Saturday, December 17, 2011

கத்தாஃபி கொலை போர் குற்றமாகும் – சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்

international criminal court
ஹேக்:லிபியாவின் முன்னாள் அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் படுகொலை போர் குற்றம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என சர்வதேச நீதிமன்றத்தின் முதன்மை வழக்குரைஞர் லூயிஸ் மோரீனோ ஒகாம்போ தெரிவித்துள்ளார்.
லிபியாவில் தேசிய இடைக்கால கவுன்சிலுடன்(என்.டி.சி) இதுக்குறித்த சந்தேகத்தை பகிர்ந்து கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
முழுமையான விசாரணைக்கு என்.டி.சி தயாராகி வருகிறது. கத்தாஃபியின் மகன் ஸைஃபுல் இஸ்லாமை லிபியாவில் வைத்தே விசாரிக்கப்படும் என ஒகாம்போ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி கத்தாஃபியின் பிறந்த நகரமான ஸிர்த்தில் வைத்து அவரை பிடித்த புரட்சி படையினர் பின்னர் படுகொலைச் செய்தனர். மோதலில்தான் கத்தாஃபி கொல்லப்பட்டார் என என்.டி.சி அறிவித்தபோதிலும் காயங்களுடன் பிடிக்கப்பட்டு பின்னர் கத்தாஃபி கொல்லப்படும் வீடியோ காட்சி வெளியானது.
சர்வதேச அளவில் அழுத்தம் ஏற்பட்டதை தொடர்ந்து விசாரணை நடத்த என்.டி.சி உறுதி அளித்தது. கத்தாஃபியின் இளைய மகன் முஃதஸிம்மும் கைது செய்யப்பட்டு பின்னர் கொல்லப்பட்டார்.

கூடங்குளம்:முதல் அணு உலை சில வாரங்களில் செயல்பட துவங்கும் – பிரதமர்

Russian President Dmitry Medvedev greets Prime Minister Manmohan Singh during their meeting at Moscow's Kremlin on Friday.
மாஸ்கோ:இந்தியாவும்,ரஷ்யாவும் இணந்து உருவாக்கியிருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் முதல் அணு உலை(ரியாக்டர்) இன்னும் சில வாரங்கலில் செயல்பட துவங்கும் என பிரதமர் மன்மோகன்சிங் ரஷ்யாவில் அந்நாட்டின் பிரதமர் திமித்ரி மெத்வதேவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு கூட்டாக நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
முதல் அணுஉலை அடுத்த சில வாரங்களில் செயல்படத் தொடங்கும் என்று தெரிவித்த மன்மோகன்சிங், இரண்டாவது அணுஉலை 6 மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் அவர் கூறினார். ஆனால், எதிர்பார்த்தபடி கூடங்குளத்தின் மூன்றாவது
மற்றும் நான்காவது அணு உலைகள் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
உள்ளூர் மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்ப்பால் கூடங்குளத்தில் அணுமின்நிலையம் செயல்படுவது தொடர்பான சந்தேகங்கள் இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

சிதம்பரத்தின் மீது குற்றச்சாட்டு: ஹிந்துத்துவா பயங்கரவாத விசாரணையை முடக்க சங்க்பரிவாரின் சதித்திட்டம்

சிதம்பரம்
புதுடெல்லி:மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை குற்றவாளி கூண்டில் நிறுத்தி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டுவரும் பா.ஜ.கவின் பின்னணியில் சங்க்பரிவார் செயல்படுவதாக கருதப்படுகிறது.
சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் தொடர்பு ப.சிதம்பரம் மத்திய அமைச்சர் ஆன பிறகே முழுமையாக வெளியானது. இந்நிலையில் ப.சிதம்பரத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் ஸ்தம்பிக்கச் செய்வதன் மூலம் ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் மீதான விசாரணையை முடக்க திட்டமிட்டுள்ளன பா.ஜ.க உள்ளிட்ட சங்க்பரிவாரங்கள்.
ப.சிதம்பரத்தின் மீது முன்பு ஒருபோதும் இல்லாத கோபத்தையும், காழ்ப்புணர்வையும் கடந்த சில நாட்களாக பா.ஜ.க வெளிப்படுத்தி வருகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தின் மீது குற்றம் சுமத்தி பா.ஜ.க இரு அவைகளிலும் ப.சிதம்பரத்தை புறக்கணித்து வருகின்றது.

Friday, December 16, 2011

சிறுநீரக கல்லைத் தடுக்கும் எலுமிச்சை!

resize_20111210093342
சிட்ரஸ் பழமான எலுமிச்சையில் சாதாரண எலுமிச்சை, கொடி எலுமிச்சை என இரண்டு வகைகள் உள்ளன. சிட்ரிக் அமிலம் இருக்கும் பழங்கள், சிட்ரஸ் பழ வகைகள்  என அழைக்கப்படுகின்றன. சிட்ரஸ் பழ வகைகளில் எலுமிச்சை, சாத்துக்குடி யில்தான் சிட்ரஸ் அதிகமாக உள்ளது.
உப்பில் உள்ள கால்சியம்தான் சிறுநீரகக் கல் உருவாவதில் உள்ள பலவித காரணிகளில் முதன்மைக் காரணியாக உள்ளது. நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும்  உப்பு, கால்சியத்தின் பாதிப்பைக் குறைக்க எலுமிச்சை சாறு உதவுகிறது.
அமெரிக்காவில் சாண்டியாகோ வில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் எலுமிச்சை சாற்றை அதிக அளவில் தண்ணீருடன் கலந்து குடிப்பவர் களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் சேர்  வதற்கான வாய்ப்புக் குறைவது கண்டறியப்பட்டுள்ளது. உணவில் உப்பைக் குறைத்துக் கொண்டும் அன்றாடம் எலுமிச்சைச் சாறு அருந்துவதன் மூலமும், சிறுநீரகக் கற்களே  உருவாகாமல் முழுமை யாகத் தடுக்கலாம்.

உடற்பயிற்சி செய்தால் அதிகமாக சாப்பிடலாம்

Exercise_03_1274344584
உடற்பயிற்சி செய்தால் கூடுதலாக உண்ணலாம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் டாக்டர் “மிகைல் அலோன்சோ’ என்பவரின் தலைமையிலான குழுவினரே மேற்கண்ட முடிவைத் தெரிவித்துள்ளனர். பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்குப் பின்னரே இம்முடிவை இவர்கள் எட்டியுள்ளதாகத் தெரிகிறது.
ஒரு நபர் தன் உடல் தன்மைக்கு ஏற்ற வகையில் முறையான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவாரேயானால், அவர் எடுத்துக் கொள்ளும் உணவும் உடலுக்கு ஏற்ற விதத்திலான அளவிலேயே அமையும் என்பது தெரிந்த விஷயம்தான்.

ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு.

resize_20111107012708
ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவு மிகவும் முக்கியமானது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து பிரிட்டனின் சிக்ரிட் கிப்சன் தலைமையிலான குழு ஆய்வுகளை நடத்தியுள்ளன.
இந்த ஆய்வு முடிவு பற்றித் தெரிவித்துள்ள குழுவின் அறிக்கையில் மற்ற உணவு மற்றும் அதிலிருந்து கிடைக்கும் சத்துகள் ஆகியவற்றை காலை உணவு தான் நிர்ணயிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்கள்.
பருப்பு வகைகள் மற்றும் பால் ஆகியவற்றைக் காலையில் உட்கொண்டு வருவதனால் உடலுக்கு நோய் இல்லாமல் பாதுகாக்கின்றது எனக் கூறப்படுகின்றது.
19 முதல் 64 வயது வரையில் உள்ளவர்களின் 12 ஆயிரத்து 68 மருத்துவ ஆவணங்களைப் ஆய்வு செய்தே இந்த முடிவுக்கு மருத்துவக் குழு வந்திருக்கிறது.
இந்த மருத்துவக்குழுவின் அறிக்கையின் படி, பெரும் பாலானவர்கள் திட உணவுக்கு முன்பாக கோப்பி அல்லது தேநீர் போன்றவற்றை அருந்த விரும்புகிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
பால் மற்றும் பருப்பு வகைகள் கல்சியம், நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவற்றைத் தரும் என்பதால் அவற்றை எடுத்துக் கொள்வதே நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள்.

‘எங்களது உரிமையை எச்சூழலிலும் விட்டுத்தரமாட்டோம்’ – தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம்

தமிழக சட்டப்பேரவை
சென்னை:முல்லைப் பெரியாறு அணைப் விவகாரத்தில் தமிழகம் தனக்குள்ள உரிமையை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்காது என்று சட்டப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கியது. முதலில், மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர் கருப்பசாமிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு 15 நிமிடங்களுக்கு பேரவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன.

கூகுள் குறோம் யூஸ் பண்றீங்களா? உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது


நீங்கள் கூகுல் குறோம் பயன்படுத்துபவரா.? அப்படியென்றால் நீங்கள் இதை அவசியம் படிக்க வேண்டும்.

இன்றய browser ல் கூகுல் & nbsp குறோமி தனக்கென ஒரு முத்திரை பதித்துள்ளது. இதனை அதிகமானோர் விரும்பிப் பயன்படுத்தும் browser. இதில் அனைத்துவிதமான வசதிகளும் உள்ளன இந்த நவீன வசதிகளைக் கொண்ட கூகுள் குறோமில் இருக்கும் மிகப்பெரிய ஆபத்து என்னவென்பதை யாரும் அறிவதில்லை.

அனைவரது வீட்டிலும் இணைய இணைப்பு இருப்பதில்லை அதற்காக நாம் பிரவுஸிங் செண்டெர்களைத்தேடிச் சென்று நமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்கின்றோம் நீங்கள் செல்லும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது அகவே நீங்கள்தான் உஷாராக இருக்கவேண்டும்.

அதுவும் பெண்கள் அதிக கவனம் தேவை உங்கள் மெயில் முகவரி மட்டுமல்ல பயன்படுத்தும் கடவுச்சொல்லையும் பதிவு செய்யும் வசதி இந்த கூகுள் குறோமில் உள்ளது என்பது உங்களிட்கு தெரியுமா…?

Thursday, December 15, 2011

இந்தியா விற்பனைக்கு.


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமான சந்தைகளில் ஒன்று... மதுக்கூர் சந்தை. ஒரு குடும்பத்துக்குத் தேவையான எல்லாப் பொருட்களும் கிடைக்கும். சாமான்கள் மிகத் தரமாகவும் விலை வெகு மலிவாகவும் இருக்கும். மதுக்கூர் சந்தையின் முக்கியமான அம்சம், கருவாடும் நல்லெண்ணெயும். ``அட... அந்த நல்லெண்ணெயும் கருவாடும் கூடிக் குழம்புக்குக் கொடுக்கும் ருசியே தனி`` என்பார்கள். தமிழ்நாட்டில் கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், கொல்லிமலை, பொள்ளாச்சி, வால்பாறை, தேனி, பாவூர்சத்திரம் என்று ஒவ்வொரு பகுதிக்கும் இப்படி ஒவ்வொரு சந்தையின் பெருமையைச் சொல்லிக்கொண்டே போகலாம். இந்தச் சந்தை மரபு இன்று, நேற்றல்ல; பல நூற்றாண்டுகளாகத் தொடர்வது.

 பண்டைய தமிழக அரசர்கள் பத்துப் பதினைந்து கிராமங்களுக்கு மையமாக ஓர் ஊரைத் தேர்ந்தெடுத்து  பெரிய கோயில்களைக் கட்டினார்கள். எங்கெல்லாம் இப்படிப் பெரிய கோயில்களைக் கட்டினார்களோ, அங்கெல்லாம் அருகிலேயே சந்தைகளை அமைத்தார் கள். திருவிழாக்கள், அதையட்டிப் போடப்படும் திருவிழாக் கடைகள்... எல்லாமே சந்தை என்கிற அமைப்பை மக்களின் வாழ்வோடு பிணைக்கும் அம்சங்கள். தமிழகம் மட்டும் அல்ல; இந்தியா முழுக்க இந்த மரபு இருக்கிறது. இந்த மரபின் நீட்சியே இன்றைய கோயம்பேடு சந்தை முதல் தெருவோர மளிகைக் கடைகள் வரை.

இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வளர்ச்சியை தடுக்க முயற்சி – ஆனந்த் பட்வர்தன்

ஆனந்த் பட்வர்தன்
துபாய்:தலித்துகளை குறித்து தயாரித்த ‘ஜெய் பீம்காம்ரேட்’ என்ற ஆவணத் திரைப்படத்தை திரையிடுவதற்காக துபாய் சர்வதேச திரைப்பட விழாவிற்கு வருகைத் தந்துள்ளார் இந்தியாவின் பிரபல ஆவண பட இயக்குநர் ஆனந்த்பட்வர்தன்.
அவர் பேட்டியளிக்கையில் கூறியதாவது: இந்தியாவில் முஸ்லிம், தலித், பழங்குடி இன மக்கள் வளர்ச்சி பெறுவதை தடுக்க முயலுகின்றனர். அது முடியாத சூழலில் அழித்தொழிக்கும் முயற்சிகள் நடைபெறுகிறது.
இந்தியாவின் அரசியல் சட்டத்தை உருவாக்கிய சிற்பி டாக்டர் அம்பேத்கரின் ஆதரவாளர்களை மாவோயிஸ்டுகளாக சித்தரிக்கின்றனர். போலீசாரின் மூலம் சில மர்ம கரங்கள் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன .
1997-ஆம் ஆண்டு அம்பேத்கரின் மஹாராஷ்ட்ராவில் அவருடைய ஆதரவாளர்கள் 10 பேரை சுட்டுக்கொலைச் செய்த வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரையும் ஒரு நாள் கூட சிறையில் அடைக்கவில்லை.
மும்பை கலவரத்தில் ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் குற்றம் சாட்டிய குற்றவாளிகளின் நிலைமையும் இதுவேயாகும்.
முஸ்லிம்,ஒடுக்கப்பட்டசமூகங்கள் மீது நடக்கும் தாக்குதல்களின் பின்னணியில் செயல்படுபவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. அதனால்தான், அத்துமீறல்கள் குறைவதில்லை. இந்தியாவில் ஒவ்வொரு தினமும் இரண்டு தலித்துகள் கொல்லப்படுகிறார்கள். மூன்றுபேர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
அம்பேத்கரின் நினைவு தினமான டிசம்பர் 6 இல் ஹிந்துத்துவாவாதிகள் பாப்ரி மஸ்ஜிதை தகர்ப்பதற்கு காரணம் அந்த மாமனிதரின் நினைவுகளை மூடிமறைப்பதற்காக இருக்கலாம்.
இந்தியாவில் ஜாதீய கட்டமைப்பு முடிவுக்கு வர கலப்பு திருமணத்திற்கு ஊக்கமளிக்க வேண்டும். இவ்வாறு ஆனந்த் பட்வர்தன் கூறினார். 

அமெரிக்க ராணுவம் வாபஸ்: ஈராக்கில் மகிழ்ச்சி கொண்டாட்டம்


அமெரிக்க ராணுவம் வாபஸ் ஈராக்கில் மகிழ்ச்சி கொண்டாட்டம்

பாக்தாத்:அமெரிக்க ராணுவம் ஈராக்கை விட்டு வெளியேறுவதில் மகிழ்ச்சி தெரிவித்து ஈராக்கின் நகரமான ஃபலூஜாவில் பல்லாயிரக்கணக்கானோர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த நிகழ்ச்சிகளில் ‘அமெரிக்கா தொலைந்து போகட்டும்’ என முழக்கங்களை மக்கள் எழுப்பினர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கொடிகளை எரித்த மக்கள் ’நாங்கள் இப்பொழுது சுதந்திரமானவர்கள்’ என்ற பேனரை கையில் பிடித்தவாறு போராட்டத்தை நடத்தினர்.
அமெரிக்காவின் அட்டூழிய தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு எதிராக போராடுபவர்களின் புகைப்படங்கள் நகரத்தில் ஒட்டப்பட்டிருந்தன. மக்களின் மகிழ்ச்சி கொண்டாட்டத்தை தொடர்ந்து ராணுவ பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

எகிப்தில் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு துவங்கியது

egypt second round election
கெய்ரோ:ஹுஸ்னி முபாரக்கை வெளியேற்றிய பிறகு நடைபெறும் முதல் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நேற்று துவங்கியது.
கிஸாவில் பிரமிடுகளுக்கு அருகில் உள்ள பள்ளிக்கூடத்தில் காலையில் வாக்காளர்களின் நீண்ட வரிசை காணப்பட்டது. ஒன்பது மாகாணங்களில் நடைபெறும் வாக்குப்பதிவு இன்றும் தொடரும்.
மெனுஃபியா, ஷார்க்கியா, பெஹீரா, இஸ்மாயிலியா, சூயஸ், ஸொபாஹ், அஸ்வான் ஆகிய இடங்களில் பெரும் மக்கள் திரள் வாக்குப்பதிவில் கலந்துகொண்டனர். ஆனால், முதல் கட்டத் தேர்தலைப் போல அதிக வாக்குப்பதிவிற்கு சாத்தியமில்லை என கருதப்படுகிறது.
499 உறுப்பினர்களை கொண்ட கீழ் சபையில் 180 இடங்களுக்கு நடைபெறும் இரண்டாவது கட்ட தேர்தலில் இரண்டு கோடி பேர் தங்களது வாக்குரிமையை நிறைவேற்றுவர். அடுத்த மாதம் துவக்கத்தில் இறுதி கட்ட தேர்தல் நடைபெறும். ஒருவர் மூன்று வாக்குகளை அளிக்கவேண்டும். இரண்டு வாக்குகள் தனி நபர்களுக்கும், ஒரு வாக்கு கட்சிக்கும் அளிக்கவேண்டும்.
முபாரக்கின் சர்வாதிகார ஆட்சியில் மிக அதிகமாக அடக்கி ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சி வெற்றிபெறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

லிபிய மக்கள் புரட்சியின் பலனை அடைய ஒத்துழைக்க வேண்டும் – டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி


டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி

திரிபோலி:புரட்சிக்கு பிந்தைய லிபியாவில் கலந்தாலோசித்தல், ஜனநாயகம், சுதந்திரம் ஆகியவற்றின் அடிப்படையிலான அரசியல் சட்டம் அமுலுக்கு வர லிபியாவின் குடிமக்கள் முயற்சிக்க வேண்டும் என சர்வதேச இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் சபை தலைவரான ஷேக் டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லிபியாவின் புரட்சி கவுன்சில் மற்றும் மார்க்க அறிஞர்களின் அழைப்பை ஏற்று லிபியாவிற்கு சென்ற ஷேக் கர்தாவி பெங்காசியில் அமைந்துள்ள மஸ்ஜித் பாப் அஜ்யாஸில் நடத்திய ஜும்ஆ பேருரையிலும், லிபர்டி அரங்கில் நடந்த பொதுக் கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மேலும் அவர் கூறியதாவது: சிவிலியன்கள் ஆயுதங்களை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும். இஸ்லாம் கற்று தந்துள்ள முறையில் நம்பிக்கையை வெளிப்படுத்த வேண்டும். கத்தாஃபியின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்ததன் பலன் தேசத்திற்கு கிடைக்க வேண்டுமெனில் விட்டுக்கொடுத்தல், மன்னிப்பு வழங்குதல் கலாச்சாரத்தை கடைப்பிடிக்க அனைவரும் தயாராக வேண்டும்.
பொதுத்துறையில் பெண்களுக்கு அதிக வாய்ப்பை அளிக்க வேண்டும். புரட்சியின் காலக்கட்டத்தில் தியாகத்தின் முன்மாதிரியாக திகழ்ந்த மக்களை வாழ்த்துகிறேன். இவ்வாறு கர்தாவி உரையில் குறிப்பிட்டார்.
கர்தாவியின் லிபியா சுற்றுப்பயணம் அரசியல் நோக்கமுடையது எனவும், இஃவானுல் முஸ்லிமீன் இயக்கத்திற்கு பலம் சேர்ப்பதற்கு என்றும் பரப்புரை செய்வது தவறு என மார்க்க அறிஞர்கள் குழுவின் தலைவர் கைஸ் அல் ஃபாகிரியும் பிரச்சார குழுவின் தலைவர் வனீஸ் மப்ரூக் அல் ஃபாஸியும் கூறியுள்ளனர்.

Wednesday, December 14, 2011

ஈரான் சுட்டு வீழ்த்திய ஆளில்லா உளவு விமானத்தை திருப்பி தருமாறு அமெரிக்கா கோரிக்கை

ஈரான் சுட்டு வீழ்த்திய ஆளில்லா உளவு விமானத்தை திருப்பி தருமாறு அமெரிக்கா கோரிக்கை1
வாஷிங்டன்:ஈரான் வான் எல்லையில் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா(ட்ரோன்)உளவு விமானத்தை திருப்பி தருமாறு ஈரானுக்கு அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமிப்பு முடிந்துவிட்டதாக அறிவிக்க நடத்தப்பட்ட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதனை ஒபாமா தெரிவித்தார். விமானத்தை திரும்ப தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானின் பதிலுக்காக காத்திருக்கிறோம் என  ஒபாமா கூறினார்.
வெள்ளை மாளிகையில் ஈராக் பிரதமர் நூரி அல் மாலிக்கியுடன் நடந்த சந்திப்பிற்கு பிறகு இருவரும் இணைந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் உரையாற்றினர்.
அதே வேளையில், ஈரானின் வான் எல்லையையும், சர்வதேச சட்டங்களையும் மீறியுள்ள அமெரிக்கா மன்னிப்பு கோரவேண்டும் என ஈரான் பாதுகாப்பு அமைச்சர் அஹ்மத் வாஹித் பதிலளித்துள்ளார். அமெரிக்காவின் உளவு விமானம் தற்பொழுது ஈரான் வசம் உள்ளது என்றும், அதனை திருப்பி தர முடியாது என்றும் அஹ்மத் வாஹித் தெரிவித்தார்.
அமெரிக்க உளவு விமானத்தின் தொழில்நுட்பத்தை குறித்து நிபுணர்கள் ஆராய்ந்துவருவதாக நேற்று முன் தினம் வெனிசுலா நாட்டின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் தெரிவித்தார்.
ஈரானின் ரகசியங்களை வேவு பார்க்க வந்த அமெரிக்காவின் உளவு விமானத்தை திருப்பி தரமாட்டோம் என ஈரான் புரட்சிப் படையின் துணை தலைவர் ஜெனரல் ஹுஸைன் ஸலாமி தெரிவித்துள்ளார். அமெரிக்க விமானம் ஈரானின் எல்லையில் அத்துமீறிய சம்பவத்தை குறித்து ஐ.நாவில் ஈரான் புகார் அளித்துள்ளது.

யுனெஸ்கோ தலைமையகத்தில் இனி ஃபலஸ்தீன் கொடி பறக்கும்

Palestinian flag at Unesco
ஐ.நா:ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி-விஞ்ஞான-கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவின் தலைமையகத்தில் இனி ஃபலஸ்தீன் கொடியும் பறக்கும்.
பாரிஸில் யுனெஸ்கோ தலைமையகத்தில் நடந்த கொடி ஏற்று நிகழ்ச்சியில் ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ், யுனெஸ்கோ இயக்குநர் ஜெனரல் இரினா பொகோவா ஆகியோர் பங்கேற்றனர்.
ஃபலஸ்தீன் தேசிய கீதத்தின் பின்னணியில் பச்சை, கறுப்பு, வெள்ளை ஆகிய மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. ஃபலஸ்தீனுக்கு யுனெஸ்கோவில் பூரண உறுப்பினர் பதவி கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து யுனெஸ்கோவின் தலைமையகத்தில் ஃபலஸ்தீன் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
ஃபலஸ்தீனின் பூரண உறுப்பினர் பதவியை அங்கீகரித்ததன் மூலம் ஃபலஸ்தீன் நாடு என்ற அங்கீகாரத்தை வழங்கிய முதல் ஐ.நா அமைப்பாக யுனெஸ்கோ மாறியது.

துனீசியா:புதிய அதிபர் பதவி ஏற்பு

Moncef Marzouki promised to be faithful to the martyrs
துனீஸ்:அரபுலக புரட்சியின் பிறப்பிடமான துனீசியாவில் முன்ஸிஃப் மர்ஸூகி புதிய அதிபராக உறுதிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
நாட்டின் விருப்பங்களும், சட்டங்களும் பாதுகாக்கப்படும் என உறுதி அளிப்பதாக திருக்குர்ஆனின் மீது கைவைத்தவாறு சட்டமியற்றும் அவையில் நடந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:நாட்டிற்காக இரத்த சாட்சிகளாக மாறியவர்களிடம் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களின் உயிர் தியாகம்தான் என்னை இப்பதவியில் அமர வைத்துள்ளது. புரட்சியின் லட்சியம் முழுமை அடைவதற்காக செயல்படுவேன். அரபுலக புரட்சிக்கு வித்திட்ட பூமியில் ஏகாதிபத்திய யுகத்திற்கு பிறகு முதல் அதிபராக பதவியேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு மர்ஸூகி கூறினார்.
துனீசியாவின் முன்னாள் சர்வாதிகாரி பின் அலியின் ஆட்சி காலக்கட்டத்தில் 10 ஆண்டுகள் வெளிநாட்டில் வசித்துவந்தார் மர்ஸூகி. 217 உறுப்பினர்களை கொண்ட அவையில் 153 உறுப்பினர்களின் ஆதரவுடன் மர்ஸூகி அதிபராக தேர்வுச் செய்யப்பட்டார்.
202 உறுப்பினர்கள் அவையில் இருந்த வேளையில், மூன்று பேர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர். 44 எதிர்கட்சி உறுப்பினர்கள் வாக்குச்சீட்டில் எதுவும் நிரப்பாமல் அளித்தனர்.
பிரான்சில் டாக்டர் பட்டம் பெற்ற மர்ஸூகி 1989-ஆம் ஆண்டு முதல் 1994-ஆம் ஆண்டு துனீசியாவை விட்டு வெளியேறும் வரை துனீசியன் லீக் ஃபார் டிஃபன்ஸ் ஆஃப் ஹியூமன் ரைட்ஸின் தலைவராக பதவி வகித்தார்.
பிரஞ்சு மற்றும் அரபி மொழிகளில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்காவிற்கு வருகை தந்துள்ளார். மர்ஸூகியின் காங்கிரஸ் பார்டி ஃபார் தி ரிபப்ளிக் கட்சிக்கு 29 இடங்கள் உள்ளன. மர்ஸூகி ஆளுங்கட்சியான அந்நஹ்ழாவின் கைப்பாவை என எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.
இஸ்லாமிய கட்சியான அந்நஹ்ழாவின் தலைவர் ஹமதி ஜபலியை பிரதமராக நியமிப்பது மர்ஸூகியின் முதல் பணியாகும்.

Tuesday, December 13, 2011

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞராக ஃபாத்திமா பின்த் ஸவ்தா?

fathima Bensouda
ஹேக்:மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவை சார்ந்த முஸ்லிம் பெண்மணி ஃபாத்திமா பின்த் ஸவ்தா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்குரைஞராக (chief prosecutor) நியமிக்கப்பட உள்ளார்.
ஐ.நா தலைமையகத்தில் நடக்கும் வாக்கெடுப்பில் இறுதி முடிவு எடுக்கப்படும். 120 நாடுகளிலிருந்து ஃபாத்திமா பின் ஸவ்தா மட்டுமே இப்பதவிக்கு பரிசீலனையில் உள்ளார். தற்போது துணை வழக்குரைஞராக இருக்கும் ஃபாத்திமா, லூயிஸ் மோரேனோ ஒகாம்போ பதவி விலகும் ஜூன் மாதம் பதவி ஏற்பார்.
அர்ஜண்டினாவை சார்ந்த ஒகாம்போ சூடான் அதிபர் உமர் அல் பஷீர், கொலை செய்யப்பட்ட லிபியா அதிபர் முஅம்மர் கத்தாஃபி ஆகியோர் மீது கைது வாரண்டை பிறப்பித்தவர் ஆவார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆப்பிரிக்க நாடுகளை நோக்கமாக கொண்டு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள சூழலில் ஃபாத்திமா பின்த் ஸவ்தாவின் நியமனம் தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது.

அமெரிக்க உளவு விமானத்தை பரிசோதிக்கும் ஈரான் பொறியாளர்கள்- நவீன் உளவு விமானம் தயாரிக்க திட்டம்!

US drone
டெஹ்ரான்:சுட்டு வீழ்த்திய அமெரிக்க ஆளில்லா விமானத்தின்(ட்ரோன்) தொழில்நுட்பத்தை குறித்து அறிய ஈரான் பொறியாளர்கள் விமானத்தை அக்குவேறு ஆணிவேறாக பிரித்து ஆய்வு செய்துவருகின்றனர். அமெரிக்க ட்ரோனை விட நவீன தொழில்நுட்ப உளவு விமானத்தை தயாரிப்பதற்காக இவ்வாறு ஆய்வு நடத்துவதாக ஈரானின் பாராளுமன்ற வெளிநாட்டு கொள்கை உருவாக்க குழுவின் தலைவர் பர்வேஸ் ஸுரூரி கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் விரைவிலேயே அமெரிக்க உளவு விமானத்தை விட சிறந்த விமானத்தை தொழில்ரீதியாக ஈரான் பொறியாளர்களால் உருவாக்க முடியும் என பர்வேஸ் ஸுருரி நம்பிக்கை தெரிவித்தார்.
இம்மாதம்4-ஆம் தேதி கிழக்கு ஈரானின் வான் எல்லையை மீறிய அமெரிக்காவின் நவீன உளவு விமானமான ஆர்.க்யூ-170 என்ற விமானத்தை ஈரான் தந்திரமாக சுட்டு வீழ்த்தி தரை இறக்கியது. உளவு விமானத்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்கமாட்டோம் என ஈரான் ஏற்கனவே தெரிவித்துவிட்டது.

இந்தியாவில் அதிகம் விவாதிக்கப்படுவது ஊழல்: பி.பி.சி சர்வேயில் தகவல்

corruption
லண்டன்:உலகம் முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் உருவாக்கும் பீதியை குறித்து கவலை அடையும் வேளையில் இந்தியாவில் மட்டும் அதிகமாக மக்களால் விவாதிக்கப்படுவது ஊழல் என பி.பி.சி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
23 நாடுகளில் 11 ஆயிரம் நபர்களிடம் பி.பி.சி க்ளோபல் சேவை நடத்திய ஆய்வில் இவ்விபரம் தெரியவந்துள்ளது.
இந்தியாவை தவிர நைஜீரியா, இந்தோனேஷியா, பெரு ஆகிய நாடுகளிலும் ஊழல் அதிகமாக விவாதிக்கப்படுகிறது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் முக்கியமான சர்ச்சை வேலையில்லா திண்டாட்டமாகும். 18 சதவீதம் பேர் வேலையில்லா திண்டாட்டம் முக்கிய பிரச்சனை என கூறுகின்றனர்.
பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, வறுமை ஆகியன இவ்வாண்டும் மக்கள் அதிகமாக விவாதித்த இதர விஷயங்களாகும்.

Monday, December 12, 2011

ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளராக மாறி விட்டார் அன்னா ஹசாரே:காங்கிரஸ்


மத்திய உருக்குத்துறை மந்திரி பெனி பிரசாத் வர்மா நிருபர்களிடம் கூறியதாவது:- சமீபகாலமாக ராகுல்காந்தியை பற்றி அன்னா ஹசாரே இழிவாக பேசி வருகிறார். அவர் காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர்களில் ஒருவர் மட்டுமே. எம்.பி.யாகவும் இருக்கிறார். அவருக்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் தொடர்பு கிடையாது. ஹசாரே தேர்தல் மூலம் மக்களை சந்திக்க வேண்டும்.
 
ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளராக மாறி விட்டார் அன்னா ஹசாரே:காங்கிரஸ்உத்தரபிரதேசத்துக்கு அவர் வந்து போட்டியிடலாம். அன்னா ஹசாரேக்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு இருக்கிறது. அவர் அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளராகவே மாறி விட்டார். அன்னா ஹசாரே 75 வயதான பெரியவர் என்று குறிப்பிடுகிறார்கள். காங்கிரசுக்கு வயது 125 என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.இவ்வாறு பெனி பிரசாத் வர்மா கூறினார்.

ஃபலஸ்தீன் மக்கள் என்பது கிடையாது – அமெரிக்க குடியரசு கட்சி தலைவரின் திமிர் பேச்சு


வாஷிங்டன்:ஃபலஸ்தீன் மக்கள் என்பது புனையப்பட்டது என அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு போட்டியிட இருக்கும் குடியரசு கட்சியின் தலைவர் நியூட் கின்க்ரிச் கூறியுள்ளார்.

லோவாவில் குடியரசு வேட்பாளர்கள் பங்கேற்ற விவாதத்தில் கின்க்ரிச் இந்த சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். முன்பு அமெரிக்காவில் இஸ்ரேல் ஆதரவு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதையே தற்பொழுது மீண்டும் தெரிவித்துள்ளார் கின்க்ரிச்.
கின்க்ரிச்சின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரது கூற்றை அங்கீகரிக்க இயலாது என்றும், இரு நாடுகள் தீர்வை ஏற்றுக்கொள்ள இஸ்ரேலிய அரசும், அமெரிக்க யூதர்களும் தயாராகவேண்டும் என டெமோக்ரேடிக் செனட்டர் கார்ல் லெவின் தெரிவித்துள்ளார். கின்க்ரிச் தீர்விற்கான வழியை கூறவில்லை என லெனின் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேல் ஆதரவாளர்களின் துணையுடன் ஆட்சியை கைப்பற்ற குடியரசு கட்சி உறுப்பினர்கள் முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உண்மையுடன் எவ்விதமும் பொருந்தாத வார்த்தைகளை கின்க்ரிச் மொழிந்ததாக ஃபலஸ்தீன் பாராளுமன்ற உறுப்பினர் ஹன்னான் அஷ்ரஃபி தெரிவித்துள்ளார். சமாதான முயற்சிகள் துவங்கவிருக்கும் வேளையில் நெருக்கடியை உருவாக்கும் முயற்சி என மாஸேசூட்ஸ் ஆளுநர் மிட் ரோம்னி கூறியுள்ளார்.