ளது. பகவத் கீதையை விரிவாக பரிசோதிக்க நீதிமன்றம் டாம்ஸ்க் மாநில பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டது.
பல்கலைக்கழகம், பகவத் கீதையின் உள்ளடக்கத்திற்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளது.

Saturday, December 17, 2011

இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் நடத்திய பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி

இந்தியா பிரடெர்னிடி ஃபோரம், தம்மாம் தமிழ் பிரிவு சார்பாக மாற்று மத அன்பர்களுக்கான பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி டிசம்பர் 16, 2011 அன்று தம்மாம் நாதா கிளப்பில் வைத்து நடைபெற்றது. மௌலவி முஹம்மது இக்பால் அவர்கள் திருக்குர்ஆனின் வசனங்களை ஓதி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தார். நாகூர் மீரான் அவர்கள் இந்தியா பிரடெர்னிடி ஃபோரம் ஆற்றி வரும் பணிகளை சுருக்கமாக கூறினார். சமூக பணிகளையும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த கூடிய நிகழ்ச்சிகளையும் ஃபோரம் செய்து வருவதை விளக்கினார். மதம், இனம், மொழி ஆகிய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஃபோரம் பணியாற்றி வருவதை சில சம்பவங்கள் மூலம் தெரிவித்தார்.

அரபு வசந்தத்தின் இடி முழக்கத்திற்கு ஓர் ஆண்டு நிறைவு!


Arab Spring

தென்மேற்கு துனீசிய நகரமான ஸிதி பூஸிதில் நடைபாதை காய்கறி வியாபாரி ஒருவர் சுயமாக தீக்குளித்து தற்கொலைச் செய்த சம்பவத்தில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. உலகின் பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு மணிநேரமும் நடைபெறும் அசம்பாவித சம்பவங்களில் இதுவும் ஒன்று.
ஆனால்,முஹம்மது புவைஸி என்ற சாதாரண அரபு இளைஞரின் மரணம், 2011 ஆம் ஆண்டில் மிகவும் சக்திமிக்க தீவிரமான தொடர் புரட்சிக்கு துவக்கம் குறித்தது.
அரபு வசந்தம் என்றும், மத்தியக் கிழக்கின் புரட்சி என்றும் அழைக்கப்படும் அரசியல், சமூக பூகம்பத்தின் பிறப்பிடமாக ஸிதி பூஸித் மாறியது. புவைஸியின் மரணம் நிகழ்ந்து இன்று ஒரு வருடம் நிறைவுறும் வேளையில் உலகின் பல பகுதிகளிலும் போராட்டத்தின் தீ ஜுவாலைகள் அணையவில்லை.

எகிப்தில் மீண்டும் மோதல்: ஏராளமானோர் படுகாயம்

Egypt's military clashes with protesters
கெய்ரோ:எகிப்தின் தலைநகரமான கெய்ரோவில் கேபினட் கட்டிடத்தின் முன்னில் போராட்டம் நடத்திய போராட்டத்தில் எதிர்ப்பாளர்களும், பாதுகாப்பு படையினரும் மோதலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த வியாழக்கிழமை போராட்டம் நடத்திய இளைஞரை போலீஸ் அடித்து உதைத்த வீடியோ படங்கள் இணையதளம் வழியாக வெளியானதை தொடர்ந்து எதிர்ப்பாளர்கள் வீதியில் இறங்கி போராடத் துவங்கினர்.
ராணுவ கவுன்சிலை கலைத்துவிட்டு வெகு விரைவாக ஆட்சியை சிவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்தனர். தண்ணீர் பீரங்கி மற்றும் கல்வீசி எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தியது பாதுகாப்பு படை. காயமடைந்த ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, பாராளுமன்றத் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை துவங்கியுள்ளது.