Tuesday, February 7, 2012

அரசியலின் பெயரில் விஷமப் பிரச்சாரம்!


உலக அரங்கில் மதச்சார்பற்ற நாடு இந்தியா மட்டும் தான் என்று நாம் சொல்லும் போது நம்மை அறியாமலேயே நம்மிடம் உணர்வுபூர்வமான தேசப்பற்று வெளிப்படும்அதை நாம் உண்மையான தேசப்பற்று என்று கூட கூறலாம்.  

மேலும் அதற்க்கு ந்தவிதமான மதமும், ஜாதியும் தடையல்ல என்பது நம்முடைய தேசப்பற்றின் அடையாளம் என்று கூடசொல்லலாம். ஆனால் இந்தியாவை இந்துராஷ்ட்ரமாக அறிவிக்க வேண்டும் என்ற தங்களின் கொள்கையை உறுதி செய்யும் விதமாக உ.பி தேர்தல் பிரச்சாரத்தின் போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் தான் எனது லட்சியம் நிறைவேறும் என்று பாபர் மஸ்ஜித் இடிப்பு புகழ் அத்வானி கூறியுள்ளது இந்தியாவின் மதசார்பற்ற கொள்கையை தகர்தெரிவதாகத்தான் உள்ளது.  

பலஸ்தீனுக்​கு தென்ஆப்ரிக்கா ஆதரவு !

பலஸ்தீனுக்கு தங்களுடைய முழுஆதரவையும் வழங்குவதாக தென்ஆப்ரிக்கா அறிவித்துள்ளது.
பலஸ்தீன் மற்றும் தென்ஆப்ரிக்காவிற்கு இடையேயான கலாச்சார ஒப்பந்தம்(Cultural Agreement) கையெழுத்தானதை தொடர்ந்து ப்ரிடேரியாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தென்ஆப்ரிக்கா அமைச்சர் பவுல் மஷடைல் இதனை தெரிவித்தார்.
 “நாங்கள் எங்கள் முழு ஆதரவையும் பலஸ்தீனுக்கு அளிக்க விரும்புகிறோம் மற்றும் இந்த ஆதரவை மேம்படுத்த அமைதியான வழிகளில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றும், இஸ்ரேலுக்கு எதிராக புறக்கணிப்பு(Boycott), முதலீடு மறுப்பு(Disinvestment) மற்றும் ஒப்புறுதிக்கு (sanction) எதிராக செயல்படுவதில் ஆதரவு தெரிவிப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்த வருடத்தில் நடக்கவிருக்கும் தென் ஆப்பிரிக்காவின் கலை மற்றும் கலாச்சார கண்காட்சிக்கு பரிசுகளை அளிக்க உள்ளதாகவும், கலைஞர்களுக்கு விருந்து ஏற்ப்பாடு செய்ய உள்ளதாகவும் பலஸ்தீன் அறிவித்துள்ளது.

மணப்புரம் பைனான்ஸ் டெபாசிட் வசூலிப்பது சட்டவிரோதம் ! - ரிசர்வ் வங்கி

மும்பை: மலையாளிகளின் நிறுவனமான மணப்புரம் பைனான்ஸ் சட்டவிரோதமாக டெபாசிட்டுகளை வசூலிப்பதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

இனி மணப்புரம் பைனான்ஸ் அல்லது மணப்புரம் அக்ரோ பார்ம்ஸ் நிறுவனங்களின் பெயரில் பொதுமக்களிடமிருந்து டெபாசிட்டுகளை வசூலிப்பது குற்றம், கடும் தண்டனைக்குரியது என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

தமிழ மக்களே உஷாராக இருங்கள் !

இது தமிழக மக்களை மிரட்டுவதற்காக எழுதப்பட்ட கட்டுரை அல்ல, மாறாக இன்றைய காலச்சூழ்நிலைகளை உண்ணிப்பாக கவனித்து, இன்றைய அரசாங்கத்தின் செயல்பாடுகளை உற்று நோக்கிய பின்னர் தமிழக மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இந்த சிறு கட்டுரை. இந்திய சுதந்திர போராட்டத்தின் போது தமிழக மக்களின் பங்களிப்பை அவ்வளவு எளிதில் இந்திய வரலாற்றிலிருந்து விலக்கி வைத்து விட முடியாது. இந்திய சுதந்திர போராட்டத்தின் போது ஜாதி, மத பேதமின்றி தேசத்தின் சுதந்திரத்திற்காய் இன்னுயிர் நீத்தவர்கள் ஏராளாம். 

கான் சாஹிப் (மருதநாயகம்), கட்டபொம்மன், வ.ஊ. சிதம்பரனார், மருது சகோதரர்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். அதே போன்று தமிழகத்தை மிகப்பெரும் சக்தியாக மாற்றிய அமைத்த பெருமை தந்தை பெரியாருக்கும் உண்டு. தீண்டாமைக்கொள்கையை தகர்த்தெரிய, பார்ப்பணிய மத வெறியை மாய்ப்பதற்கு தமிழக மக்களை மடமைத்தனத்திலிருந்து விடுவிக்க அறும்பாடுபட்டவர் தந்தை பெரியாராவார். திராவிடக்கழகம் உருவாக்கப்பட்டு தமிழகத்தில் வேரூன்றி இருந்தகாலத்தில் பார்ப்பண வெறியர்களால் தங்களது ஆரியக்கொள்கையை தமிழகத்தில் தடம் பதிக்க முடியாமல் தவித்தனர். தந்தை பெரியார் காலத்தின் போதும் சரி அதன் பின்னர் திராவிடக்கட்சிகள் உருவாக்கப்பட்ட பின்பும் சரி ஆரியர்களால் பெரிய அளவில் தமிழகத்தில் கால் பதிக்க இயலவில்லை.

Monday, February 6, 2012

அமெரிக்க உதவியால் அமையும் நியூட்ரினோ ஆராய்ச்சி கூடத்தால் தமிழக,கேரள அணைகளுக்கு ஆபத்து !


 மிழக-கேரள எல்லையில் அமைக்கப்படவுள்ள நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடத்தால் கேரள அணைகளுக்கு ஆபத்து ஏற்படும் என்று அணுக் கதிர்வீச்சு குறித்த ஆராய்ச்சியாளர் வி.டி. பத்மநாபன் கூறினார்.சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடம் தொடர்பான விளக்கக் கூட்டத்தில் இக் கருத்தை அவர் தெரிவித்தார்.
அறிவியலால் நன்மை மட்டுமே ஏற்படாது. அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் நியூட்ரினோ. நியூட்ரினோ என்பது அணுவில் இருந்து பிளக்கப்படுவதாகும். ஆனால் இயற்கையிலேயே சூரியக் கதிர்களில் இருந்தே நாம் நியூட்ரினோ சக்தியைப் பெற முடியும். இப்போது அரசாங்கம் அமைக்கவுள்ள நியூட்ரினோ ஆராய்ச்சிக் கூடம் தேனி மாவட்டம் தமிழக - கேரள எல்லையில் உள்ள தேவிகுளம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடங்கப்பட உள்ளது.

ஃபேஸ்புக்கிற்கு வயது 8 !

ஹூஸ்டன்:இணையதள நட்புறவு தளங்களில் தவிர்க்க முடியாததாக மாறியுள்ள பிரபல சமூக இணையதளமான ஃபேஸ்புக்கிற்கு எட்டு வயது பூர்த்தியாகிறது. இந்த எட்டு வருட காலக்கட்டத்தில் விவாதங்கள், புரட்சிகள், உண்மையை வெளிக்கொணரல், நட்புறவின் மறக்கமுடியாத நிமிடங்கள் போன்றவற்றை இந்த நட்புறவு தளம் மூலமாக உலகம் பகிர்ந்துகொண்டது.

‘பலரும், பல விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளும் பொது இடம்’ என்ற கொள்கையுடன் இந்த இணையதளத்தை துவக்கிய மார்க் ஸக்கர்பர்க் என்ற ஃபேஸ்புக்கின் சிற்பி கூட நினைத்து பார்த்திருக்கமாட்டார் இவ்வளவு தூரம் ஃபேஸ்புக் பிரபலமாகும் என.

Sunday, February 5, 2012

ராமர் கோவில் கட்டுவது உறுதி : அத்வானி

உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டுவதுதான் தமது லட்சியம் என்று பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார். அயோத்தியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அத்வானி, பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டால் தான் பொது வாழ்க்கையில் தனது லட்சியம் நிறைவேறும் என்று கூறியுள்ளார்.


இதற்கான நேரம் விரைவில் வரவேண்டும் என்று ராமர் பக்தர்கள் விரும்புகின்றனர் என்றும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான தங்கள் முயற்சி தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்..

முஹம்மத் (ஸல்) அவர்களின் போதனை நாட்டுக்கு அவசியம்-இலங்கை ஜனாதிபதி !

இலங்கை முஸ்லிம்களுக்கு இன்றைய தினத்தில் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். உலகம் முழுவதும் உள்ள சகோதரர்களோடு இணைந்து முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளான மீலாதுன் நபியை இலங்கை முஸ்லிம்கள் கொண்டாடுகிறார்கள்.
நாட்டில் சகல பகுதிகளிலும் துரித அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதியான இன்றைய சூழலில், சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் நபிகளாரின் போதனைகள் மிகவும் பொருத்தமானதாகும்.

Saturday, February 4, 2012

மண்ணைக் கவ்விய 'மிரட்டல் சாமி' - சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகிறாராம் !

டெல்லி: சிதம்பரத்துக்கு எதிரான வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டாலும், டெல்லி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போகிறேன், என்று வழக்கு மேல் வழக்கு போட்டு அரசை மிரட்டிக் கொண்டிருக்கும் சுப்பிரமணிய சாமி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்து உரிமம் வழங்கப்பட்டபோது ஆ. ராசா செய்த தவறுகளை ப. சிதம்பரம் தடுத்து நிறுத்தி இருக்கவேண்டும். அந்த கடமையில் தவறி விட்டதாகக் கூறி வழக்கு தொடர்ந்தார்.


அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பிப்பதாக சுப்பிரமணியசாமி கூறியிருந்தார். ஆனால் அவற்றை நீதிமன்றம் ஏற்கவில்லை. அந்த ஆதாரங்கள் வழக்கு போட போதுமானவையாக இல்லை என்று கூறி மனுவை நிராகரித்தது நீதிமன்றம்.

ஹிந்து வாஹினி பயங்கரவாதிகள் ஜாமீனில் விடுதலை !

ஜாமீனில் வெளிவந்த ஹிந்து வாஹினி பயங்கரவாதிகள் 
ஹைதரபாத்: கடந்த நவம்பர் மாதம் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்ட வழக்கில் ஹிந்து வாஹினி அமைப்பினரைச்சேர்ந்த 6 நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்கள். 
கைது செய்யப்பட்டு 90 நாட்களாகியும் காவல்துறையினர் அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை சமர்பிக்காததால் அவர்கள் அனைவரும் நம்பள்ளி குற்றவியல் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுதலை அடைந்துள்ளனர்.முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தின் போது காவல்துறை ஆணையரின் உத்தரவின் பேரில் சிறப்பு படை அமைக்கப்பட்டு ஹிந்து வாஹினி அமைப்பினர் கைது செய்யப்பட்டனர். 

குவைத் தேர்தல்: இஸ்லாமிய அரசியல் கட்சிக்கு வெற்றி !

குவைத்தில் இடம்பற்ற பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய அரசியல் கட்சியால் வழிநடத்தப்படும் எதிர்க்கட்சி வெற்றிபெற்றுள்ளது, கடந்த வருடம் டிசம்பரில் ஏற்பட்ட மக்கள் ஆர்பாட்டத்தை தொடர்ந்து அதன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் இடம்பெற்றது. இதில் ஆளும் தரப்பு தோல்வி கண்டுள்ளது மொத்தமாக 50 ஆசனங்களை கொண்ட பாராளுமன்றத்தில் 34 ஆசனங்களை இஸ்லாமிய அரசியல் கட்சியால் வழிநடத்தப்படும் எதிர்க்கட்சி கைப்பற்றியுள்ளது என்று ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றது. 

அமெரிக்காவின் மிரட்டல் தொடர்ந்தால் எங்கள் பாணியை அமல்படுத்த வேண்டிவரும் : அயதுல்லா அலி கொமேனி

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என தான் நம்புவதாக, அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா கூறியுள்ளார். இதையடுத்து எந்தத் தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாக, ஈரான் நாட்டின் மதத் தலைவர் அயதுல்லா அலி கொமேனி  எச்சரித்துள்ளார்.  
அமெரிக்காவில் இருந்து வெளியாகும், "தி வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இந்தாண்டு, ஏப்ரல், மே அல்லது ஜூன் மாதங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்து முன்னனியினரை வன்மையாக கண்டிக்கிறோம் : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதி கடலோரக் கரையில் அமையப்பெற்றுள்ள‌ கூடன்குளம் அனுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஜனநாயக ரீதியிலான தொடர் போராட்டங்களை கடந்த 2 மாதங்களூக்கு மேலாக நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு தமிழகத்தில் உள்ள சமூக அமைப்பைச் சார்ந்தவர்களும், அரசியல் கட்சியினர் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.



இந்நிலையில் அணு உலை எதிர்ப்பாளர்களின் அச்சத்தைப் போக்குவதற்காக, மத்திய அரசின் சார்பாக நாகர்கோவில் நூருல் இஸ்லாம் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் முத்து விநாயகம் தலைமையில் நிபுணர் குழு அமைக்கப்பட்டது. அதே போன்று மாநில அரசின் சார்பாக அமைக்கப்பட்ட மற்றொரு குழுவில் நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி போன்றோர் இடம் பெற்று இருந்தனர்.

Friday, February 3, 2012

ஏலத்தில் கடாபியின் ரத்தக்கரை படிந்த சட்டை, மோதிரம்: விலை 2 மில்லியன் டாலர் மட்டுமே !


லிபியா:  கொல்லப்பட்ட முன்னாள் லிபிய அதிபர் கடாபியின் ரத்தக்கரை படிந்திருக்கும் சட்டையும், அவர் இறக்கும்போது அணிந்திருந்த வெள்ளி திருமண மோதிரமும் 2 மில்லியன் டாலருக்கு ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளது. 
42 ஆண்டுகளாக லிபியாவில் சர்வாதிகார ஆட்சி புரிந்த முன்னாள் அதிபர் கடாபி போராட்டக்காரர்களால் கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி லிபிய பாலைவனப் பகுதியில் கொல்லப்பட்டார். அவரது உடலைப் பார்க்க மக்கள் பேரார்வம் காட்டினர். இந்நிலையில் கடாபியின் ரத்தக் கரை படிந்திருக்கும் சட்டையும், இறக்கும்போது அவர் அணிந்திருந்த வெள்ளி மோதிரமும் லிபியாவைச் சேர்ந்த அகமது வார்பாலி என்பவருக்கு கிடைத்துள்ளது.

நபிகள் நாயகம் பிறந்த தினம்: தமிழகத்தில் மது பானம் விற்க தடை !


நபிகள் நாயகம் பிறந்த தினம்: அரசு உத்தரவு!இஸ்லாமியர்கள் தங்கள் உயரினும் மேலாக போற்றும் முகம்மது நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் மதுபான விற்பனைக்குத் தடைவிதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

இஸ்ரேல் வந்த பான் கீ மூன் மீது, ஷூ,கற்களை வீசி வரவேற்ற ஆர்ப்பாட்டக்க்காரர்கள் !



இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லையில், ஐ.நா. பொதுச்செயலர் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஷூ, மற்றும் கற்களை வீசினர். இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்வு எட்டப்படமால் உள்ளது. இந்நிலையில், ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூன், நேற்று இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் எல்லைப்பகுதியான காஸா பகுதிக்கு வருகை தந்தார். காஸா பகுதியில், ஜப்பானின் நிதி உதவியுடன் எல்லைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள வீட்டுவசதி திட்டத்தை துவக்கி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள பான்கீமூன் வந்தார்.

இந்தியா, மலேசியா இடையே ராணுவ ஒப்பந்தம் செய்ய தளபதி என்.ஏ.கே.பிரவுன் மலேசியா வருகை



இந்தியா, மலேசியா இடையே ராணுவ ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்காக கோலாலம்பூர் சென்றுள்ளார் இந்திய விமானப்படைத் தளபதி என்.ஏ.கே.பிரவுன். அரசுமுறையிலான இந்தப் பயணத்தின்போது இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று தெரிகிறது. மலேசிய ராணுவத்தின் தலைமைத் தளபதி ஜெனரல் ஸýல்கிஃபெலி பின் முகமது ஸின் மற்றும் விமானப்படைத் தளபதி ஜெனரல் ரோட்ஸôலி பின் தாவுத் உள்ளிட்ட ராணுவ உயரதிகாரிகளுடன் பிரௌன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

எனது அடுத்த இலக்கு சோனியா : சாமி !


My next target is Sonia Gandhi said Subramaniyan Swamy.
2ஜி ஸ்பெக்‍ட்ரம் ஊழல் பணத்தில் 60 சதவீத அளவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் இருப்பதாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரம​ணியன் சுவாமி குற்றம்சாட்டியுள்ளார். 
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, "நாடு பெருமிதம் கொள்ளக் கூடிய வகையிலான தீர்ப்பு இது," என்றார்.  உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, அரசின் ஒட்டுமொத்த தோல்வியை காட்டுகிறது என்றவர், "2ஜி ஸ்பெக்‍ட்ரம் ஊழலைத் தடுக்‍க பிரதமர் தவறிவிட்டார்," என்றார். 

எஸ்.டி.பி.ஐயின் சேவைக்காக உதவிடுவீர்!


சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் போது துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட 60வது வார்டில் எஸ்.டி.பி.ஐ சார்பாக அமீர் சுல்தான் என்பவர் போட்டியிட்டார். அப்போது அந்த வார்டிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு வாக்கு சேகரிக்க சென்ற இடம் தான் ரேவ் பகுதி.



Thursday, February 2, 2012

2ஜி வழக்கில் தீர்ப்பு: 122 உரிமம் ரத்து சிதம்பரத்தை சேர்ப்பதை சிபிஐ கோர்ட் முடிவெடுக்க உத்தரவு



2ஜி ஸ்பெக்ட்ரத்துக்கான 122 உரிமங்களை ரத்து செய்து, உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.ஸ்பெக்ட்ரம் வழக்கில் அமைச்சர் ப.சிதம்பரத்தைச் சேர்ப்பது தொடர்பாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்யும் என்றும் உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. 
தற்போதைய மத்திய உள்துறை அமைச்சரும், முன்னர் நிதித்துறை அமைச்சராக இருந்தவருமான ப.சிதம்பரத்தையும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் சேர்க்க வேண்டும்; இந்த வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமங்களை ரத்து செய்ய வேண்டும்; ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் சிபிஐ விசாரணையை சிறப்புப் புலனாய்வுக் குழு கண்காணிக்க வேண்டும் எனக் கோரும் மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

தமிழ்நாடு: நாக்கைத் துருத்தி, கண்ணை விரித்து, முஷ்டி உயர்த்தி, நரம்பு புடைக்க முழங்கிய விஜயகாந்த் !



சென்னை: சட்டசபையில் நேற்று விஜயகாந்த் பேசிய விதம் குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சட்டசபையில் இதுவரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்த யாருமே இப்படி நடந்து கொண்டிருக்க மாட்டார்கள் என்பது அந்தப் படத்தைப் பார்த்தாலே தெரிகிறது. அந்த அளவுக்கு கடும் கோபத்துடன்,விட்டால் அடித்து விடுவார் போல என்று அஞ்சும் அளவுக்கு அந்தக் காட்சி இருக்கிறது.

சட்டசபையில் அதிமுகவினருக்கும், தேமுதிகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது. விஜயகாந்த் உள்ளிட்டோர் எழுந்து நின்று வாதம் புரிந்து கொண்டிருக்கின்றனர். அப்போது தேமுதிக உறுப்பினர்களை அமருமாறு சபாநாயகர் கூறுகிறார். சிறிது நேர இழுபறிக்குப் பின்னர் விஜயகாந்த் அமர அவரது கட்சியினரும் உட்காருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன் ஆட்சி !


ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள நேட்டோ படைகளின் வெளியேற்றத்துக்குப்பின் பாகிஸ்தானின் மறைமுக உதவியுடன் ஒட்டு மொத்த ஆப்கானிஸ்தானும் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் வரும்" என்று ரகசிய அமெரிக்க ராணுவ தகவலை மேற்கோள் காட்டி அமெரிக்காவிலிருந்து வெளியாகும் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து கேட்கப்பட்ட போது நேட்டோவின் செய்தி தொடர்பாளர் ஜிம்மி கம்மிங்ஸ் அமெரிக்க ராணுவ தகவலை உறுதி செய்தார். "ஆனால் அது நேட்டோ படைகள் வெளியேற்றத்தின் பிறகு ஆப்கனில் ஏற்பட உள்ள மாற்றங்கள் குறித்த பல்வேறு வாய்ப்புகள் குறித்த அறிக்கையே" என்று  கூறினார்.

Wednesday, February 1, 2012

தமிழ்நாடு: பார்சல் குண்டு வழக்கில் தமுமுக தலைவர் ரிபாயிக்கு ஆயுள் தண்டனை !


சென்னை: பார்சல் குண்டு மூலம் இந்து முன்னணி தலைவரின் மனைவி கொல்லப்பட்ட வழக்கில் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் ரிபாயி உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 
கடந்த 1995ம் ஆண்டு நாகூரைச் சேர்ந்த இந்து முன்னணித் தலைவரான முத்துக்கிருஷ்ணன் வீட்டுக்கு தபால் மூலம் ஒரு பார்சல் வந்தது. அதைப் பிரித்த முத்துக்கிருஷ்ணனின் மனைவிதங்கம், அதில் இருந்த வெடிகுண்டு வெடித்துப் பலியானார்.

கூடன் குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழுவினர் மீதான தாக்குதல்: SDPI கடும் கண்டனம்


கூடன் குளம் அணு உலைக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் ஜனநாயக ரீதியில் போராடி வருகின்றனர். இன்னும் 106 வது நாளாக இடிந்த கரை கிராமத்தில் அகிம்சை வழியில் உண்ணாநிலை போராட்டம் நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில் மத்திய நிபுணர் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த போராட்ட குழுவினர் மீது இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது என சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு: காந்தி தலையை வெட்டிய இந்து முன்னணி பயங்கரவாதிகள் !


கோயம்புத்தூர் : ஆர்.எஸ்.புரம் காந்தி பார்க்கில் அமைந்துள்ள காந்தி சிலையை ஹிந்துத்துவ அமைப்பான பாரதீய சேனாவை சேர்ந்த பயங்கரவாதிகள் உடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஹிந்துத்துவ அமைப்பான பாரதீய சேனாவின் பொதுச்செயலாளர் சுரேஷ்ராஜன் (வயது 37) இன்னொரு தலைவரான மின்னல் நாகராஜ் (வயது 47) , ஆகியோரை கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் போலீஸ் கைது செய்தது. பாபா ராம்தேவை கைது செய்த சம்பவத்தை கண்டித்து காந்திசிலையை உடைத்ததாக சிலையை உடைத்த பிறகு குற்றவாளிகள் சம்பவ இடத்தில் வீசிச்சென்ற துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.