வாழைத்தண்டு நார்ச்சத்துள்ள உணவுப்பொருளாகும். வாழைத்தண்டினை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இது உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில் வாழைத்தண்டு அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும். நீர் சுருக்கு ஏற்படாமல் பாதுகாக்கும்.
Wednesday, April 18, 2012
சிறுநீரக கல்லை காணாமல் போக்கும் வாழைத்தண்டு
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.10 வரை உயர்த்துவோம்- எண்ணெய் நிறுவனங்கள் எச்சரிக்கை
இந்த நிறுவனத்தின் தலைவரான ஆர்.எஸ்.புடோலா கூறுகையில், ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ. 14.78 கலால் வரி விதிக்கப்படுகிறது. இதை நாங்கள் மத்திய அரசுக்கு செலுத்துகிறோம். இப்போது ஒரு லிட்டரை பெட்ரோல் விற்பதால் எங்களுக்கு ரூ. 8 முதல் ரூ. 10 வரை நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
Tuesday, April 17, 2012
நெல்லையிலிருந்து அமெரிக்கா போன 'ஹில்' கிருஷ்ணன்... நியூயார்க் நகராட்சி தேர்தலில் போட்டி!
அதிபர் பராக் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார் ஹில் கிருஷ்ணன். மேல் கிழக்கு பகுதியிலிருந்து போட்டியிடும் ஹில் கிருஷ்ணனின் பூர்வீகம் நெல்லை மாவட்டமாகும். 10 ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஏகப்பட்ட கனவுகளுடன் அமெரிக்காவுக்கு வந்திறங்கினார். இன்று அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.
பாப்புலர் ஃப்ரண்டின் சமூம மேம்பாடு பணிகள் - மார்ச் மாத ரிப்போர்ட்

சென்னை:
1. சென்னையில் எம்.டி. படிப்பிற்காக ஒரு மாணவனுக்கு ரூபாய் 40,000 கடனாக வழங்கப்பட்டது.
2. நான்காம் வகுப்பு படிக்கும் அல்லாஹ் பக்ஷ் என்ற மாணவனுக்கு ரூபாய் 3460/- வழங்கப்பட்டது. மற்றொரு மாணவனுக்கு ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.
3. இராயபுரத்தில் கேன்சர் சிகிசைக்காக ஒரு நபருக்கு ரூபாய் 10,000/- வழங்கப்பட்டது.
4. உனைஸ் ரஹ்மான் என்ற 13 மாத குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்காக ரூபாய் 15,000 வழங்கப்பட்டது.
5. டயாலிஸிஸ் செய்வதற்காக ஒருவருக்கு ரூபாய் 1300/- உதவித்தொகை வழங்கப்பட்டது.
6. வியாபாரம் செய்ய ஒருவருக்கு ரூபாய் 5000/- வழங்கப்பட்டது.
கர்நாடகத்துக்கு தண்ணீர் தருவது பாம்புக்கு சாப்பாடு தருவது மாதிரி: பால் தாக்கரே
இரு மாநிலங்களிலும் வறட்சியால் பாதித்த மாவட்டங்களுக்கு நதி நீரைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக இரு மாநிலங்களும் சமீபத்தில் ஒப்பந்தம் செய்து கொண்டன. இதன்படி மகாராஷ்டிரம் தனது தூத் கங்கா மற்றும் வர்ணா ஆறுகளில் இருந்து கர்நாடகத்தின் வறட்சி பாதித்த வட மாவட்டங்களுக்கு 2 டிஎம்சி நீரைத் தர ஒப்புக் கொண்டுள்ளது.
மாடிப்படி ஏறுங்க! இதயநோய் வராது!
மாடி ஏற படிகளை உபயோகித்தால் உடல்பருமன், இதயநோய் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
ஜிம்மிற்கு சென்று பணம் செலவழித்து உடற்பயிற்சி செய்வதைக்காட்டிலும் மாடிப்படி ஏறுவது சிறந்த உடற்பயிற்சி என்கின்றனர் நிபுணர்கள். மாடிப்படி ஏறும்போது உடலின் அனைத்து பகுதிகளும் இயங்குகின்றன. இதன் காரணமாக உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து காணமல் போகின்றன.
இமயமலையில் சர்ச்சைக்குரிய அக்சாய் சின் பகுதியில் பிரம்மாண்ட வானியல் மையம் கட்டும் சீனா
இந்தியா-சீனா உறவு நிலை
சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சனை பல ஆண்டுகாலமாக நீடித்து வருகிறது. இதற்காக இந்தோ-சீனா யுத்தமும்கூட நடந்திருக்கிறது.
Sunday, April 15, 2012
குவைத் இந்தியா ஃபிரடர்நிட்டி ஃபாரம் நடத்திய ஆரோக்கிய வாழ்விற்கான கருத்தரங்கம்
குவைத்:குவைத் இந்தியா ஃபிரடர்நிட்டி ஃபாரம் (KIFF) ஒரு மாத காலம் நடத்தும் "ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை" விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று (13/04/2012) ஜம்மியத்துல் இஸ்லாஹி ரவ்தா ஆடிட்டோரியத்தில் வைத்து கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.சரியாக மாலை 6:45 மணிக்கு சகோதரர் அப்துல் பாரி அவர்கள் திருமறை குர்ஆன் வசனங்கள் ஓத சகோதரர் சிக்கந்தர் பாட்ஷா அவர்களின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சி இனிதே துவங்கியது.நிகழ்ச்சி முழுவதையும் சகோதரர் சிக்கந்தர் பாட்ஷா அவர்களே தொகுத்து வழங்கினார்கள்.
பின்னர் KIFF-ன் தலைவர் அப்துல் சலாம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.அவர் தனது உரையில் இந்நிகழ்ச்சிக்கான முக்கியத்துவத்தையும் தேவையையும் எடுத்து கூறினார்.அதன் பிறகு ஜம்மியத்துல் இஸ்லாஹி தலைவர் டாக்டர்.சுலைமான் ஷெட்தி அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள்.இஸ்லாத்தில் உள்ள உணவு முறைகளை பற்றி விரிவாக கூறிய அவர், இதற்கு ஏற்பாடு செய்த KIFF-க்கு பாராட்டுக்களை தெரவித்தார்.
பின்னர் KIFF-ன் தலைவர் அப்துல் சலாம் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.அவர் தனது உரையில் இந்நிகழ்ச்சிக்கான முக்கியத்துவத்தையும் தேவையையும் எடுத்து கூறினார்.அதன் பிறகு ஜம்மியத்துல் இஸ்லாஹி தலைவர் டாக்டர்.சுலைமான் ஷெட்தி அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள்.இஸ்லாத்தில் உள்ள உணவு முறைகளை பற்றி விரிவாக கூறிய அவர், இதற்கு ஏற்பாடு செய்த KIFF-க்கு பாராட்டுக்களை தெரவித்தார்.Wednesday, April 11, 2012
KIFF நடத்தும் "ஆரோக்கியமான வாழ்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை" கருத்தரங்கம்
கருத்தரங்கம் KIFF-ன் தலைவர் திரு.அப்துல் சலாம் அவர் களின் தலைமையில் டாக்டர்.சுலைமா ன் ஷாதி, தலைவர், ஜமியதுல் இஸ்லாஹ் அவர் களின் துவக்க உரையோடு தொடங்கப்படும், சிறப்பு பேச்சாளர்களாக டாக்டர். அப்துர் ரகுமான் (ஜஹ்ரா அரசு மருத்து வமனை) மற்றும் டாக்டர். தாமஸ் ஐசக் (அல்-சபாஹ் மருத்துவமனை) அவர் கள் முறையே ஆரோக்கியமும்,இஸ்லா மும் மற்றும் இதய நோய்களும், தீ ர்வுகளும் என்ற தலைப்புகளில் உரை நிகழ்த்த இருக்கிறார்கள்.மேலும் உடற்பயிற்சியின் செயல்மு றை விளக்கங்களும் விளக்கப்படும்என்று KIFF- ன் தலைவர் பத்திரி க்கையாளர்கள் சந்திப்பின் போது கூறினார்.
மும்பை அருகே அரபிக் கடலிலும் நிலநடுக்கம்
மும்பை: மும்பை அருகே அரபிக் கடலில் இன்று 3.4 அளவுக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் ரிக்டர் அளவுகோலில் 8.9 அளவுக்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேலும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிம் மும்பை அருகே அரபிக் கடலில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மும்பையில் இருந்து 155 கிமீ தொலைவில் உள்ள இடத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4க பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வுத்துறை இயக்குனர் ராஜீவ் நாயர் தெரிவித்துள்ளார்.
சுனாமி எச்சரிக்கை எதிரொலி: கடலோரப் பகுதி மக்களை வெளியேற்றும் நாடுகள்
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தோனேசியா உள்பட பல நாடுகளின் கடலோரப் பகுதிகளில் வாழும் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவு அருகே அசே பகுதியில் இன்று மிக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 8.9 ஆக பதிவாகியுள்ளது. பசிபிக் கடலில் நிலத்துக்கடியில் 33 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட இந்தியாவின் கிழக்குப் பகுதிகள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து உள்பட உலகம் முழுவதும் 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் இந்தியா, சிங்கப்பூர், தாய்லாந்தி்ல் ஆகிய நாடுகளில் உணரப்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தோனேசியாவின் கடலோரப் பகுதிகளில் வாழ்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். எச்சரிக்கை விடப்பட்டாலும் சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்று அந்நாட்டு அதிபர் சுசிலோ பம்பாங் தெரிவித்துள்ளார். அங்கு ஏறப்ட்டுள்ள சேதமதிப்பு குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.
புதுவையில் மாலை 4.30 மணிக்கும், சென்னையில் 5 மணிக்கு சுனாமி தாக்கலாம்?
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து இந்தியாவில் சென்னை, விசாகப்பட்டினம், பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளிலும், தமிழ்நாட்டின் முக்கிய கடற்கரை நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்தோனேசியா உள்ளிட்ட 28 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Sunday, April 8, 2012
ராணுவ தளபதி வி.கே.சிங், அப்பழுக்கற்ற நற்பெயர் கொண்டவர்:அழுக்கு அத்வானி கூறுகிறார்
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி நாளை டெல்லி வரும் நிலையில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை அழிக்குமாறு மத்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்று அத்வானி கோரிக்கை விடுத்துள்ளார். பாகிஸ்தான் அதிபர் சர்தாரி நாளை டெல்லி வருகிறார். ஆஜ்மீர் தர்காவுக்கும் செல்கிறார். இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, மும்பை வந்த பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானி, அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் மண்ணை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷரப், இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு வாக்குறுதி அளித்தார்.
மகனுடன் டெல்லி வந்தார் சர்தாரி- பிரதமருடன் சந்திப்பு- ஆஜ்மீர் தர்காவில் வழிபாடு!
பாகிஸ்தான் விமானப்படை விமானம் மூலம் சர்தாரி டெல்லி பாலம் விமான நிலையத்தில் இன்று பிற்பகல் வந்து இறங்கினார். அவருக்கு அங்கு இந்திய அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து சர்தாரி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள பிரதமரின் இல்லத்திற்குச் சென்றார். அங்கு அவரை பிரதமர் வரவேற்றார்.
Wednesday, April 4, 2012
கணவனை காப்பாற்ற விமானத்தை தரையிறக்கிய மனைவி
வாஷிங்டன்: அமெரிக்காவில் சிறிய விமானத்தில் பயணித்த 80 வயது தம்பதியினர் நடுவானில் கணவர் திடீரென மயங்கியதால், மனைவியே விமானத்தை தரையில் இறக்கினார். ஆனால் மருத்துவ வசதி கிடைப்பதற்குள்ளாக கணவன் பரிதாபமாக இறந்தார்.அமெரிக்காவில் விஸ்கோன்சின் மாகாணத்தில் டோர்கவுண்டி செர்ரிலாண்ட விமானநிலையத்தில் இருந்து சிறிய விமானத்தில் கடந்த திங்களன்று 81 வயது கணவரும், 80 வயது மனைவியும் பயணித்தனர்.நடுவானில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டதால் கணவருக்கு திடீரென மயக்கமும் நரம்பு தளர்ச்சியும் ஏற்பட்டதால் பதட்டம் அடைந்தார். அப்போது விமானம் நிலை தடுமாறியது. இதனை அருகில் இருந்த 80 வயது மனைவி சமயோசிதமாக செயல்பட்டு தானே விமானத்தை தரையில் இறக்க முயன்றார்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு: ப. சிதம்பரத்தை விசாரிக்கக் கோரும் மனு மீது ஏப்ரல் 11 முதல் விசாரணை
இம்மனுக்களை இன்று விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 11 முதல் 13ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்தது.
இந்தியாவில் ராணுவ புரட்சிக்கு முயற்சியா?: பிரதமர்-பாதுகாப்பு அமைச்சர் மறுப்பு
வயது பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ராணுவ தளபதி வி.கே.சிங் வழக்கு தொடர்ந்திருந்தபோது மத்திய அரசுக்கு தெரிவிக்காமல் கடந்த ஜனவரியில் ராணுவத்தின் இரண்டு பிரிவுகள் தலைநகர் டெல்லியில் குவிக்கப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
Tuesday, April 3, 2012
மிஞ்சியது ஏமாற்றமே!!
வழக்கத்திற்கு மாறாக அன்று நான் மிகவும் குழம்பிய நிலையில் என்னுடைய அலுவலக பணிகளை செய்து கொண்டிருந்தேன். அந்த குழப்பத்திற்கான காரணத்தை யாரிடமாவது சொல்லவேண்டும் என்று என்னுடய மனம் எண்ணியது. மதிய இடைவேளை அப்போது. என்னுடைய நண்பன் அமீர் எனதருகில் வந்து "நீ ஏதோ குழம்பிய நிலையில் உள்ளாய். அதற்கான காரணம் என்ன?" என்று வினவினான்.
எனக்கோ ஒரு ஆறுதல் வந்தது போல, "ஆம். நானும் காலையில் தினசரிகளை புரட்டிய பிறகே என்னுடைய அலுவல்களை தொடங்கினேன். இன்றைய ஒரு செய்தி என்னை மிகவும் குழம்பிய நிலைக்கு கொன்டு சென்றுவிட்டது. அதுதான் ராணுவத்தில் நடந்த ஊழலை பற்றி ராணுவ தளபதி வி.பி. சிங் அளித்த பேட்டி" என்றேன்.
Monday, April 2, 2012
KIFF நடத்தும் "ஆரோக்கியமான வாழ்க்கையே மகிழ்ச்சியான வாழ்க்கை" நிகழ்ச்சி
பின்னர் சகோதரர் ஹசன் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.அதன் பிறகு ஆரோக்கியம் சம்பந்தமான புத்தகம் வெளியிடப்பட்டது.அதை KIFF-இன் தலைவர் அப்துல் சலாம் வெளியிட KIFF-இன் தமிழ் பிரிவு தலைவர் அம்ஜத் அலி அவர்கள் பெற்று கொண்டார்கள்.அது தமிழ்,மலையாளம்,கன்னடம்,இங்கிலீஷ்,உருது என 5 மொழிகளில் வெளியிடப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)
