Saturday, January 7, 2012

இந்தியா: அன்னா ஹசாரே குழுவில் உள்ள சாந்தி பூஷன் மீது ரூ.27 லட்சம் அபராதம்


இந்தியாவின் சமூக சேவகர்  அன்னா ஹசாரே குழுவைச் சார்ந்த சாந்தி பூஷன் மீது முத்திரைத் தாள் கட்டணத்தை குறைவாக மதிப்பீடு கட்டியதற்காக ரூ.27 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .
இந்தியாவின் சமூக சேவகர் அன்னா குழுவின் உருப்பினரும் முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான சாந்தி பூஷன் அகலாபத் நகரில் சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 1970 களில் குடும்பத்தோடு வசித்தார்.

துருக்கி : அரசாங்கத்தை கவிழ்க்க சதி - இராணுவ தளபதிக்கு சிறை


துருக்கியில் சிவிலியன் அரசை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டிய எர்கனக்கோன் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தலைமை தளபதி ஜெனரல் இல்கர் பாஸ்ப் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணை செய்ய கஸ்டடியில் அனுமதிக்க வேண்டும் என அரசு தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் அங்கீகரித்தது. இதனைத் தொடர்ந்து பாஸ்ப் சிறையில் அடைக்கப்பட்டார்.

நேற்று அதிகாலை இஸ்தான்புல்லில் ஸிலிவ்ரி சிறைக்கு பாஸ்பை அரசு தரப்பு வழக்குரைஞர்கள் அழைத்துச் சென்றனர்.

உங்கள் குழந்தை துறுதுறுவென ஓடியாடி விளையாடுகிறதா..?


உங்கள் குழந்தைகள் அதிக நேரம் விளையாடுகிறார்களா? அதை தடுக்காதீர்கள். ஆம், துறுதுறுவென  ஓடியாடி விளையாடும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. நெதர்லாந்தில் உள்ள வியு யுனிவர்சிட்டி மெடிகல் சென்டரின் எம்கோ சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர் அமிகா சிங் தலைமையிலான குழுவினர் குழந்தைகளின் உடல் அசைவுக்கும் கல்வித் திறனுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வு நடத்தினர்.

Friday, January 6, 2012

சவூதி அரேபியாவில் சினிமா தியேட்டர்கள்


உலகில் சவூதிஅரேபியாவில் மட்டுமே திரையரங்குகள் இல்லை என்பதை அதன் சிறப்பாகவோ, குறையாகவோ சொல்லக் கேட்டிருக்கிறோம். அந்தச் சிறப்பு அல்லது குறை நீங்கும் என்பதை அறிவிக்கும் செய்தி இது.

ரியாதிலுள்ள மன்னர் சவூத் பல்கலைகழக விழாவொன்றில் உரையாற்றிய சவூதி பண்பாடு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் டாக்டர் அப்துல் அஸீஸ் கோஜா "சினிமா தியேட்டர்களைத் திறப்பது குறித்து அரசாங்க முடிவு எட்டப்பட்டால் தமது அமைச்சரவை அதற்கான ஒத்துழைப்பை அளிக்கும் என்று அறிவித்துள்ளார். ஊடகப் பிரதிநிதிகள் முன்னிலையில் அவர் இச்செய்தியை வெளியிட்டார்.

எகிப்து: முபாரக்கை தூக்கில் போடுங்கள் - நீதிமன்றில் கோரிக்கை


எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக். இவரது 32 ஆண்டுக்கால ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி ஏற்பட்டது. இப்புரட்சி கடந்த ஆண்டு ஜனவரி 25-ந்தேதி தொடங்கி 18 நாட்கள் நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.


அதை தொடர்ந்து முபாரக் அதிபர் பதவியில் இருந்து விலகினார். தற்போது அங்கு ராணுவ ஆட்சி உள்ளது. ராணுவ ஆட்சியாளர்கள் முபாரக்கையும், அவரது 2 மகன்களையும் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

பிரான்ஸ்:பர்தா அணிந்தவர்களை விசாரித்த பெண் போலீஸார் இஸ்லாத்தை ஏற்றனர்



மேலும் அவ்வாறு முகத்திரை அணிந்த முஸ்லீம் பெண்களை விசாரித்த ப்ரான்ஸின் பெண் காவல்துறையினரில் கால்வாசி பெண் காவலர்கள் இஸ்லாத்தை தழுவியது தமக்கு ஆச்சரியமளிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

Thursday, January 5, 2012

இந்தியா: முஸ்லிம்களை தாக்குவதற்கு ஹிந்தத்துவா இளைஞர்களுக்கு பயிற்சி


ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் தெலுங்கான விவகாரத்திற்கு மத்தியில் நன்கு திட்டமிடப்பட்டு நேர்தியான முறையில் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற போராட்ட நேரங்களிலிருந்து இன்று வரை 15ற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர் 

சென்ற வருடம் முஸ்லிம்கள் கொண்டாடிய ஹஜ்ஜுப் பெருநாள் பின்பு போவனபள்ளி, காச்சிகுடா, சிக்கடபள்ளி, எல்.பி. நகர், வித்யா நகர் போன்ற பகுதிகளில் இத்தகைய தாக்குதல்கள் ஒரு சில நாட்கள் இடைவெளியில் நடந்தேறியுள்ளது.

பாரசீக வளைகுடாவில் எமது பணி தொடரும் - அமெரிக்கா சூளுரை


பூட்டிய காருக்குள் குழந்தை இருந்தால் மூளை பாதிக்கும்


நீண்ட தூரம் ஓடிய பிறகு நிறுத்திய காருக்குள் குழந்தைகள் சிறிது நேரம் இருந்தாலும் மூளை பாதிக்கப்படலாம் என்று ஆஸ்திரேலிய ஆய்வு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து லா ட்ராப் பல்கலைக்கழக ஆய்வு குழு பேராசிரியர் பீட்டர் ஓ மெரா கூறியதாவது, வெளியே 29 டிகிரி வெப்பம் நிலவும் நாளில் காருக்குள் ஏர் கண்டிஷன் மூலம் 20 டிகிரி வெப்ப நிலையாக குறைந்தால், அடுத்த 10 நிமிடங்களில் வெப்பம் இரு மடங்காக உயரும். கார் நின்ற அடுத்த 10வது நிமிடம் 3 மடங்காக அதிகரிக்கும். இந்த திடீர் வெப்ப நிலை அதிகரிப்பால் குழந்தைகளின் மூளை பாதிக்கப்படலாம்.

துருக்கியின் செயற்கைகோள் விண்ணில் பாய ஆயத்தம் - இஸ்ரேலுக்கு புதிய தலைவலி


துருக்கி விண்ணில் செலுத்தவிருக்கும் மேன்மையான செயற்கை கோளால் இஸ்ரேலின் அரசியல்வாதிகளுக்கும், இராணுவத்திற்கும் புதியதலைவலி தொடங்கி உள்ளது.

ஒரு பிக்சலை இரண்டு மீட்டருக்கு நெருக்கமான முறையில் புகை படத்தை எடுக்கக் கூடிய செயற்கைகோள் அமெரிக்காவிடம் இருந்த நிலையிலும், அமெரிக்காவில் அவ்வாறு எடுக்க கூடிய புகைப் படங்களை வெளியிட அந்நாட்டின் அலுவலகங்ளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் ஒரு இடத்தில் தேவையான இடத்தை பெரிது செய்தோ அல்லது முகவரியை கண்டுபிடிக்க கூகுள் எர்த் எனப்படும் வலைத்தளமும் பெரிதும் உதவுகிறது. ஆனால் அப்படிப்பட்ட கூகுள் எர்த் கூட இஸ்ரேலை வெகு தொலைவில் இருந்து மட்டும் புகைப்படம் எடுக்கும் நிலையில் மட்டுமே உள்ளது.

இந்தியா: மக்களவை சிறப்பு கூட்டம் தேதி அறிவிப்பு.

புதுடெல்லி: 1952-ம் ஆண்டு மக்களவையின் முதல் கூட்டம் தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் மக்களவை சிறப்பு கூட்டம் வருகிற மே மாதம் 13-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதை தொடர்ந்து மூன்று நாள் கொண்டாட்டங்கள் நடைபெறும். மேலும் இந்த சிறப்பு கூட்டத்தை குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல் தொடங்கி வைப்பார் என எதிர்பர்க்கபடுகிறது.

Wednesday, January 4, 2012

இந்தியா: மேற்கு வங்கத்தில் "பள்ளி செல்வோம்" பிரச்சாரம்

School Chalo in West Bengalகொல்கத்தா: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த பல வருடங்களாக கல்வி பற்றிய விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் "ஸ்கூல் சலோ" என்ற முழக்கத்தை முன் வைத்து கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வருடம் குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொண்டது. ஏழ்மையான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம் மக்களிடையே இத்தகைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இப்பிரச்சாரம் நடத்தப்பட்டது.மேற்கு வங்க பாப்புலர் ஃப்ரண்டின் மாநில நிர்வாகிகளால் பலவேறு வகையான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

இந்தியா: விமானிகளின் தூக்கத்தால் மும்பை செல்ல வேண்டிய விமானம் கோவா சென்றது



துபாயிலிருந்து மும்பைக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் இரு விமானிகளும் தூங்கி விட்டதால் விமானம் மும்பையைத் தாண்டி கோவா அருகே சென்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்து 15 நாட்களுக்குப் பின்னர் தற்போது வெளியே கசிய ஆரம்பித்துள்ளது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு, துபாயிலிருந்து 100 பயணிகளுடன் மிசி 612 என்ற ஏர் இந்தியா விமானம் மும்பை கிளம்பியது. துபாய் நேரப்படி இரவு1.35 மணிக்கு இந்த விமானம் கிளம்பி இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தரையிறங்கியது.

பலஸ்தீன், இஸ்ரேல் பேச்சு - இணக்கமின்றி முடிந்தது


இஸ்ரேலுக்கும் பலஸ்தீனுக்கும் இடையில் ஜோர்தானில் நடைபெற்ற சந்திப்பு எந்தவித  முன்னேற்றமும் இன்றி முடிவடைந்துள்ளது. கடந்த ஒரு வருடத்தின் பின்னர் பலஸ்தீன் இஸ்ரேல் அதிகாரிகள் கலந்துகொண்ட சந்திப்பாக இது கருதப்படுகின்றது.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளை வெளிநாடு ஒன்றின் மத்தியஸ்தத்துடன் நடத்துவது குறித்து நேற்றைய பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டது. ஜோர்தானில் நடத்தப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தைகள் ஓரளவு திருப்தி அளித்துள்ளதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பிராந்தியத்தில் இடம்பெறும் இஸ்ரேலின் சட்டவிரோத குடியேற்றங்களை அடுத்து பலஸ்தீனுடனான பேச்சுவார்த்தைகளில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன

மொராக்கோவில் இஸ்லாமியவாதிகள் அமைச்சரவையை நிறுவினர்

மொராக்கோவில் இஸ்லாமிய கட்சியான ஜஸ்டிஸ் அண்ட் டெவல்ப்மெண்ட் கட்சியின் (பி.ஜெ.டி) தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது.

பி.ஜெ.டி தலைவர் அப்துல் இலாஹ் பென்கிரானை பிரதமராகவும், 31 உறுப்பினர்களை கொண்ட அமைச்சரவையும் மொராக்கோ மன்னர் நியமித்துள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் கூறுகிறது. புதிய அமைச்சரவையில் பிரதமர், வெளியுறவுத்துறை, சட்டம், செய்தி ஒலிபரப்பு உள்பட 11 அமைச்சர்கள் பி.ஜெ.டி கட்சியை சார்ந்தவர்கள் ஆவர்.

Tuesday, January 3, 2012

இந்தியா: 7 மாநிலங்களில் விவசாயத் திட்டத்தை துவக்குகிறது இஸ்ரேல்


ஜெய்பூர்: விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுப்பதற்கும் மத்தியகிழக்கில் பயங்கரவாத நாடாக திகழும் இஸ்ரேல் இந்தியாவில் கால்பதிக்கிறது, ஏழு மாநிலங்களில் வருகின்ற ஏப்ரல் மாதம் விவசாய திட்டத்தை துவக்க இருக்கிறது.

ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் விவசாய திட்டம் நடைமுறைபடுத்தப்படும் என புதுடெல்லியில் இஸ்ரேல் தூதரகத்தில் இத்திட்டத்தின் தலைவர் யஹேல் விலன் அறிவித்துள்ளார்.

மாநில அரசுகளின் உதவியுடன் நடைமுறைபடுத்தப்படும் இத்திட்டத்தின் நோக்கம் விவசாய பொருட்களின் விளைச்சலை அதிகரிக்கவும் இஸ்ரேலின் தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு கற்றுகொடுப்பதும் ஆகும் என யஹேல் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் ௩௦க்கும் மேற்பட்ட செயல் திட்டங்கள் உருவாகும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்த யஹேல் ஏற்கனவே குஜராத், ஹரியானா மாநிலங்களில் ஒரு சில செயல்திட்டங்களில் இஸ்ரேல ஒத்துழைக்கிறது என கூறினார்.

இஸ்ரேலின் சுரண்டலை தடுப்போம் - துருக்கி, நன்றி சொல்கிறது ஹமாஸ்


துருக்கிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஃபலஸ்தீன் காஸ்ஸாவில் ஆட்சிபுரியும் ஹமாஸின் பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா 2010இல் இஸ்ரேல் ராணுவத்தால் தாக்கப்பட்ட மாவி மர்மரா கப்பலை பார்வையிட்டார். தாக்குதலில் கொல்லப்பட்ட ஒன்பது துருக்கி தன்னார்வ தொண்டர்களுக்காக இஸ்தான்புல்லிற்கு சென்ற ஹானிய்யா பிரார்த்தனை புரிந்தார்.

2007-ஆம் ஆண்டு காஸ்ஸாவில் ஆட்சிப்பொறுப்பை ஹமாஸ் ஏற்றபிறகு முதன் முறையாக ஹானிய்யா வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

தமிழ்நாடு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு.


சென்னை: எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வி தேர்வுத்துறை இன்று வெளியிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் அனைத்துப் பள்ளிகளிலும் சமச்சீர் கல்வியை அறிமுகபடுத்துவதில் ஏற்பட்ட குளறுபடிகளால் பத்தாம் வகுப்பு தேர்வு தாமதமாக தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கபட்டிருந்தது, அதன் அடிப்படையில் வரும் ஏப்ரல் 4-ம் தேதி தேர்வுகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Monday, January 2, 2012

தினமும் பிளக் டீ குடித்தால் மாரடைப்பு வருவது குறையுமாம் - ஆய்வில் தகவல்




அடிக்கடி டீ குடிப்பது நல்லதல்ல என சிலர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர். ஆனால், தினமும் 3 கப் பிளாக் டீ குடித்தால் மாரடைப்பு, சர்க்கரை நோயிலிருந்து தப்பிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கேரி ருக்ஸ்டன் மற்றும் பமீலா மேசன் தலைமையிலான ஆய்வு குழுவினர் நோய் வராமல் தடுப்பதில் பிளாக் டீக்கு உள்ள பங்கு பற்றிய ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு முடிவு குறித்து இங்கிலாந்தின் ஊட்டச்சத்து பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.

அதன் விவரம் வருமாறு: பிளாக் டீ குடிக்காதவர்களைவிட குடித்தவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது ஆய்வில் தெரிகிறது. அதாவது, ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதை தவிர்க்கவும், ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கவும், ரத்தக் குழாய் சுருங்கி ரத்த ஓட்டம் தடைபடுவதை தவிர்க்கவும் பிளாக் டீ உதவுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸில் ஒவ்வொரு வருடமும் ஒரு இலட்சம் முஸ்லிம்களுக்கு குடியுரிமை


பிரான்ஸ் நாட்டில் இனி குடியுரிமை கேட்டு வரும் வெளிநாட்டவர்கள் பிரெஞ்ச் மொழியையும் , கலாசாரத்தையும் ஏற்றுக்கொண்டிருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும் என்று உள்துறை அமைச்சர் கிளர்டி குயெண்ட் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை கேட்டுவரும் நபர்கள் தனது உரிமை மற்றும் பொறுப்புணர்வுக்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். குடியுரிமை விண்ணப்ப தாரர்கள் பிரான்சில் இருந்து கொண்டே இன்னொரு நாட்டில் குடியுரிமையைப் பெறக் கூடாது. ஆனால் இரட்டைக் குடியுரிமைக்கு அனுமதி உண்டு.

பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசியின் ஆளுங்கட்சி உறுப்பினரான குயெண்ட் கூறுகையில், பிரெஞ்ச் மொழியின் சமுக, மதிப்புகள் மற்றும் குயிaடுகளை ஏற்றுக் கொள்கின்ற இந்த நடைமுறை ஒரு நிகழ்வாகும் என்றார். இத்தகைய நடைமுறையைப் புகுத்த வேண்டிய அவசியம் இப்போது பிரான்சுக்கு எழுந்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1,00,000 முஸ்லிம்கள் பிரான்ஸ் குடியுரிமை பெறுகின்றனர். இவர்கள் பிரென்ஸ¤க்காரராக மாற வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஒரே நேரத்தில் இரண்டு மூன்று மனைவியுடன் வாழ்பவருக்கு பிரென்ஸ் குடியுரிமை அளிக்கக் கூடாது என்றார்.

இந்தியா: முஸ்லிம் இடஒதுக்கீட்டை எதிர்த்து பிரச்சாரம்-பிரவீன் தொகாடியா.

                                                    அகமதாபாத்: இந்து தீவிரவாத அமைப்பான பஜ்ரதள் ஏற்பாடு செய்திருந்த திரிசூலம் விநியோகிக்கும் விழாவுக்கு மற்றுமொரு இந்து தீவிரவாத அமைப்பான வி.ஹெச்.பி-யின் அகில உலக தலைவர் பிரவீன் தொகாடியா ஆற்றிய உரையில் "மத்திய அரசு மிகவும் பின்தங்கிய மக்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 4.5 சதவிகித உள்ஒதுக்கீடு முடிவை திரும்ப பெற வேண்டும், அப்படி இல்லையென்றால் உள்நாட்டு கலவரம் வெடிக்கும்" என்று கூறினார் . 

Sunday, January 1, 2012

காஸாவை தாக்க இஸ்ரேல் தயார் - முறியடிக்க முஸ்லிம் போராளிகளுக்கு அழைப்பு


வெகுவிரைவில் காஸா மீண்டும் தாக்கப்படும் என்றும் அதற்கான ஏற்பாடுகளைத் தம்முடைய படையணியினர் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை உயரதிகாரி பென்னி கான்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய இராணுவ இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமது தரைப்படையினருக்கு முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிகத் தீவிரமான இராணுவப் பயிற்சிகள் வழங்கப்பட்டிருப்பதால், மூன்று வருடங்களுக்கு முன்னர் காஸா மீது தொடுக்கப்பட்ட ஆக்கிரமிப்புப் போரை விட இந்தப் போர் மிக வித்தியாசமானதாகவும் உக்கிரமானதாகவும் அமையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படையினருக்கு இரவு நேரத் தாக்குதல் நடவடிக்கைகளில் இம்முறை அபரிமிதமான தேர்ச்சி அளிக்கப்பட்டிருக்கின்றது எனவும், அதிசக்திவாய்ந்த வெடிகுண்டுகளைப் பயன்படுத்திப் பாதைத் தடைகளைத் துரிதமாகத் தகர்த்துக்கொண்டு காஸாவை நோக்கி அவர்கள் மிக வேகமாக முன்னேறிச் செல்வார்கள் எனவும் கான்ட்ஸ் தன்னுடைய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.  

கிறிஸ்தவர் மீது தாக்குதல் - ஜும்ஆ பிரசங்கத்தில் யூசுப் அல் கர்ழாவி கண்டனம்


நைஜீரியாவில் சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் சபையின் தலைவரான டாக்டர்.யூசுஃப் அல் கர்ழாவி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவில் உள்ள உமர்பின் கத்தாப் மஸ்ஜிதில் ஜும்ஆ உரை நிகழ்த்திய அவர் கூறியதாவது,

நைஜீரியாவில் சர்ச்சுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கதும், இஸ்லாத்தின் உயர்வான கொள்கைகளுக்கு எதிரானதுமாகும். இத்தகைய தாக்குதல்களை நடத்துவது இஸ்லாத்தில் இருந்து வெளியேற்றும் அளவுக்கு கடுமையான குற்றமாகும். இதர மதத்தவர்களின் வழிப்பாட்டுத் தலங்களை பாதுகாப்பது ஆட்சியாளர்களின் கடமையாகும். நமது அரசியல் சட்ட அமைப்பில் இதர மதத்தவர்களும் எல்லாவித உரிமைகளுக்கும் தகுதி உடையோர் ஆவர்.

ஹமாஸை வாழ்த்தி வரவேற்போம் - துருக்கி அறிவிப்பு

"பிராந்திய நல்லுறவைப் பலப்படுத்துமுகமாக துருக்கிக்கு விஜயம் செய்யவுள்ள பலஸ்தீன் பிரதமர் இஸ்மாயீல் ஹனீய்யாவின் நோக்கம் பாராட்டுக்குரியது" என துருக்கிய வெளிநாட்டமைச்சர் அஹ்மத் தாவூடொக்லூ தெரிவித்துள்ளார்.


"துருக்கிக்கு வருகைதரும் பலஸ்தீன் பிரமுகர்களை துருக்கி வாழ்த்தி வரவேற்கும். இதற்கு முன்னர் மஹ்மூத் அப்பாஸ், காலித் மிஷைல் போன்ற பலஸ்தீன் பிரமுகர்களை வரவேற்றது போலவே இஸ்மாயில் ஹனிய்யாவும் விமரிசையாக வரவேற்கப்படுவார்" என அன்காராவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய துருக்கிய வெளிநாட்டமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

"அந்நிய ஆக்கிரமிப்புக்கு உட்பட்டிருக்கும் பலஸ்தீன் போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கு அதனை எதிர்த்துப் போராடும் தார்மீக உரிமை உண்டு" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பாபுலர் ஃ ப்ரண்ட் சிறுபான்மை துறை அமைச்சருக்கு கடிதம்


முஸ்லிம் சமுதாயத்தின் நியாயமான பிரச்சனையான இட ஒதுக்கீடு கோரிக்கைகளை தீர்க்கும் வகையில் சிறுபான்மை துறை அமைச்சர் சல்வாம் குர்ஷித் அவர்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.


முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு தொடர்பாக ஆலோசனைகள் முடிவுக்கு வந்துவிட்டது, அனைத்து அமைச்சரகம், அரசு நிறுவனத்தின் இறுதி ஆலோசனையை கேட்ட பின்பு உள்துறை அமைச்சகம் இறுதி அறிக்கையை சமர்பிக்க ஏற்பாடு செய்துள்ளது என அமைச்சர் சொன்னதை கடிதம் எடுத்துக்காட்டியுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்டின் முழக்கம் மற்றும் ஆலோசனை இந்த நாட்டில் வாழ்ந்து வரும் எல்லா முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவதை உள்ளடக்கியதாகும். அதே சமயத்தில் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் தலித்துகளின் தேவைகளையும் கருத்தில் கொண்டுள்ளது பாப்புலர் ஃப்ரண்ட்.