Tuesday, January 3, 2012

இந்தியா: 7 மாநிலங்களில் விவசாயத் திட்டத்தை துவக்குகிறது இஸ்ரேல்


ஜெய்பூர்: விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுப்பதற்கும் மத்தியகிழக்கில் பயங்கரவாத நாடாக திகழும் இஸ்ரேல் இந்தியாவில் கால்பதிக்கிறது, ஏழு மாநிலங்களில் வருகின்ற ஏப்ரல் மாதம் விவசாய திட்டத்தை துவக்க இருக்கிறது.

ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விவசாய திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என புதுடெல்லியில் இஸ்ரேல் தூதரகத்தில் இத்திட்டத்தின் தலைவர் யஹேல் விலன் அறிவித்துள்ளார்.

மாநில அரசுகளின் உதவியுடன் நடைமுறைபடுத்தப்படும் இத்திட்டத்தின் நோக்கம் விவசாய பொருட்களின் விளைச்சலை அதிகரிக்கவும் இஸ்ரேலின் தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு கற்றுகொடுப்பதும் ஆகும் என யஹேல் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் ௩௦க்கும் மேற்பட்ட செயல் திட்டங்கள் உருவாகும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த யஹேல் ஏற்கனவே குஜராத், ஹரியானா மாநிலங்களில் ஒரு சில செயல்திட்டங்களில் இஸ்ரேல ஒத்துழைக்கிறது என கூறினார்.

இஸ்ரேலின் சுரண்டலை தடுப்போம் - துருக்கி, நன்றி சொல்கிறது ஹமாஸ்


துருக்கிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் ஆட்சிபுரியும் ஹமாஸின் பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா 2010இல் இஸ்ரேல் ராணுவத்தால் தாக்கப்பட்ட மாவி மர்மரா கப்பலை பார்வையிட்டார். தாக்குதலில் கொல்லப்பட்ட ஒன்பது துருக்கி தன்னார்வ தொண்டர்களுக்காக இஸ்தான்புல்லிற்கு சென்ற ஹானிய்யா பிரார்த்தனை புரிந்தார்.

2007-ஆம் ஆண்டு காஸ்ஸாவில் ஆட்சிப்பொறுப்பை ஹமாஸ் ஏற்றபிறகு முதன் முறையாக ஹானிய்யா வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு.


சென்னை: எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி தேர்வுத்துறை இன்று வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் சமச்சீர் கல்வியை அறிமுகபடுத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் பத்தாம் வகுப்பு தேர்வு தாமதமாக தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது, அதன் அடிப்படையில் வரும் ஏப்ரல் 4-ம் தேதி தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, January 2, 2012

தினமும் பிளக் டீ குடித்தால் மாரடைப்பு வருவது குறையுமாம் - ஆய்வில் தகவல்




அடிக்கடி டீ குடிப்பது நல்லதல்ல என சிலர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால், தினமும் 3 கப் பிளாக் டீ குடித்தால் மாரடைப்பு, சர்க்கரை நோயிலிருந்து தப்பிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கேரி ருக்ஸ்டன் மற்றும் பமீலா மேசன் தலைமையிலான ஆய்வு குழுவினர் நோய் வராமல் தடுப்பதில் பிளாக் டீக்கு உள்ள பங்கு பற்றிய ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு முடிவு குறித்து இங்கிலாந்தின் ஊட்டச்சத்து பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

அதன் விவரம் வருமாறு: பிளாக் டீ குடிக்காதவர்களைவிட குடித்தவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது ஆய்வில் தெரிகிறது. அதாவது, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தவிர்க்கவும், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், ரத்தக் குழாய் சுருங்கி ரத்த ஓட்டம் தடைபடுவதை தவிர்க்கவும் பிளாக் டீ உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் ஒவ்வொரு வருடமும் ஒரு இலட்சம் முஸ்லிம்களுக்கு குடியுரிமை


பிரான்ஸ் நாட்டில் இனி குடியுரிமை கேட்டு வரும் வெளிநாட்டவர்கள் பிரெஞ்ச் மொழியையும் , கலாசாரத்தையும் ஏற்றுக்கொண்டிருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும் என்று உள்துறை அமைச்சர் கிளர்டி குயெண்ட் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை கேட்டுவரும் நபர்கள் தனது உரிமை மற்றும் பொறுப்புணர்வுக்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். குடியுரிமை விண்ணப்ப தாரர்கள் பிரான்சில் இருந்து கொண்டே இன்னொரு நாட்டில் குடியுரிமையைப் பெறக் கூடாது. ஆனால் இரட்டைக் குடியுரிமைக்கு அனுமதி உண்டு.

பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசியின் ஆளுங்கட்சி உறுப்பினரான குயெண்ட் கூறுகையில், பிரெஞ்ச் மொழியின் சமுக, மதிப்புகள் மற்றும் குயிaடுகளை ஏற்றுக் கொள்கின்ற இந்த நடைமுறை ஒரு நிகழ்வாகும் என்றார். இத்தகைய நடைமுறையைப் புகுத்த வேண்டிய அவசியம் இப்போது பிரான்சுக்கு எழுந்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1,00,000 முஸ்லிம்கள் பிரான்ஸ் குடியுரிமை பெறுகின்றனர். இவர்கள் பிரென்ஸ¤க்காரராக மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று மனைவியுடன் வாழ்பவருக்கு பிரென்ஸ் குடியுரிமை அளிக்கக் கூடாது என்றார்.

இந்தியா: முஸ்லிம் இடஒதுக்கீட்டை எதிர்த்து பிரச்சாரம்-பிரவீன் தொகாடியா.

                                                    அகமதாபாத்: இந்து தீவிரவாத அமைப்பான பஜ்ரதள் ஏற்பாடு செய்திருந்த திரிசூலம் விநியோகிக்கும் விழாவுக்கு மற்றுமொரு இந்து தீவிரவாத அமைப்பான வி.ஹெச்.பி-யின் அகில உலக தலைவர் பிரவீன் தொகாடியா ஆற்றிய உரையில் "மத்திய அரசு மிகவும் பின்தங்கிய மக்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 4.5 சதவிகித உள்ஒதுக்கீடு முடிவை திரும்ப பெற வேண்டும், அப்படி இல்லையென்றால் உள்நாட்டு கலவரம் வெடிக்கும்" என்று கூறினார் . 

Sunday, January 1, 2012

காஸாவை தாக்க இஸ்ரேல் தயார் - முறியடிக்க முஸ்லிம் போராளிகளுக்கு அழைப்பு


வெகுவிரைவில் காஸா மீண்டும் தாக்கப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகளைத் தம்முடைய படையணியினர் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை உயரதிகாரி பென்னி கான்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவ இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமது தரைப்படையினருக்கு முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமான இராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட்டிருப்பதால், மூன்று வருடங்களுக்கு முன்னர் காஸா மீது தொடுக்கப்பட்ட ஆக்கிரமிப்புப் போரை விட இந்தப் போர் மிக வித்தியாசமானதாகவும் உக்கிரமானதாகவும் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினருக்கு இரவு நேரத் தாக்குதல் நடவடிக்கைகளில் இம்முறை அபரிமிதமான தேர்ச்சி அளிக்கப்பட்டிருக்கின்றது எனவும், அதிசக்திவாய்ந்த வெடிகுண்டுகளைப் பயன்படுத்திப் பாதைத் தடைகளைத் துரிதமாகத் தகர்த்துக்கொண்டு காஸாவை நோக்கி அவர்கள் மிக வேகமாக முன்னேறிச் செல்வார்கள் எனவும் கான்ட்ஸ் தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.  

கிறிஸ்தவர் மீது தாக்குதல் - ஜும்ஆ பிரசங்கத்தில் யூசுப் அல் கர்ழாவி கண்டனம்


நைஜீரியாவில் சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் சபையின் தலைவரான டாக்டர்.யூசுஃப் அல் கர்ழாவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவில் உள்ள உமர்பின் கத்தாப் மஸ்ஜிதில் ஜும்ஆ உரை நிகழ்த்திய அவர் கூறியதாவது,

நைஜீரியாவில் சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கதும், இஸ்லாத்தின் உயர்வான கொள்கைகளுக்கு எதிரானதுமாகும். இத்தகைய தாக்குதல்களை நடத்துவது இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றும் அளவுக்கு கடுமையான குற்றமாகும். இதர மதத்தவர்களின் வழிப்பாட்டுத் தலங்களை பாதுகாப்பது ஆட்சியாளர்களின் கடமையாகும். நமது அரசியல் சட்ட அமைப்பில் இதர மதத்தவர்களும் எல்லாவித உரிமைகளுக்கும் தகுதி உடையோர் ஆவர்.

ஹமாஸை வாழ்த்தி வரவேற்போம் - துருக்கி அறிவிப்பு

"பிராந்திய நல்லுறவைப் பலப்படுத்துமுகமாக துருக்கிக்கு விஜயம் செய்யவுள்ள பலஸ்தீன் பிரதமர் இஸ்மாயீல் ஹனீய்யாவின் நோக்கம் பாராட்டுக்குரியது" என துருக்கிய வெளிநாட்டமைச்சர் அஹ்மத் தாவூடொக்லூ தெரிவித்துள்ளார்.


"துருக்கிக்கு வருகைதரும் பலஸ்தீன் பிரமுகர்களை துருக்கி வாழ்த்தி வரவேற்கும். இதற்கு முன்னர் மஹ்மூத் அப்பாஸ், காலித் மிஷைல் போன்ற பலஸ்தீன் பிரமுகர்களை வரவேற்றது போலவே இஸ்மாயில் ஹனிய்யாவும் விமரிசையாக வரவேற்கப்படுவார்" என அன்காராவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய துருக்கிய வெளிநாட்டமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

"அந்நிய ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருக்கும் பலஸ்தீன் போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கு அதனை எதிர்த்துப் போராடும் தார்மீக உரிமை உண்டு" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பாபுலர் ஃ ப்ரண்ட் சிறுபான்மை துறை அமைச்சருக்கு கடிதம்


முஸ்லிம் சமுதாயத்தின் நியாயமான பிரச்சனையான இட ஒதுக்கீடு கோரிக்கைகளை தீர்க்கும் வகையில் சிறுபான்மை துறை அமைச்சர் சல்வாம் குர்ஷித் அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.


முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனைகள் முடிவுக்கு வந்துவிட்டது, அனைத்து அமைச்சரகம், அரசு நிறுவனத்தின் இறுதி ஆலோசனையை கேட்ட பின்பு உள்துறை அமைச்சகம் இறுதி அறிக்கையை சமர்பிக்க ஏற்பாடு செய்துள்ளது என அமைச்சர் சொன்னதை கடிதம் எடுத்துக்காட்டியுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்டின் முழக்கம் மற்றும் ஆலோசனை இந்த நாட்டில் வாழ்ந்து வரும் எல்லா முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதை உள்ளடக்கியதாகும். அதே சமயத்தில் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தலித்துகளின் தேவைகளையும் கருத்தில் கொண்டுள்ளது பாப்புலர் ஃப்ரண்ட்.

Saturday, December 31, 2011

சவுதிஅரேபியாவுக்கு ஈரான் அச்சுறுத்தலாம் - அமெரிக்கா போர் விமானங்கள் வழங்குகிறது


சவுதிஅரேபியாவுக்கு அமெரிக்கா போர் விமானங்களை விற்கிறது.   சவுதிஅரேபியாவுக்கு அதன் அண்டை நாடான ஈரான் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே அது தனது ராணுவ பலத்தை பெருக்கி வருகிறது. அதற்காக தனது நட்பு நாடான அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கி குவிக்கிறது. 

இந்த நிலையில் போர் விமானங்களை வாங்குவது குறித்து கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து இருந்தது. அதன்படி சவுதி அரேபியாவுக்கு 84 போயிங் எப்-15 ரக போர் விமானங்களும், மற்றும் 70 அதிநவீன போர் விமானங்களையும் அமெரிக்கா வழங்குகிறது. மேலும் ஹெலி காப்டர்கள், ஏவுகணைகள், வெடி குண்டுகளும் வழங்கப்பட உள்ளன. அவற்றின் விலை ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி.

இதற்கான அதிகாரப் பூர்வ தகவல் ஹவாயில் இருந்து நேற்று வெளியிடப்பட்டது. தற்போது அங்குதான் அதிபர் ஒபாமா விடுமுறையை கழித்து வருகிறார். 

இந்தியா: லோக்பால் மசோதா வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உறுதியாக நிறைவேறும் - ப.சிதம்பரம்.

புதுடெல்லி:  மாநிலங்களவையில் 187 திருத்தங்களை செய்யச்சொல்லி கடும் அமளியில் எதிர்கட்சிகள் மற்றும் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டதால் லோக்பால் மசோதா நிறைவேறாமல் மாநிலங்களவை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 


 வருகின்ற பட்ஜெட் கூட்ட தொடரில் லோக்பால் மசோதா கண்டிப்பாக நிறைவேறும், எதிர்கட்சிகள் கூறும் 187 திருத்தங்களை செய்யமுடியாது, மூன்று திருத்தங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளமுடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்தார். கூட்டணி கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சமாதானபடுத்தி வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

குவைத்: ஓட்டுக்கு பணம் - தடுப்பதற்கு குழுக்கள் அமைக்கப்படும்.

குவைத் சிட்டி: வருகின்ற பிப்ரவரி 2 அன்று நடைபெற இருக்கும் பொது தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்கு தனித்தனி குழுக்கள் அமைத்து கண்கானிக்கபோவதாக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார், இந்த குழுவில் அரசு சாரா அமைப்புகளின் உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள் என்று கூறினார். குவைத் வெளிப்படை சமூகம், குவைத் வழக்கறிஞர்கள் சங்கம், மற்றும் குவைத் பத்திரிக்கையாளர்கள் சங்கம் போன்ற அமைப்புகள் அடங்கும். மேலும் தேர்தலின் போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.