Sunday, January 15, 2012
எகிப்தில் இஹ்வான்கள் - ஸலபிகள் புதிய முரண்பாடுகள்
எகிப்தில் புதிய பாராளுமன்றத்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சியான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் ஆதிக்கத்தை தடுப்பதற்கு முக்கிய ஸலஃபி அரசியல் கட்சியான அந்நூர் இதர கட்சிகளை அணுகி வருகிறது.
ஆனால், ஸலஃபி அமைப்புகளுடன் மேற்கத்திய சார்பு கொள்கையை கொண்ட கட்சிகளால் கூட்டணியை ஏற்படுத்துவது சிரமம் என கருதப்படுகிறது.
இதுத்தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளதாக அல் அரபியா நியூஸ் சேனல் செய்தி வெளியிட்டுள்ளது. ஃப்ரீ ஈஜிப்ஸியன்ஸ், கிறிஸ்தியன் வஃப்த் பார்டி ஆகிய கட்சிகளுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளது.
Saturday, January 14, 2012
ரவுடியான இஸ்ரேலை அரவணைக்காதீர்கள் - இந்திய அரசிடம் வேண்டுகோள்
தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையை பலப்படுத்த வேண்டும் என்ற பெயரால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்துள்ளதை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது.இதுத்தொடர்பாக அவ்வமைப்பின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சர்வதேச அளவில் தீவிரவாத செயல்களுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கும் இஸ்ரேலுடன் இத்தகைய ஒப்பந்தம் செய்திருப்பது கேலிக்கூத்தானது. துரதிர்ஷ்டவசமாக நமது அரசு அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய கூட்டாளியான இஸ்ரேலின் மோசமான கொள்கையை செயல்படுத்தும் கருவியாக செயல்பட்டு வருகின்றது.
இந்தியா: ஒடிசாவில் பறவைக் காய்ச்சல் - 35,000 கறிகோழிகளை அழிக்க உத்தரவு

ஒடிசா மாநிலம் குர்டா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. மற்ற மாவட்டங்களுக்கும் இந்நோய் பரவும் முன்பு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
குர்டா மாவட்டத்தில் ஏராளமான கோழிப் பண்ணைகள் உள்ளன. அங்குள்ள பண்ணைகளிலும் பெரும்பாலும் கறிக்கோழிகளே உற்பத்தி செய்யப்படுகின்றன.
பாரசீக வளைகுடாவிற்கு அமெரிக்க போர்க் கப்பல்கள் விரைவு
பாரசீக வளைகுடா கடல் பகுதிக்கு, அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த இரு விமானம் தாங்கி கப்பல்கள் விரைகின்றன.
இதனால், அப்பகுதியில் பதட்டமான நிலைமை நிலவி வருகிறது. ஹோர்முஸ் நீரிணையில் போர்ப் பயிற்சி மேற்கொண்ட கையோடு, அப்பகுதிக்கு அமெரிக்காவின் போர்க் கப்பல் இனி வரக்கூடாது என, ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தியா: இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இனிமேல் கட்டுரைகள் எழுதமாட்டேன் - சுவாமி

பத்திரிகை ஒன்றில், இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் கட்டுரை எழுதியதாக சர்ச்சையில் சிக்கியுள்ள ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமிக்கு இந்த மாதம் 30-ம் தேதி வரை, டெல்லி உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான சுவாமியின் கட்டுரை, மத துவேஷத்தை தூண்டும் வகையில் இருப்பதாக கடந்த அக்டோபர் மாதம் டெல்லி போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். அதுதொடர்பாக தான் கைது செய்யப்படலாம் என்று கருதி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார் சுவாமி.
Friday, January 13, 2012
பிரபல பாடகர் ஜோஸ் கெமிலன் புனித இஸ்லாத்தை ஏற்றார்

ஆப்ரிக்காவிலும் உலகம் முழுவதிலும் தனது இசையால் பலரை கொள்ளைக் கொண்ட ஜோஸ் கெமிலன் ஜாஃபர் கடாபியாக தனது வாழ்வை மாற்றியுள்ளார்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
ஆம்.. வழக்கமாக இசைத் துறையில் மற்றுமொரு புயல் வீசத் தொடங்கியுள்ளது. ஆனால் இவரது இந்த முடிவை இவரது மனைவி டேனிலா விரும்பவில்லை. கிருத்தவத்தை விட்டு இஸ்லாத்தை தேர்ந்தெடுத்த இவரோடு தன்னால் வாழ முடியாது என்று விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடியிருக்கிறார்.
10 வயது சிறுமியின் கற்பை காப்பாற்றிய அல்குர்ஆன் - சவூதியில் சம்பவம்

''இது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும். (அல்குர்ஆன் 2:2)
சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தேறியுள்ளது. இங்கு அதிகமாக திருமணங்கள் பெரும் ஹால்களில் வாடகைக்கு பிடித்து நடத்தப்படும். அது போல் ஒரு திருமண வைபவத்தில் பெண்கள் பகுதிக்கு ஒரு சவுதி காமுகன் வந்துள்ளான். 10 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தனியாக நிற்கவும் ‘என் காரில் மாப்பிள்ளைக்கு அன்பளிப்பு உள்ளது. எனது கார் வரை வர முடியுமா பெண்ணே!’ என்று அவன் கேட்டுள்ளான்.
சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தேறியுள்ளது. இங்கு அதிகமாக திருமணங்கள் பெரும் ஹால்களில் வாடகைக்கு பிடித்து நடத்தப்படும். அது போல் ஒரு திருமண வைபவத்தில் பெண்கள் பகுதிக்கு ஒரு சவுதி காமுகன் வந்துள்ளான். 10 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தனியாக நிற்கவும் ‘என் காரில் மாப்பிள்ளைக்கு அன்பளிப்பு உள்ளது. எனது கார் வரை வர முடியுமா பெண்ணே!’ என்று அவன் கேட்டுள்ளான்.
Thursday, January 12, 2012
இந்தியா: சுதந்திர தினத்தை கொண்டாட சட்டரீதியான போராட்டம் தொடரும்-பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
சுதந்திர தினத்தை கொண்டாட சட்டரீதியான போராட்டம் தொடரும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் 11.01.2012 அன்று மதுரையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை கெளரவிக்கும் விதமாகவும், தேசத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட, இரத்தம் சிந்திய தியாகிகலை போற்றும் விதமாகவும், பெற்ற சுதந்திரத்தை பேணிக்காக்கும் விதமாகவும், போராடிபெற்ற சுதந்திரத்தை பாதுகாக்க அனைத்து மக்களு உறுதி மொழி ஏற்கும் விதமாகவும், சுதந்திரப் போராட்ட நினைவலைகளை மக்கள் மனதில் பூத்துக்குலுங்க செய்யும் விதமாகவும் தமிழகத்தில் கடந்த 3 வருடங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்பு நடத்தி வருகின்றோம்.
பாகிஸ்தான்: அரசு, ராணுவம் கருத்துவேறுபாடு உச்சம்

பாகிஸ்தானில் ராணுவம் - பிரதமர் இடையிலான மோதல் வலுத்து வருகிறது. கருத்து வேற்றுமை இன்னும் முடிவுக்கு வராததால் அந்நாட்டில் ராணுவம் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கபோகிறதோ என்ற எதிர்பார்ப்பு உலக அரசியலில் ஏற்பட்டுள்ளது.
அதிபர் சர்தாரி மீதான ஊழல் குறித்து பாக்., பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என சுப்ரீம் கோர்ட் கருத் வெளியிட்டது. இந்த கருத்துக்கு பதில் அளித்த ராணுவம் மற்றும் ஐ.எஸ்.,ஐ., பிரதமருக்கு எதிராக இருந்தது. இதனால் அரசு , கோர்ட், மற்றும் ராணுவம் இடையே மோதல் தொற்றிக்கொண்டது. இதனையடுத்து பாதுகாப்பு செயலர் ரயீம் காலித் லோதியை, பிரதமர் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
அமெரிக்காவின் முஸ்லிம் சித்திரவதை முகாமுக்கு வயது 10
கியூபாவில் உள்ள குவாண்டநாமோ குடாவில் இருக்கும் அமெரிக்க தடுப்பு முகாமுக்கு முதலாவது கைதி ஒருவர் கொண்டுவரப்பட்டு 10 வருடம் பூர்த்தியாகின்றன. இந்த தடுப்பு முகாமில் மிகவும் அதிகமாக 800 பேர்வரை ஒரே நேரத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இப்போது அங்கு 170 க்கும் அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள்.இந்தியா: மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும் பாசிச பா.ஜ.கா உத்தரவு-முஸ்லிம்கள் எதிர்ப்பு
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான இன்று வியாழக்கிழமை மத்திய பிரதேச மாநில பள்ளிக்கூட மாணவர்கள் சூரிய நமஸ்காரம் செய்யவேண்டும் என அம்மாநில பா.ஜ.க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு முஸ்லிம் மார்க்க அறிஞர்களும், எதிர்கட்சிகளும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
கல்வித்துறையை காவிமயமாக்க மாநில பா.ஜ.க அரசு முயல்வதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. அதேவேளையில், சூரிய நமஸ்காரம் இஸ்லாத்திற்கு எதிரானது என முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் ஃபத்வா(மார்க்க தீர்ப்பு) வழங்கியுள்ளனர்.
Wednesday, January 11, 2012
ஈரானின் புதிய யுரேனியச் செறிவூட்டும் பணியை உடனே நிறுத்த வேண்டும். அமெரிக்கா எச்சரிக்கை
ஈரானின் புதிய யுரேனியச் செறிவூட்டும் பணியால் அந்நாடு மேலும் பல அத்துமீறல்களை நிகழ்த்தும் என, அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஒபாமா மனைவியின் நடத்தையால் வெள்ளை மாளிகை அதிகாரிகள் கோபம்.
ஈரானின் மூத்த அணு விஞ்ஞானி குண்டுத் தாக்குதலில் மரணம் - இஸ்ரேல் மீது சந்தேகம்
அமெரிக்கா, இஸ்ரேலின் கடும் எதிர்ப்புக்கிடையே ஈரான் அணு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த மூத்த அணு விஞ்ஞானி காரில் செல்லும்போது வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார்.
முஸ்தபா அகமதி ரோஷன் என்ற அந்த விஞ்ஞானி ஈரானின் நடான்ஸ் பகுதியில் உள்ள யுரேனிய சுத்திகரிப்பு மையத்தில் பணியாற்றி வந்தார். வாயுக்களை பிரித்தெடுப்பதில் வல்லுனரான இவர் இன்று புதன்கிழமை காலை தெஹ்ரான் அல்லாமே தபதி பல்கலைக்கழகம் அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.
Tuesday, January 10, 2012
இந்தியா :பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி ஆலோசனை
உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அளிக்கும் மாம்பழம்
இந்தியா :ஆன்லைன் மூலம் பள்ளிப்பாடம்
ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வகுப்பு வரை உள்ள இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்களை மாதம் 150 ரூபாய்க்கு ஆன்லைனில் படிக்கலாம்.
பி.எஸ்.என்.எல். நிறுவனம், இணையதளம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களைக் கற்றுத்தரும் டில்லியில் உள்ள ‘கிரே செல்ஸ் 18 மீடியா’ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆன்லைன் மூலம் பள்ளிப்பாடம் நடத்தி வருகிறது. முதல் 15 நாட்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் படிக்க இலவசம். மாணவர்கள் தொடர்ந்து இந்தச்சேவையைப் பயன்படுத்த விரும்பினால் மாதம் ரூ. 150 கட்டணம் செலுத்தவேண்டும்.
Monday, January 9, 2012
ஆப்கானிஸ்தான்: அமெரிக்க படையின் அட்டூழியம்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பக்ராம் சிறையில் கைதிகள் கடுமையாக சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் கண்டுபிடித்துள்ளது.
எவ்வித ஆதாரமும் இல்லாமல் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என குல்ரஹ்மான் தலைமையிலான விசாரணை கமிஷன் கூறுகிறது.
பக்ராம் விமானதளத்தை ஒருமாதத்திற்குள் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என நேற்று முன்தினம் அதிபர் கர்ஸாய் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் விசாரணை கமிஷனின் கண்டுபிடிப்புகள் வெளியாகி உள்ளன.
பலஸ்தீன்: 10 வயது சிறுவன் அச்சுறுத்தலாம் - ஆக்கிரமிப்பு இஸ்ரேல் படை கைது செய்தது
கடந்த சனிக்கிழமை (07.01.2012) இரவு பலஸ்தீனிலுள்ள யபாத் கிராமத்தைச் சுற்றிவளைத்துத் தாக்குதல் நடாத்திய இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை, தேடுதல் வேட்டை என்ற பெயரில் பலஸ்தீனரின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து பல்வேறு அடாவடித்தனங்கள் செய்துள்ளது.
மேற்படி ஊர் மக்களைப் பயமுறுத்தி அச்சுறுத்துமுகமாக தாலிப் இப்றாஹீம் அபூபக்கர் எனும் 10 வயதுச் சிறுவனை பெற்றோரின் கதறலையோ மன்றாட்டத்தையோ பொருட்படுத்தாமல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை கடத்திச் சென்றுள்ளது. இந்தச் சிறுவன் தவிர, இதே ஊரைச் சேர்ந்த மேலும் பல பலஸ்தீன் பொதுமக்களும் ஆக்கிரமிப்புப் படையின் 'விசாரணை'க்காகக் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
எகிப்து இஹ்வான்களின் வசமாகிறது - அமெரிக்காவின் நிலைப்பாட்டிலும் மாற்றம்
மறதியிலிருந்து விடுபட இதயத்தை வலுப்படுத்துங்கள் - ஆராய்சியாளர் கூறுகிறார்

மறதி நோய்க்கு தீர்வுகாணும் வகையில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று மறதி நோயில் இருந்து விடுபட முதலில் இதயத்தை வலுவாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் என்கிறது.
யுனிவர்சிட்டி காலேஜ் ஆப் லண்டன், பிரான்சில் உள்ள தொற்றுநோய் மற்றும் மக்கள்தொகை குறித்த ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து இந்திய ஆராய்ச்சியாளர் அர்ச்சனா சிங் தலைமையில் இது குறித்த ஆய்வு நடத்தின. ஆய்வில் கிடைத்த தகவல் வருமாறு,
Sunday, January 8, 2012
தமிழ்நாடு: நெல்லை ஏர்வாடியில் புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்.

ஏர்வாடி:அறிவியல்,விஞ்ஞானத் துறை ஒருபுறம் வளர்ந்து கொண்டிருக்க நோய்களும் அதன் தாக்கங்களும் அதிகரித்து கொண்டிருக்கின்றன. கடந்த சில வருடங்களாக புற்று நோயினால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. நகர்புறம் மட்டுமின்றி கிராமப் புறங்களிலும் இதன் தாக்கம் காணப்படுகின்றது.
இதில் மார்பக புற்றுநோயானது மிகவேகமாக பரவிவருகிறது. இந்நிலையில் இப்புற்று நோயை குறித்து பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டு கொள்ளவும் மருத்துவ முகாம்களை நேசனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநிலம் முழுவதும் நடத்த இருககின்றது.
அளவுக்கு மீறிய உடற்பயிற்சி ஆபத்தில் முடியும்

உடல் பருமனை குறைக்க மருத்துவர்களால் பல வழிகள் பரிந்துரைக்கப்படுவது வாடிக்கை. உடற்பயிற்சிகள் இதில் தவிர்க்க இயலாதது. மிகக் குறைந்த பட்சமாக நடை பயிற்சி நிச்சயம் இருக்கும். இந்நிலையில், உடல் பருமன் மற்றும் அதனை குறைப்பது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, அளவுக்கு அதிகமான உடற்பயிற்சிகள் செய்தால் அடிக்கடி ஜலதோஷம், சளி பிரச்னை ஏற்படும் என்று எச்சரித்துள்ளது.
உடல்பருமனை கட்டுப்படுத்த மட்டுமின்றி ஆரோக்கியத்தை பேணவும் உடற்பயிற்சி அவசியம். ஆனால் அது அளவோடு இருப்பது அத்தியாவசியம். இங்கிலாந்தில் உள்ள லோபரோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த தகவல் இது.
ஜப்பான்: அணு உலைகளை முழுவதும் மூட அரசு முடிவு
இதன் பிறகு அணு உலை பரவலாக சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டது எனவே ஜப்பான் தனது அணு கொள்கையில் மாற்றம் கொண்டுவந்துள்ளது.
இந்தியா: சங்கப்பரிவாரங்கள கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பேரணி
கடந்த வெள்ளிக்கிழமை அன்று துணை ஆணையர் அலுவலகம் முன்பு மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சங்கப்பரிவாரங்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி மத்திய மற்றும் மாநில அரசை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இஸ்ரேலுடன் நட்பு கொள்ளுங்கள் - பர்வேஸ் முஷரப் கூறுகிறார்
எப்போதும் இந்தியாவுக்கு சாதகமான நிலைப்பாடு எடுக்கும் இஸ்ரேல் அந்நிலைப்பாடை மாற்றி கொள்ள பாகிஸ்தான் அந்நாட்டுடன் நட்பு வைத்து கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் கூறியுள்ளார்.
இஸ்ரேலுடன் நெருக்காமாவதன் மூலம் அமெரிக்க அரசில் செல்வாக்கான யூத லாபியுடன் பாகிஸ்தான் நட்பாக முடியும் என்றும் இஸ்ரேலை இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வைக்க முடியும் என்றும் முஷரப் கூறினார்.
Saturday, January 7, 2012
ஒரு வயது குழந்தையை படுகொலை செய்து ஸ்கைப்பில் காண்பித்த தாய்
பெண் குழந்தை ஒன்றின் கொலையில் தகவல் பரிமாற்று ஊடகமாக ஸ்கைப் செயற்பட்டுள்ளது. நீர் நிறைந்த வாளி ஒன்றினுள் பெண் குழந்தையின் தலையை அமிழ்த்தி அதன் தாயார் மூச்சுத் திணற வைத்து கொன்றுள்ளார்.இந்தக் கோரக் காட்சிகளை அவளது பிரிட்டிஷ் ஆண் நண்பன் நேரடியாக இன்டர்நெட் மூலம் ஸ்கைப் வழியாகப் பார்த்துள்ளார். நோர்வேயைச் சேர்ந்த Yasmin Chaudhry என்ற பெண் ஒரு வயதேயான தனது பெண் குழந்தையின் தலையை வாளியினுள் அமிழ்த்தி கொலை செய்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)





