Thursday, March 15, 2012
வெளிமாநில மாணவர்களின் உரிமை: உள்துறை செயலாளருக்கு பிஎஃப்ஐ கோரிக்கை!
Wednesday, March 14, 2012
முதல்வராக இருந்த 5 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரி்த்த மாயாவதியின் சொத்து
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ராஜ்யசபா எம்.பி. பதவிக்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது சொத்து விவரங்களையும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.52 கோடி சொத்து வைத்திருந்த அவர் தற்போது ரூ.111.26 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வைத்துள்ளார். அவர் உத்தர பிரதேச முதல்வராக இருந்த கடந்த 5 ஆண்டுகளில் தான் அவரது சொத்து இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
SDPI தலைவர் மீதான பொய் வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் !
ரெயில்வே பட்ஜெட் தாக்கல்:பாதுகாப்பிற்கு முன்னுரிமை – அனைத்து வகுப்புக் கட்டணமும் உயர்வு !
புதுடெல்லி:தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள ரெயில்வே அமைச்சர் திரிவேதி டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். அனைத்து வகுப்பு கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2 பைஸா முதல் 30 பைஸா வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் முதன் முறையாக ரெயில்வே டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரெயில்வேயின் பாதுகாப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளித்து இம்முறை ரெயில்வே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. 2012-13 ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட் ஒரு கண்ணோட்டம்:
ரெயில்வேயின் பாதுகாப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளித்து இம்முறை ரெயில்வே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. 2012-13 ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட் ஒரு கண்ணோட்டம்:
Tuesday, March 13, 2012
இஸ்ரேலியர்களுக்கு ஆயுள்தண்டனை: எகிப்து நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு !
தரையிறங்கும்போது ரன்வேயில் மோதிய ஏர் இந்தியா விமானத்தின் வால் பகுதி
Sunday, March 11, 2012
எடியூரப்பாவுக்கு மீண்டும் ஏமாற்றம்: முதல்வராக்க கட்காரி மறுப்பு !
கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பதவியிலிருக்கும்போது சுரங்க மோசடியில் ஈடுபட்டதாக எடியூரப்பாமீது லோக்ஆயுக்தா அறிக்கை குற்றம் சுமத்தியது. இதனைத் தொடர்ந்து எடியூரப்பாவைப் பாஜக முதல்வர் பதவியிலிருந்து நீக்கியது.
ஜப்பானை நிலநடுக்கம், சுனாமி தாக்கி ஒரு வருடம் நிறைவு: மக்கள் கண்ணீர் அஞ்சலி
11-3-2011 அன்று பிற்பகல் 2.26 மணிக்கு வடகிழக்கு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 9 ஆக பதிவானது. இதையடுத்து சுனாமி பேரலைகள் எழுந்து அப்பகுதியை சின்னாபின்னமாக்கியது. ஜப்பான் வரலாற்றிலேயே மோசமான இயற்கை பேரழிவு இது தான். இந்த இரட்டைப் பேரழிவுகளால் ஃபுகுஷிமாவில் உள்ள 6 அணுஉலைகளில் 4 உலைகள் வெடித்துச் சிதறின. இதனால் அங்கு கதிர் வீச்சு அபாயம் ஏற்பட்டது.
நாடாளுமன்றம் நாளை கூடுகிறது... இந்தமுறையும் பிரச்சினைகள் புயலைக் கிளப்பும்!
5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடைபெறும் இந்த தேர்தலில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளன. வழக்கமாக ரயில்வே பட்ஜெட் மற்றும் மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாத இறுதியில் தாக்கல் செய்யப்படும். எனினும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றதால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தள்ளி வைக்கப்பட்டது.
Saturday, March 10, 2012
அமெரிக்காவில் 34 லட்சம் இந்தியர் - 10 ஆண்டுகளில் கிடு கிடு உயர்வு!
அமெரிக்காவில் அதிகளவில் உள்ள பிற இனத்தவர்களில் அமெரிக்க சீனர்கள் முதலிடம் வகிக்கின்றனர். எண்ணிக்கையில் அவர்கள் கிட்டத்தட்ட 40 லட்சம் பேர். இவர்களுக்கு அடுத்து பிலிப்பினோ - அமெரிக்கர்கர்கள். அவர்களின் எண்ணிக்கை 34.2 லட்சம். அடுத்து இந்தியர்கள் 34 லட்சம் பேர் (இவர்களில் பெருமளவு தெலுங்கு மற்றும் தமிழர்கள்). இவர்களில் வாக்குரிமை பெற்ற இந்தியர் எண்ணிக்கை 10 லட்சம். அதாவது 1 மில்லியன். 2000-ம் ஆண்டில் இது 5 லட்சமாக இருந்தது. 10 ஆண்டுகளில் 100 சதவீதமாக வாக்குரிமை பெற்றோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
பத்திரிக்கையாளர் கைது : இந்தியாவில் நடப்பது UPA ஆட்சியா? அல்லது மொசாத் - CIA ஆட்சியா? - டெல்லி இமாம்
Press club of india, Delhi union of journalists போன்ற அமைப்புக்கள், பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களை தொடர்பு கொண்டு, பத்திரிக்கையாளர் முஹம்மது அஹ்மது காஜிமி' யின் விடுதலைக்காக குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர். மேலும் இவர்களுக்கு ஆதரவாக சட்ட மன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் களத்தில் உள்ளனர். டெல்லி ஜாமியா மசூதி இமாம் புகாரி அவர்களும், காஜிமி'யின் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்திற்கு, தாம் ஆதரவாக இருப்பேன் என்றும் உறுதி அளித்தார்.
Friday, March 9, 2012
சுரங்க முறைகேடு வழக்கிலிருந்து விடுபட்டதால் மீண்டும் முதல்வராவேன்-எடியூரப்பா
சுரங்க முறைகேடு வழக்கில் எடியூரப்பா மீதான எப்.ஐ.ஆரை நேற்று முன்தினம் கர்நாடக நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதைய்டுத்து நேற்று தமது ஆதரவாளர்களுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.
காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு: மின்தடை நேரம் குறைப்பு
கடந்த ஒன்றரை மாதமாக போதிய அளவு காற்று இல்லாததால் இப்பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் காற்று வீசத் துவங்கியுள்ளதால் சுமார் 10 மணி நேரமாக இருந்த மி்ன்தடை திடீரென 2 மணி நேரமாகக் குறைந்துள்ளது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: அதிமுகவிற்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆதரவு
Wednesday, March 7, 2012
சங்கரன்கோவில் இடைதேர்தல் மதிமுக விற்கு SDPI ஆதரவு
சங்கரன்கோவிலில் அமைச்சர் கருப்பசாமி இறந்ததால் அந்த தொகுதிக்கு இடைதேர்தல் அர்விக்கபட்டுள்ளது.இந்தே தேர்தலில் திமுக ,அதிமுக ,தேதிமக,மதிமுக உட்பட மேலும் பலர் பட்டியிடுகின்றனர்,இந்த தேர்தலில் SDPI யாருக்கு ஆதரவாக உள்ளது என்பதை தெரிய பலர் ஆர்வமாக இருந்தனர்,இந்த் ஆர்வத்தை போக்கும் பொருட்டு SDPI மாநில தலைவர் தெக்லான் பாக்கவி இன்று நெல்லையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறியதாவது இப்பொழுது உள்ள சூழ்நிலையில் பல மக்கள் பிரச்சினைகளை உறுதியுடன் போராடும் கட்சி மதிமுக மேலும் நம்மிடம் வந்து ஆதரவு கேட்டதன் அடிப்டையில் மதிமுக விற்கு SDPI ஆதரவு கொடுக்கிறது.
கிருஷ்ணகிரியில் குண்டு வெடிப்பு ஒருவர் பலி : ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் சதியா?
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே டீக்கடை அருகில் திடீரென குண்டுவெடித்ததில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார். சீனிவாசன் என்பவர் ராணுவத்தில் பணியாற்றுபவர். இவர் சொந்த ஊர் ஊத்தங்கரை அருகே உள்ள மோட்டான் கொட்டாய். சீனிவாசன் தனது நண்பர் ஒருவருடன் நேற்று(திங்கள்கிழமை) மாலை ஊத்தங்கரை பகுதியில் உள்ள டீக்கடையில் குடித்துவிட்டு பணம் கொடுத்துவிட்டு திரும்பும் வேளையில் குண்டு வெடித்துள்ளது. இதில் சீனிவாசன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார். அவ்வேளையில் சீனிவாசனுடன் வந்த நபர் தப்பி ஓடிவிட்டார்..
உ.பி தேர்தல்:69 முஸ்லிம்கள் வெற்றி! 64 தொகுதிகளில் 2-வது இடம் !
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 69 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். 64 தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்கள்2-வது இடத்தை பிடித்துள்ளனர். கடந்த தேர்தலை(2007) விட இந்த தடவை முஸ்லிம் வேட்பாளர்கள் 13 பேர் கூடுதலாக வெற்றிப் பெற்றுள்ளனர். 2007-ஆம் ஆண்டு 56 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றனர். அவர்களில் 2 பேர் முஸ்லிம் பெண்கள் ஆவர். இம்முறை(2012) 69 முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுள்ளனர். அவர்களில் 3 பேர் முஸ்லிம் பெண்களாவர்.
காங்கிரஸை கைவிட்ட முஸ்லீம்கள்.. மாயாவதியை கைவிட்ட தலித்கள்!
இந்தத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் சதவீத விவரம்:
சமாஜ்வாடி கட்சி - 29.2%. இது கடந்த தேர்தலைவிட 3.3% அதிகம்
பகுஜன் சமாஜ் கட்சி - 25.9%. இது கடந்த தேர்தலைவிட 3.3% குறைவு
பாஜக - 15%
காங்கிரஸ் - 11.6%. இது கடந்த தேர்தலைவிட 3% அதிகம்
ராஷ்ட்ரீய லோக் தள் - 3.7%
சுயேச்சைகள்-மற்றவர்கள் - 16%
Tuesday, March 6, 2012
5 மாநில தேர்தல் முடிவுகள்: அன்னா குழுவால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை
இதில் மணிப்பூரில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. காங்கிரஸ் ஆளும் கோவா பாஜகவுக்கு கிடைத்துள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் உத்தர்கண்டில் கடந்த சட்டசபை தேர்தலைவிட இந்த தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைப் பிடித்துள்ளது அல்லது இருக்கும் இடங்களை தக்க வைத்துள்ளது.
மர்வா ஸபா கவாக்ஸி: இந்நூற்றாண்டின் புரட்சிகரமான பெண்களில் ஒருவர் !
கலாச்சார உரிமைகள் குறித்து பேசும் ஐரோப்பாவில் உடுப்பதற்கான உரிமை மறுக்கப்பட்ட நிலையில், தனது குடியுரிமையையும் இழந்து அமெரிக்காவில் குடியேறியவர் கவாக்ஸி. இஸ்லாமிய அறிவுத் துறையிலும் சமூகப் பணிகளிலும் தஃவாவிலும் அரசியல் செயற்பாட்டிலும் ஓர் உயிர்த் துடிப்புள்ள ஆளுமையாக விளங்குகின்றவர். இந்நூற்றாண்டு கண்ட புரட்சிகரமான பெண்களில் ஒருவர்.
ஈரானுக்கு வக்காலத்து வாங்குகிறதா சீனா?
அணுச்சக்திவளப் பாவனையைக் காரணம் காட்டி ஈரான் மீது தடைகளை விதிப்பதை அனேகமான உலக நாடுகள் எதிர்க்கின்றன" என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் யாங் ஜியேச்சி குறிப்பிட்டுள்ளார்.
இன்று (06.03.2012) சீன நாடாளுமன்ற அமர்வின்பின் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், "ஈரான்மீதான தடைகள் ஒருதலைப்பட்சமானவை. உலகின் பெரும்பான்மையான நாடுகளைப் போல நாமும் அதனை ஏற்றுக்கொள்வதற்கில்லை" என்று தெரிவித்துள்ளார்.
Monday, March 5, 2012
உதயகுமார் பள்ளியின் சுற்று சுவரை இடித்து தள்ளிய ஹிந்துத்துவ பயங்கரவாதிகள் !
டெல்லி, வட மாநிலங்களில் 5.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்-மக்கள் ஓட்டம்
டெல்லி: வட இந்தியாவில் இன்று பிற்பகல் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் டெல்லியிலும் பலத்த அதிர்வுகளை மக்கள் உணர்ந்ததால் வீடுகள், கட்டடங்களை விட்டு அலறியடித்து ஓடி வந்தனர். இன்று பிற்பகல் 1.10 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தெற்கு டெல்லி, மத்திய டெல்லி உள்பட பல பகுதிகளில் நில அதிர்வு இருந்தது. அதேபோல புறநகர்ப் பகுதிகளான காசியாபாத், நொய்டா, குர்கான் போன்ற இடங்களிலும் மக்கள் நில அதிர்வை உணர்ந்தனர்.
பஹ்ரைன் புரட்சியாளர்களுக்கு டுனீசியர்கள் ஆதரவு !
வளைகுடா நாடுகளில் அண்மைக் காலமாய் மையங்கொண்டுள்ள புரட்சி அலைக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்குமுகமாக, "பஹ்ரைனின் நண்பர்கள்" எனத் தம்மை அழைத்துக்கொள்ளும் டூனீசியர்கள் குழுவொன்று கடந்த சனிக்கிழமை (03.03.2012) தலைநகர் டூனிஸில் ஒரு மாபெரும் கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தது. டூனீஸிய நோக்கில் பஹ்ரைன் புரட்சி' என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த மாபெரும் கருத்தரங்கில் ஏராளமான பஹ்ரைன் செயற்பாட்டாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Sunday, March 4, 2012
ஈரானில் மிகப்பெரிய எண்ணெய்க்கிணறு கண்டுபிடிப்பு !
தென் ஈரான் பிராந்தியத்தில் மிகப்பெரியதோர் எண்ணெய்க் கிணறு தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஈரானின் தேசிய எண்ணெய்க் கம்பெனியின் பணிப்பாளர் செய்யத் மஹ்மூத் மஹத்திஸ் நேற்று(சனிக்கிழமை, 03.03.2012) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இப்பிராந்தியத்தில் ஏற்கெனவே ஓர் எண்ணெய்க் கிணறு தோண்டப்பட்டிருந்தது எனவும், தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிணறு இதுவரை ஈரானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிணறுகளிலேயே மிகப் பெரியதாகும் என்றும் தெரிவித்துள்ளார். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய்க் கிணற்றைப் பரிசோதித்த ஈரானிய நிபுணர்கள், இக்கிணற்றில் மிக உயர்தரமான எண்ணெய், பெருமளவில் சுரப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் அழிவு தொடங்கிவிட்டது
"அமெரிக்கா ஈரானுக்கு எதிராக ஒரு யுத்தத்தில் குதிக்குமாயின், அது அமெரிக்காவின் முடிவாகவே இருக்கும்" என்று துருக்கியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் துருக்கிய சனநாயகக் கட்சியின் தலைவருமான நாமிக் காமில் ஸெய்பிக் நேற்று(சனிக்கிழமை, 03.03.2012) எச்சரிக்கை விடுத்துள்ளார். "ஈரானுக்கு எதிராக யுத்தப் பிரகடனம் செய்பவர்கள், 1980-1988 காலப்பகுதியில் ஈராக்-ஈரான் யுத்தத்தில் சுமார் எட்டு வருடகாலம் சளைக்காமல் தன்னைத் தற்காத்துக்கொண்ட அதன் வல்லமையை நினைவுகூர்வது நல்லது" என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கத்தை முன்கூட்டியே செயற்கைக்கோள் மூலம் கண்டறியும் ஆய்வில் சீன விஞ்ஞானிகள் வெற்றி !
பூமியின் மேல் ஓடுகள் நகர்வதையும், அதன் மூலம் நிலநடுக்கம் ஏற்படுவதையும் செயற்கைக் கோள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் புதிய முறையை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
கடந்த 2007ல், 35 விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஒன்று சீன அரசின் பல்வேறு அறிவியல் துறைகளுடன் இணைந்து நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறிவதைக் குறித்த ஆய்வில் ஈடுபட்டது. மொத்தம் 83.2 மில்லியன் டாலர் செலவில் இக்குழு நடத்திய ஆய்வில் செயற்கைக்கோள் மூலம் பூமியின் மேல் ஓடுகள் நகர்வதையும் அதன் மூலம் நிலநடுக்கம் ஏற்படுவதையும் தெரிந்து கொள்ளும் புதிய முறை கண்டறியப்பட்டது.
Saturday, March 3, 2012
சமூக மேம்பாட்டுதுறை - பிப்ரவரி மாத ரிப்போர்ட்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூகத்தை மேம்படுத்தும் பணியில் தனது செயல்பாட்டை தொய்வின்றி தொடர்ந்து செய்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் அதற்கான அறிக்கையை சமுதாய மக்கள் மன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்ற அடிப்படையில் சென்ற மாதம் முதல் ஒவ்வொரு மாதத்திற்கான ரிப்போர்டை நமது தளத்தில் பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற செயல்பாடுகள், பணிகல் மற்றும் உதவிகள் பற்றிய ஓர் பார்வை!
![]() |
| சென்னையில் சமூக மேம்பாட்டு துறை சார்பாக ஏழை பெண்ணிற்கு திருமண உதவி அளிக்கும் பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர் சுலைமான் |
கன்னியாக்குமரி:
குளச்சல் ஜமாத்திற்கு உட்பட்ட அப்துர் ரஹ்மானின் மகன் அல்-அமீனுடைய படிப்பு செலவிற்காக கல்வி உதவித்தொகையாக ரூபாய் 5000/- வழங்கப்பட்டது.
கூடங்குளத்தை சுற்றி வளைத்தது போலீஸ் !
சென்னை: கூடங்குளத்தை கிட்டத்தட்ட சுற்றி வளைத்துவிட்டது போலீஸ். அணுஉலை உள்ள பகுதிக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் சுற்றுப் பகுதி மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதும் தடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போராட்டக்காரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி, அணு உலையை பிரச்சினையின்றித் திறக்க மத்திய மாநில அரசுகள் முயல்கின்றன.
இன்னுமொரு என்கவுன்டருக்குத் தயாராவது போன்ற முன்னேற்பாடுகளை கூடங்குளத்தில் செய்து வருகிறது போலீஸ் என்கிறது அங்கிருந்து வரும் தகவல்கள்.
முஹம்மத் நபியையும் , கேடுகெட்ட கூத்தாடி ஜெயலலிதாவையும் ஒப்பிட்டு விளம்பரம் !
இதற்காக மேற்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட செயலாளர் ஆர்.வெங்கடேசன் விளம்பரம் கொடுத்திருந்தார். அதில், நபிகள் நாயகத்தையும்,கேடுகெட்ட கூத்தாடி ஜெயலலிதாவையும் ஒப்பிடும் விதமாக வாசகங்கள் இடம் பெற்றிருந்தது, முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
Friday, March 2, 2012
கணினி வேலையா ? உங்களுக்கு சீக்கிரம் வயசாயிடும் ! – எச்சரிக்கை ரிப்போர்ட்
122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்கள் மறுஏலம்: 400 நாள் அவகாசம் கேட்கும் மத்திய அரசு!
ராசா மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது பல்வேறு தொலைபேசி நிறுவனங்களுக்கு நாட்டின் பல்வேறு மண்டலங்களில் வழங்கப்பட்ட 122 ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. 4 மாதங்களுக்குள் புதிய விதிகளை வகுத்து ஸ்பெக்ட்ரத்தை மறு ஏலம் விட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
வாக்குமூலத்தை தமிழில் பதிவு செய்ய வேண்டும் என்ற சசிகலாவின் கோரிக்கை- சுப்ரீம் கோர்ட் டிஸ்மிஸ்
முதல்வர் ஜெயலலிதாவையும், சசிகலாவையும் ஒன்றாகக் கருத முடியாது. ஜெயலலிதாவுக்குத் தரும் சலுகைகளை சசிகலாவும் கோர முடியாது என்றும் நீதிபதிகள் அப்போது கருத்து தெரிவித்தனர்.
Thursday, March 1, 2012
சீனா ராணுவ வளர்ச்சி கவலை அளிக்கிறது: அமெரிக்கா !
பீகார் மாநிலத்தில் 60 போலீசார்கள் மீது வழக்கு பதிவு !
பீகார் மாநிலத்தில் சந்தையில் வர்த்தகர்களை தாக்கியதற்காகவும், அங்குள்ள கடைகளை அடித்து நொறுக்கியதற்காகவும் 60 அடையாளம் தெரியாத போலீசார் மீது அம்மாநில போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. சந்தையில், நேற்று மாலை வெளியூரைச் சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபில் ஒருவருடன் ஏற்பட கைகலப்பில் உள்ளூர் போலீசாரின் குழு ஒன்று சந்தைக்குள் புகுந்தது.
சங்கரன்கோவிலில் அதிமுக அமைச்சர்கள் முகாம்- பொதுமக்கள் கடும் அதிருப்தி
சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் முத்துசெல்வி போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு சேகரிக்க 33 அமைச்சர்கள் உள்ளிட்ட 43 பேர்கொண்ட தேர்தல் பணிக் குழுவை அதிமுக அறிவித்திருந்தது.
ஆனால் வேட்பு மனு தாக்கலின் போதே அனைத்து நிர்வாகிகளும், அமைச்சர்களும் சங்கரன்கோவிலில் திரண்டதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. இதனால் அதிமுக தேர்தல் பணிகுழு மாற்றியமைக்கப்பட்டதாக அக்கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் 9 அமைச்சர்கள் ஒரே கட்டமாக சங்கரன்கோவிலில் பிரச்சாரம் மேற்கொண்டது மக்களின் முகத்தை மேலும் சுளிக்க வைத்திருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)
