Monday, December 12, 2011

துனீசியாவில் இடைக்கால அரசியல் சட்டத்திற்கு அங்கீகாரம்


tu-i

துனீஸ்:வட ஆப்பிரிக்க நாடான துனீசியாவில் புதிய அரசை உருவாக்க வழிவகுக்கும் இடைக்கால அரசியல் சட்டத்திற்கு பாராளுமன்ற அவை அங்கீகாரம் அளித்துள்ளது.
217 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் 141 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 37 பேர் எதிராகவும் வாக்களித்தனர். 39 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.ஐந்து நாட்களாக நீண்ட சூடான விவாதத்திற்கு பிறகு இடைக்கால அரசியல் சட்டத்திற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்தது. இதனால் ஜனநாயக புரட்சி முடிந்து இரண்டு மாதத்திற்குள் நடந்த தேர்தலில் வெற்றிப்பெற்ற அந்நஹ்ழா தலைமையிலான கூட்டணி அரசு வருகிற திங்கள் கிழமை பதவியேற்கும்.
துனீசியாவின் வரலாற்றில் இடைக்கால அரசியல் சட்டம் ஒரு மைல்கல் என பேரவை தலைவர் முஸ்தஃபா பின் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், அரசியல் சட்டத்தில் சில பிரிவுகளை கண்டித்து எதிர்கட்சிகள் தலைமையில் பாராளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடந்தது. துனீசியா வம்சாவழியைச் சார்ந்த பெற்றோருக்கு பிறந்த முஸ்லிம்கள் மட்டுமே அதிபர் பதவிக்கு போட்டியிட இயலும் என்ற அரசியல் சட்டப்பிரிவை கண்டித்துதான் போராட்டம் நடந்தது.
இடைக்கால அரசியல் சட்டத்தின் காலாவதி பொது தேர்தல் நடைபெறும் வரையிலாகும்.

ப்ரஸ் கவுன்சிலுக்கு கூடுதல் அதிகாரம் தேவை – பிரதமருக்கு மார்க்கண்டேய கட்ஜு கடிதம்

மார்க்கண்டேய கட்ஜு
புதுடெல்லி:ப்ரஸ் கவுன்சிலுக்கு கூடுதல் அதிகாரம் தேவை என கவுன்சிலின் சேர்மன் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுத்தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
ப்ரஸ் கவுன்சிலை நவீனப்படுத்த எலக்ட்ரானிக் மீடியாக்களையும் ப்ரஸ் கவுன்சிலின் வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். பத்திரிகைகளையும், பத்திரிகை ஏஜன்சிகளையும் தண்டிக்கவும், விமர்சிக்கவும், எச்சரிக்கை விடுக்கவும் மட்டுமே ப்ரஸ் கவுன்சிலுக்கு தற்பொழுது அதிகாரம் உள்ளது.
எச்சரிக்கை விடுத்தாலோ அல்லது விமர்சித்தாலோ பத்திரிகையும், பத்திரிகையாளர்களும் அதனை புறக்கணிக்க முயலுகின்றனர் என்பதுதான் உண்மை. பத்திரிகை தர்மத்தை மீறும் பத்திரிகையாளர் மீது அபராதம் விதித்தல், அரசு விளம்பரத்தை ரத்துச்செய்தல், உரிமத்தை ரத்துச்செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். தவறு செய்யும் பத்திரிகையாளர்களுக்கும், பத்திரிகைக்கும் அவர்களின் கருத்தினை தெரிவிக்கும் வாய்ப்பை வழங்கவும் சட்டத்தில் வழிவகுக்கவேண்டும்.
பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்வு காணமுடியாவிட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முயலவேண்டும். கவுன்சிலின் வரம்பிற்குள் மின்னணு மீடியாக்களையும், இணையதளத்தையும் உட்படுத்தி மீடியா கவுன்சில் என பெயர் மாற்றவேண்டும். இவ்வாறு கட்ஜு தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அக்டோபர் 11-ஆம் தேதி பிரதமருக்கு கட்ஜு அனுப்பிய கடிதம் நேற்று முன் தினம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் அளித்த மனுவை தொடர்ந்து வெளியானது. தகவல் அறியும் உரிமை ஆர்வலரான சுபாஷ் அகர்வால் என்பவர் இம்மனுவை சமர்ப்பித்தார்.

Sunday, December 11, 2011

ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்த முதல் பெண் போலிஸ் அதிகாரி


donna -isvec-police

ஸ்டாக்ஹோம்:டோன்னா எல்ஜம்மால் என்கிற 26  வயது பெண்மணியே ஸ்வீடனில் ஹிஜாப் அணிந்து பணி புரியும் முதல் பெண் காவலதிகாரி என்று மெட்ரோ சே என்னும் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அவர் ஹிஜாப் அணிவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே காவல்துறையில் தாம் இணைய விருப்பப்பட்டார் என்றும் அப்பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து டோன்னா எல்ஜம்மால் தாம் சிறுவயது முதலே மக்களுக்கு சேவை செய்ய ஆர்வம் கொண்டுள்ளதாகவும் கணினி முன் அமர்ந்து பொழுது போக்க தாம் விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட விவாதங்களுக்கு பின்னர் சில வருடங்களுக்கு முன்புதான் போலிஸ் சீருடையின் ஒரு பகுதியாக ஹிஜாப் அணிய தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
அவரை பொறுத்தவரையில் ஸ்வீடன் ஒரு பன்முக கலாச்சாரத்தை கொண்ட நாடு எனவும் அனைத்து துறைகளிலும் பல்வேறுபட்ட மக்கள் பணிபுரிந்தால்தான் அறிவும் புரிதலும் வளரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
டோன்னா எல்ஜம்மால் சிறுவயது முதலே மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க கூடியவர். மேலும் அவரின் குடும்பம் வெளிநாட்டிலிருந்து ஸ்வீடனில் போய் குடியேறியவர்கள். அவர் சிறைத்துறையில் பணிபுரியும்போதே ஹிஜாப் அணியும் பழக்கம் உடையவர் ஆவார். மேலும் முன்னதாக ஹிஜாப் பற்றி பலரும் விமர்சனம் செய்தனர் என்றும் பின்னர் தன்னை நன்றாக புரிந்துகொண்டதன் விளைவாக விமர்சனங்கள் நின்று போனது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் ஹிஜாப் எந்த வகையிலும் தனது பணிக்கு இடையூறாக இல்லை என்றும் அது தனது உடலில் ஒரு பகுதி என அவர் கருதுவதாகவும் மற்றும் ஹிஜாப் அணிந்து கொண்டே அணைத்து பணிகளையும் சிறப்பாக செய்ய முடிகிறது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முல்லைப் பெரியாறு அணை: கேரள தமிழக உணர்ச்சி அரசியல்: அ.மார்க்ஸ்


mulla periyar war

கோயம்புத்தூரிலிருந்து இதை எழுதிக் கொண்டிருக்கின்றேன். தமிழக கேரள எல்லை மாவட்டங்களில் ஒன்று இது. எல்லாக் கடைகளிலும் தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் பெயர் பலகைகள் இருக்கும். மலையாளச் செய்தித் தாள்கள் எங்கும் கிடைக்கும். உள்ளூர் மக்களில் பெரும்பாலோர் மலையாள மொழியைப் புரிந்து கொள்வார்கள். ஒரு மணி நேரப் பேருந்துப் பயணத்தில் பாலக்காடு கணவாயைத் தாண்டினீர்களானால் இயற்கை அழகு கொஞ்சும் மலையாள பூமி தொடங்கிவிடும். பாலக்காடு நகரம் தமிழ்நாட்டின் ஒரு பகுதியைப் போலத்தான் காட்சியளிக்கும். எல்லோரும் அங்கே தமிழ் பேசுவார்கள். தென்கோடித் தமிழகமான கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. தொல்காப்பியரின் ஆசான் பிறந்த அதங்கோடு இங்கேதான் இருக்கிறது. இங்கே பேசப்படும் மலையாளங் கலந்த தமிழை ‘எல்லைத் தமிழ்’ என்பாருண்டு. அங்கிருந்து மேற்குக் கடற்கரையோரமாகப் பயணித்தீர்களானால் கேரளத் தலைநகரமான திருவனந்தபுரம் வரை நீங்கள் சரளமாக யாருடனும் தமிழ் பேசலாம்.
அரிசி, காய்கறிகள், பால், இறைச்சி எல்லாம் கேரளத்திற்கு தமிழகத்திலிருந்துதான் போகின்றன. தமிழகத்தின் எந்த ஊரிலும் ஒரு மலையாளத்தாரின் தேநீர்க்கடை இருக்கும். கிட்டத்தட்ட தமிழக முக்கிய நகரங்கள் எல்லாவற்றிலும்  மலையாள ஆலுக்காஸ் குழும நகைக் கடைகளும், முத்தூட் நிதி நிறுவனங்களும் சமீப காலமாகப் பரவியுள்ளன. மலையாளத்தார்கள் மத்தியிலுள்ள ஒற்றுமை உணர்வு, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமை, இன உணர்வு, தொழில் முனைவு ஆகியன குறித்து தமிழர்கள் மத்தியில் ஒருவகை ஏக்கமும் கோபமும்  உண்டு. சமீபத்தில் நான் சவூதி சென்றிருந்த பொழுது அங்கே மத உணர்வைத் தாண்டி தமிழர்கள் மத்தியிலுஞ்சரி, மலையாளிகள் மத்தியிலுஞ்சரி இந்த மொழி அடையாளம் கூடுதலாக இருந்ததைப் பார்க்க முடிந்தது.
சமீபகாலமாக இருதரப்பிலும் இந்த இன உணர்வும் அதன் இன்னொரு பக்கமான இன வெறுப்பும் கூடுதலடைவதில் முல்லைப் பெரியார் அணைப் பிரச்சினை ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. இரு பக்கத்திலும் இன உணர்வு இயக்கங்கள் மட்டுமின்றி எல்லா அரசியல் கட்சிகளுமே இதற்குக் காரணமாகியுள்ளன. கேரளத்தைப் பொருத்த மட்டில் பரம வைரிகளான கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரசும் இந்த விசயத்தில் ஒரே குரலில் முழங்குகின்றன. அங்கே இன உணர்வு இயக்கம் என்று பெரிதாக எதுவும் இல்லாவிட்டாலும் எல்லா மையநீரோட்ட அரசியல் கட்சிகளுமே அந்தக் ‘குறை’யைப் போக்கக் கூடியனவாகவே உள்ளன.

Saturday, December 10, 2011

இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம்!

human rights day
(சர்வதேச மனித உரிமை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10-வது தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.இத்தருணத்தில் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை நாம் அனைவரும் அவசியம் பெற்றிருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் இக்கட்டுரை சமர்ப்பிக்கப்படுகிறது.)
இந்த உலகில் கண்ணியத்துடன் வாழும் உரிமை அனைத்து மனிதர்களுக்கும் உள்ளது. ஆனால், விஞ்ஞானத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கும் இந்த நவீன காலக்கட்டத்திலும் மனித உரிமைகள் வெளிப்படையாகவே மீறப்பட்டு வருகின்றன.
நாகரீகத்தின் பிரதிநிதிகள் என தம்பட்டம் அடிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளும், மேற்காசியாவின் அச்சுறுத்தலாக விளங்கும் இஸ்ரேலும், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை குறித்து வாய் கிழியப்பேசும் இந்தியாவும், கம்யூனிசத்தின் மார்பிடங்களான சீனா மற்றும் ரஷ்யாவும் மனித உரிமை மீறலில் முன்னணியில் உள்ளன.
லாக்கப் கொலை முதல் தீவிரவாதத்திற்கு எதிரான சர்வதேச போர் வரை மனித உரிமை மீறல்கள் சர்வசாதாரணமாக அரங்கேற்றப்பட்டு வரும் காட்சியை நாம் காண்கிறோம்.
குஜராத்தில் நடந்த போலி என்கவுண்டர்கள் மனித உரிமை மீறலின் நடுங்கச் செய்யும் உதாரணமாகும். இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு பேர் அநியாயமாக போலி என்கவுண்டரில் திட்டமிட்டு மோடியின் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை சிறப்பு புலனாய்வு குழு விசாரணையின் மூலம் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இவ்வறிக்கையை அங்கீகரித்த குஜராத் உயர்நீதிமன்றம் குற்றவாளிகளான போலீஸ் அதிகாரிகள் மீது கொலைக் குற்றத்திற்கான வழக்கை பதிவுச்செய்ய உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் நடக்கும் குண்டுவெடிப்புகளில் அப்பாவிகள் கொல்லப்படுவதும், அத்தாக்குதல்களின் பெயரால் நிரபராதிகள் வேட்டையாடப்படுவதும் தெளிவான மனித உரிமை மீறல்களாகும். கடந்த ஜூலை மாதம் மும்பைத்தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட ஃபயாஸ் உஸ்மானி என்பவர் போலீசாரின் சித்திரவதையில் உயிரிழந்தார்.
கடந்த 11 ஆண்டுகளாக மணிப்பூரில் இரோம் ஷர்மிளா என்ற இரும்பு பெண்மணி ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை வாபஸ் பெறக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திவருகிறார். 2000-ஆம் ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி இம்பால் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்திருந்தவர்கள் மீது ஆயுதப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 கொல்லப்பட்டனர். இந்த கோரக் காட்சியை கண்ட அவர் 2 தினங்கள் கழித்து(நவம்பர் 4 2000) உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார்.
ஆர்,எஸ்.எஸ்ஸின் பின்னணியில் இயங்கும் கார்ப்பரேட் உண்ணாவிரத போராளி அன்னா ஹஸாரேவின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் மத்திய அரசு இரோம் ஷர்மிளாவின் மனித உரிமைக்கான முழக்கத்திற்கு இதுவரை பதிலளிக்கவில்லை.

Friday, December 9, 2011

மக்கா மஸ்ஜித்: முன்மாதிரியான ஆந்திர மாநில அரசு


meccamasjid

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் நிரபராதிகள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்க ஆந்திர மாநில அரசு முடிவுச்செய்துள்ளது.
சட்டப்பேரவையில் மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்த மறு தினமே 70 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்குவதற்கு விடுவிக்க ஆந்திர அரசு உத்தரவிட்டது.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு பயங்கரவாத வழக்கில் அநீதமாக கைது செய்யப்பட்டு சித்திரவதைகளையும், சிறைவாசத்தையும் அனுபவித்த நிரபராதிகளுக்கு அரசு இழப்பீடு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2007-ஆம் ஆண்டு மே மாதம் 15- ஆம் தேதி ஹைதராபாத்தில் பிரபலமான மக்கா மஸ்ஜிதில் குண்டுவெடித்ததில் ஒன்பது பேர் பலியானார்கள். அதனை தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கில் 80 முஸ்லிம் இளைஞர்கள் ஹுஜி, லஷ்கர், சிமி இயக்க உறுப்பினர்கள் என குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
சிறையில் இந்த இளைஞர்கள் அநியாயமான குற்றச்சாட்டுகளின் பெயரால் சிறையில் கொடுமைகளை சந்தித்த வேளையில், அவர்களது குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்தனர். அநீதமாக கைது செய்யப்பட்ட இளைஞர்களை பின்னர் நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்து ஒரு வருடம் நிறைவடைகிறது. இக்காலக்கட்டத்தில் தீவிரவாதி என்ற அபாண்டமான பழியை சுமக்கவேண்டிய துரதிர்ஷ்டவசமான சூழலுக்கு அவ்விளைஞர்கள் தள்ளப்பட்டனர். உளரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு ஹிந்துத்துவா பயங்கரவாதிகள்தாம் மக்கா மஸ்ஜிதில் குண்டுவைத்தார்கள் என்ற உண்மை அஸிமானந்தாவின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மூலமாக தீவிரவாத பழிச் சொல்லிலிருந்து விடுதலை கிடைத்தது. ஆனால், அவர்கள் அனுபவித்த துயரத்திற்கும், சிறையில் கழித்த நாட்களுக்கும் யாரால் ஈடு செய்யமுடியும்? இந்நிலையில் தேசிய சிறுபான்மை கமிஷன் ஆந்திர மாநில அரசுக்கு அப்பாவி முஸ்லிம் இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்கவும், அத்தொகையை இக்குற்றத்தை புரிந்த போலீஸ் அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து ஈடு செய்யவும் பரிந்துரை செய்தது.
இவ்வழக்கில் 80 பேர் கைது செய்யப்பட்ட போதிலும் 70 பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஒரு வருடம் தாமதம் ஏற்பட்டாலும் இழப்பீடு வழங்கும் ஆந்திர மாநில அரசின் உத்தரவு வரவேற்கத்தக்கது ஆகும். முஸ்லிம் இளைஞர்களை குற்றமற்றவர்கள் என கூறி நீதிமன்றம் விடுதலை செய்த வேளையில் அன்று ஆந்திர மாநில முதல்வர் மன்னிப்புக் கோரியிருந்தார். தற்பொழுது பாதிக்கப்பட்ட இளைஞர்களின் மறுவாழ்விற்காக இழப்பீட்டையும் வழங்கி ஆந்திர மாநில அரசு இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக மாறியுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புகள் மற்றும் தீவிரவாத தாக்குதல்களின் பெயரால் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த உண்மை தெள்ளத் தெளிவாக புரிந்த பிறகும் நிரபராதிகளை விடுதலைச் செய்யவோ அவர்களுக்கு இழப்பீடு வழங்கவோ எந்த மாநில அரசும் முன்வரவில்லை. இச்சூழலில் ஆந்திர மாநில அரசின் நடவடிக்கை பாராட்டிற்குரியது மட்டுமல்ல துணிச்சலானதுமாகும்.
2006 செப்டம்பர் எட்டாம் தேதி 37 பேர் உயிரிழக்க காரணமான மலேகான் குண்டுவெடிப்பின் பெயரால் அநீதமாக கைது செய்யப்பட்ட9 முஸ்லிம் இளைஞர்களில் 7 பேர் 5 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் அப்துல் நாஸர் மஃதனி ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு நிரபராதி என விடுதலைச் செய்யப்பட்டார். ஆனால் இவர்களுக்கு இழப்பீடு வழங்க அரசுகள் தயாரில்லை. அதேவேளையில் அப்துல் நாஸர் மஃதனி மீண்டும் ஒரு பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநில சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவ்வேளையில், நிரபராதிகளுக்கு சில லட்சங்களை இழப்பீடாக வழங்குவதன் மூலமாக அவர்கள் இழந்தை திருப்பி கொடுக்க இயலாது என்றாலும் ஆந்திர மாநில அரசின் முடிவு அநியாயமாக கைது செய்யப்படும் அப்பாவிகளுக்கு நீதி வழங்குவதற்கான புதிய சட்டத்திருத்தத்திற்கு வழிகோலும் என எதிர்பார்ப்போம்!
அ.செய்யது அலீ.

Wednesday, December 7, 2011

ஈரானில் கால்பதிக்க அமெரிக்காவின் புதுத்திட்டம்

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இருந்த அமெரிக்க தூதரகம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டது. இதனையடுத்து அவ்விரு நாடுகளுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகள் முற்றுமுழுதாக நின்று போயின.

இந்நிலையில் ஈரானிய மக்களுடன் தொடர்பு கொள்ளும் முகமாக அமெரிக்கா புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி 'ஒன்லைன் ஈரானிய தூதரகம்' ஒன்றை ஆரம்பித்துள்ளது. இதன் இணைய முகவரி www.iran.usembassy.gov என்பதாகும். இவ்விணையத்தளமானது ஆங்கிலம், மற்றும் பார்ஷி மொழிகளைக் கொண்டுள்ளது. 

எனினும் ஈரான் இதற்கு கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளது. தனது நாட்டினுள் நுழைந்து, சுமுக நிலையை சீர்குலைக்க அமெரிக்கா மேற்கொண்டுள்ள சதித்திட்டமே இதுவென ஈரான் தெரிவித்துள்ளது. 

எனினும் ஈரானிய மக்களுடன் நல்லுறவை ஏற்படுத்தவே இத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்கா தெரிவிக்கின்றது. 

அமெரிக்கா மற்றும் ஈரானுடனான இராஜதந்திர உறவுகள் 1979 ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சியின் பின்னர் முடிவுக்கு வந்தது. இதன் போது தெஹ்ரானில் அமைந்திருந்த அமெரிக்கத் தூதரகம் முற்றுகையிடப்பட்டது. சுமார் 444 நாட்கள் தொடர்ந்த இம்முற்றுகையின் போது 52 அமெரிக்கர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். 

தீவிரவாத ஒழிப்பில் போலீசுடன் இணைந்து செயல்படும் லண்டன் முஸ்லிம்கள்


கைரோ:வோர்செஸ்டரில் போலீசுடன் இணைந்து தீவிரவாதத்திற்கு எதிராக செயல்படுவதற்கும் சிறுபான்மையினருடன் காவல்துறைக்கு உடனான உறவை வலுபடுத்தவும் பயிற்சி அளிக்க முஸ்லிம்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று வோர்செஸ்டர் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

வோர்செஸ்டர் கல்லூரியில் பயிலும் 17  வயதையுடைய ஷபாஸ் அலி என்னும் இளைஞர் கூறியதாவது; பயிற்சியில் கலந்து கொண்டவர்களில் நான்தான் மிகவும் குறைந்த வயதையுடையவர் என்றும் அனைவரது கருத்துக்களையும் கேட்பதற்கு மிகவும் சிறப்பாக இருந்தது என்றும் கூறினார். கில்ட்ஹாலில் நடந்த பயிற்சியில் இளைஞர்கள், வணிகர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோருடன் மேற்கு மெர்சியா போலிசும் வோர்செஸ்டர் தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவும் கலந்து கொண்டனர். இதுவே நகரில் முதன்முறையாக நடந்த பயிற்சி நிகழ்ச்சியாகும்.
ஆபரேஷன் நிகோலே என்று பெயரிடப்பட்டு இருந்த இந்த பயிற்சி நிகழ்ச்சி தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் போலீசார் முடிவெடுப்பதில் எவ்வளவு சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர் என்று தெரிவிப்பதற்காகவும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் எடுக்கும் முடிவுகள் குறித்து முஸ்லிம் மக்கள் அறிந்து கொள்வதற்காக நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஜானெட் கூறியதாவது ” இந்நிகழ்ச்சி மூலம் முஸ்லிம் சமூகத்துடன் நல்லுறவு ஏற்படும் என்று தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார் மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் தாம் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
மேலும் இந்த பயிற்சி குறித்து முஸ்லிம்கள் கூறியதாவது; முஸ்லிம்களுக்கும் போலீசுக்கும் இடையில் உறவு வலுபெற வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். முஹம்மத் மணிர என்னும் தொழில் அதிபர் தெரிவிக்கையில் “காவல்துறை மற்றும் முஸ்லிம்கள் இடையில் நல்ல தொடர்பு ஏற்படவேண்டும், ஒவ்வொரு நபரும் தன்னால் முடிந்தவரை போலீசுக்கு உதவ வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும் முஸ்லிம் சமூகம் சமுதாயத்தில் தீவிரவாதத்தை ஒழிக்க முக்கிய பங்காற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தீவிரவாத தடுப்பு நடவாடிக்கைகளில் அப்பாவி முஸ்லிம்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் 7/7  தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாத தடுப்பு சட்டத்தின் மூலம் 2  மில்லியன் முஸ்லிம் மக்கள் பிரிட்டனில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக எந்த தவறும் செய்யாமல் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tuesday, December 6, 2011

பாலஸ்தீன ஒற்றுமை தினம்

குவைத்: தங்களுடைய சுதந்திரதிர்க்காகவும், உரிமைகளுக்காகவும் மேலும் முஸ்லிம்களின் முதல்கிப்லாவாம் பைத்துல் முகத்தஸை மீட்பதற்காகவும் போராடிக்கொண்டிருக்கும் பாலஸ்தீன மக்களுக்காக ஐநா சபையால் அறிவிக்கப்பட்ட பாலஸ்தீன ஒற்றுமை தினமான (Solidarity for Palestine) நவம்பர் 29-யை முன்னிட்டு டிசம்பர் 2 அன்று ஜம்மியத்துல் இஸ்லாஹி அல்இஜ்திமாயி ரவ்தா ஹாலில் வைத்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு சர்வதேச அளவில் இருந்து தலைவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய உணர்வுபூர்வமான கருத்துக்களை பதிவு செய்தனர். நிகழ்ச்சி சரியாக இரவு 7:15 மணிக்கு ஆரம்பமானது.
ஏமன் நாட்டு சகோதரர். ஷேய்க் சாத் திருக்குர்ஆணை ஓதி தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக ஜம்மியத்துல் இஸ்லாஹி சார்பாக டாக்டர். சுலைமான் சேட் உரை நிகழ்த்தினர். அவர் தனது உரையில் பாலஸ்தீனின் வரலாற்று நிகழ்வுகளை மீண்டும் ஒரு முறை மக்களிடையே நினைவூட்டினர், அதில் "நபி (ஸல்) அவர்கள் மறுமை நாள் இஸ்லாமிய எழுச்சி வராமல் வராது" என்ற ஹதீஸையும் கூறினார். மேலும் மஸ்ஜிதுல் அக்சா தான் நமது முதல் கிப்லா அது என்றும் நம் நினைவில் இருக்கும் அதற்காக அனைவரும் தங்களுடைய ஒவ்வொரு தொழுகையிலும் மஸ்ஜிதுல் அக்சாவை பாதுகாக்க வேண்டிய துவாவை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
அதை தொடர்ந்து பாலஸ்தீன தேசத்து இளைஞர்கள் தாங்கள் படும் துன்பங்களை பற்றி எழுச்சி கீததின் மூலம் மக்களுக்கு தெளிவுபடுத்தினர். அதற்கு மக்களிடமிருந்து வந்த தக்பீர் முழக்கங்களும், கர ஒளியும் நாங்களும் பாலஸ்தீன மக்களோடுதான் உள்ளோம் என்பதை ஆணித்தரமாக வெளிபடுத்தியது.
1.jpgதொடர்ச்சியாக இந்தியாவின் சார்பாக குவைதில் பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வரும் குவைத் இந்தியா ஃப்ரட்டர்நிட்டி ஃபாரம்(KIFF) பிரதிநிதி சகோதரர் . அப்துர் ரசாக் அவர்கள் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்தார். அதில் அவர் தற்போது நிகழும் முக்கியமான பிரச்சனைகளை பற்றி தெளிவாக எடுத்துரைத்தார், உலகிலேயே பாலஸ்த்தீனில் உள்ள காஸா என்ற பகுதியில் தான் வேலை இல்லா திண்டாட்டம் அதிகமான சதவிகித தில் உள்ளது, மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடைபெற கூடிய நாடும் பாலஸ்தீன் தான் குறிப்பாக பெண்களும், குழந்தைகளும் அதிகமாக இஸ்ரலிய படைகளால் மனித வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு கொடுமைகளை அனுபவிக்கிறார்கள். மேலும் பாலஸ்தீனியர்கள் தங்களுடைய சொந்த நாட்டிலேய அகதிகளாக வாழக்கூடிய அவலமும் காணப்படுகிறது என்று கூறினார். அதன் தொடர்ச்சியாக IMA-ன் சார்பாக முஸ்லீம்களின் முதல் கிப்லாவை மீட்டே தீருவோம் என்று சிறுவர்களின் சார்பாக மேடை நாடகமும் அரங்கேறியது, அதற்கு அங்கு குழுமியிருந்த மக்கள் " யஹூதிகளே ஓடிவிடு முஹம்மதுடை படை வந்துகொண்டிருக்கிறது" என்று எழுச்சி மிகுந்த கோஷங்களை எழுப்பினர்.
6.JPG3.jpg2.JPGஅதை தொடர்ந்து சூடான் நாட்டின் சார்பாக சகோதரர். முஹமது மசூத் உரை நிகழ்த்தினர். அதில் பாலஸ்தீனின் பிரச்சனை முஸ்லிம்களுடைய பிரச்சனை என்று தங்களுடைய எழுச்சி மிகுந்த உரையை தொடர்ந்தார், அல்லாஹ்வுடைய வழியில் போராடி யூதர்களை விரட்டி அடித்து பாலஸ்தீன மக்களை அவர்களுடைய சொந்த இடத்தில் வாழ வைப்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமை அதற்காக அல்லாஹ்விடம் அழகான நற்கூலி காத்துகொண்டிருக்கிறது என்று ஆணித்தரமான கருத்துகளை பதிவு செய்தார்.நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக பிரிடன் நாட்டு பிரதிநிதி சகோதரர் ஷேக் முஹம்மது அமீன்,ஏமன் நாட்டு சகோதரர் அப்துல்லாஹ் கொலனி, சோமாலிய நாட்டு சகோதரர் டாக்டர் முஹம்மது யூசுப், ஆப்கானிஸ்தான் நாட்டு சகோதரர் ஷேய்க் அன்வருல்லாஹ், எகிப்து நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை தெளிவாகவும், ஆழமாகவும் பதிவு செய்தனர். அதில் இஸ்ரேலை பின்பற்ற கூடிய அனைவரும் அனைத்து துறைகளிலும் தோல்வியை தழுவுவது உறுதி என்றும் பைத்துல் முகத்தஸை மீட்டே தீருவோம் என்றும் பிரகடன படுதினார்.
தொடர்ந்து ஸ்ரீலங்கா நாட்டு சகோதரர் முனாஸ் அவர்கள் உரை நிகழ்த்தினர். "இந்த வருடம் தான் நாம் எல்லோரும் ஒன்று பட்டு குரல் கொடுக்கிறோம், இது ஒரு முன்மாதிரி என்றும் பாலஸ்தீன மக்களுக்காக இலங்கை மக்களும், இலங்கை அரசாங்கமும் உதவ காத்துகொண்டிருக்கிறது" என்று பாலஸ்தீன மக்களுக்கு உத்வேகமூடினார். அதன் பிறகு ஸ்ரீலங்கா சார்பாக ஒரு காணொளி கண்பிக்கபட்டது.
இறுதியாக குவைத் இந்தியா ஃப்ரட்டர்நிட்டி ஃபாரம் (KIFF)-இன் சார்பாக கையெழுத்து பிரதிகள் அனைவரிடமும் வாங்கப்பற்றது அதில் அனைவரும் ஆர்வமுடன் தங்களுடைய கையெழுத்தை போட்டனர். மேலும், அனைத்து நாட்டு பிரதிநிதிகளும் மேடையில் ஒன்றாக இணைந்து பாலஸ்தீன மக்களுக்காகவும், தங்களுடைய முதல் கிப்லவையும் மீட்போம் என்று உறுதிமொழி எடுத்தனர். அங்கிருந்து களைந்து சென்ற மக்கள் பைத்துல் முகத்தசில் பாங்கு ஒலி கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை, யஹூதிகளை முழுவதும் துடைத்தெறியும் நாளும் அன்று தான் என்ற எண்ண ஓட்டத்தோடு கலைந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஆயிரகணக்கான மக்கள் கலந்து கொண்டது பாலஸ்தீனியர்களின் போரட்டத்திற்கு புதிய உத்வேகத்தை அளித்தது.


7.JPG

8.JPG
9.JPG
10.jpg













நீதியை எதிர்பார்த்து முஸ்லிம் சமூகம்

புதுடெல்லி:மதசார்பற்ற இந்தியாவின் சின்னமாக விளங்கிய பாப்ரி மஸ்ஜித் ஹிந்துத்துவா பாசிச சக்திகளால் இடித்து தள்ளப்பட்டு இன்று 19 ஆண்டுகள் நிறைவுறுகிறது.ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கங்கள், நீதித்துறை ஆகியவற்றின் வெளிப்படையான, மறைமுகமான ஆதரவுடன் அரங்கேற்றப்பட்ட அந்த பாசிச பயங்கரவாதம் 
முஸ்லிம்களை மட்டுமல்ல, இந்த தேசத்தை
நேசிக்கும் அனைத்து மக்களின் நெஞ்சங்களிலும் அணையாத நெருப்பாக கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.



1992-டிசம்பர் ஆறாம் நாள் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க உள்ளிட்ட ஹிந்துத்துவ சங்க்பரிவார பாசிச பயங்கரவாத மூத்த தலைவர்களின் முன்னிலையில் மத வெறிப்பிடித்த காவி கழிசடைகள் பாப்ரி மஸ்ஜிதை இடித்து தள்ளி 19 ஆண்டுகள் நிறைவுற்ற பிறகும் இதுவரை அந்த பயங்கரவாத செயலை புரிந்த காவி பயங்கரவாதிகளை சட்டத்தின் முன்னால் கொண்டுவரவோ, தண்டிக்கவோ இந்தியாவின் ஆட்சியாளர்களாலோ, அதிகார வர்க்கத்தினாலோ, நீதிபீடங்களினாலோ இயலவில்லை.
ஐந்நூறு ஆண்டுகள் முஸ்லிம்கள் ஏக இறைவனை வணங்குவதற்கு உபயோகித்த பாப்ரி மஸ்ஜித் பொய்ப் பிரச்சாரங்கள், கட்டுக்கதைகள் ஆகியவற்றின் பின்புலத்தில் தகர்க்கப்பட்ட வேளையில், மஸ்ஜித் இடிக்கப்பட்ட அதே இடத்தில் கட்டித் தரப்படும் என அன்றைய காங்கிரஸ் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் அளித்த வாக்குறுதி காற்றில் கரைந்துபோனது. மிகவும் காலம் தாழ்ந்தாவது பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட சம்பவத்தை விசாரிக்க மத்திய அரசால் நியமிக்கப்பட்ட லிபர்ஹான் கமிஷன் தயார் செய்த அறிக்கையில், இந்த பயங்கரவாத செயலை புரிந்த ஹிந்துத்துவா பயங்கரவாத தலைவர்களின் பெயர்களை பட்டியலிட்டு கூறிய பொழுதிலும், அவர்களை நோக்கி ஒரு சிறு விரலை கூட அசைக்க ஆட்சியாளர்களால் முடியவில்லை.
மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கப்பட்ட பாப்ரி மஸ்ஜித் உரிமையியல் வழக்கில் அலகபாத் உயர்நீதிமன்றமோ, ஆவணங்கள்
மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் நீதியின் அடிப்படையிலான தீர்ப்பை வழங்குவதற்கு பதிலாக நாட்டாண்மையாக மாறி மஸ்ஜித் நிலைப்பெற்றிருந்த நிலத்தை மூன்றாக பங்குவைத்து வழங்குவதாக தீர்ப்பளித்ததன் மூலம் தேசத்தை அவநம்பிக்கையில் ஆழ்த்தியது. இந்த தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடையை விதித்தபொழுதிலும் இதுத்தொடர்பான மனுக்கள் தற்பொழுதும் நீதிமன்றத்தில் விசாரணைக்காக காத்திருக்கின்றன.
பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதன் மூலம் நீதிமறுக்கப்பட்ட இந்திய முஸ்லிம்கள் இனப் படுகொலைகள் மற்றும் கலவரங்களில் மேலும் மேலும் துவசம் செய்யப்பட்டனர். இருந்தபோதிலும் அவர்கள் நீதிக்கான போராட்டத்தை தொடர்கிறார்கள். இன்று தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் கறுப்பு தினம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்நிகழ்ச்சிகளின் வாயிலாக நீதியை விரும்பும் மக்களின் உள்ளங்களில் பாப்ரி என்றும் நினைவில் நிற்கும்.
சத்தியம் வெற்றி பெற்று நீதி கிடைக்கும் ஒரு தினத்திற்காக இந்தியாவில் முஸ்லிம்களும், மதசார்பற்றவாதிகளும் காத்திருக்கின்றார்கள்! இறைவன் நாடினால் அந்த நாள் நிச்சயம் புலரும்!

Sunday, December 4, 2011

எகிப்து:வாக்குப் பதிவில் சாதனை


vote

கெய்ரோ:எகிப்து பாராளுமன்றத்திற்கு நடந்த முதல் கட்ட தேர்தலில் வாக்குபதிவு சாதனை படைத்துள்ளது. 62 சதவீதம் பேர் முதல் கட்ட தேர்தலில் வாக்களித்துள்ளதாக தேர்தல் கமிஷன் தலைவர் அப்துல் முஈஸ் இப்ராஹீம் அறிவித்துள்ளார்.
நவீன எகிப்தில் முதல் தடவையாக இவ்வளவு வாக்குகள் பதிவாகியுள்ளன. கீழ் சபைக்கு முதல் கட்ட தேர்தல் நடந்த கடந்த திங்கள் கிழமை 80 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களது வாக்குகளை பதிவுச் செய்துள்ளனர். அடுத்த இரண்டு கட்ட தேர்தல்கள் இம்மாதமும், அடுத்த ஜனவரியிலும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து முழுமையான முடிவுகள் வெளியாகும்.
ஒவ்வொருவரும் இத்தேர்தலில் 3 வாக்குகளை அளிக்கவேண்டும். இரண்டு வாக்குகள் சுயேட்டையான வேட்பாளர்களுக்கும், ஒரு வாக்கை கட்சி வேட்பாளருக்கும் அளிக்கவேண்டும். சுயேட்சைகளில் எவரும் பெரும்பான்மையை எட்டவில்லை என கூறிய தேர்தல் கமிஷனர் இப்ராஹீம் கட்சியில் யார் பெரும்பான்மையை பெற்றுள்ளார் என்பது குறித்து கேள்வி எழுந்தவுடன் பத்திரிகையாளர்கள் சந்திப்பை முடித்துவிட்டார்.
வாக்கு எண்ணிக்கை முடியவில்லை என்பதால் முடிவை அறிவிக்க காலம்தாமதம் ஏற்படும் என அதிகாரிகள் கூறினர். அதிக வாக்குகள் பதிவானதால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வெளியான அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின் அடிப்படையில் இஃவானுல் முஸ்லிமீனின் ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டி 3-இல் 2 பகுதி இடங்களை கைப்பற்றியுள்ளது.
மூன்று கட்ட தேர்தல்கள் முடிந்த உடனே கட்சி ரீதியான முடிவுகள் வெளியிடப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. ஸலஃபி கட்சியான அந்நூர் இரண்டாவது இடத்தையும், லிபரல் கட்சியான எகிப்திய ப்ளாக் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

இஸ்லாமிய தீவிரவாதம் எனும் மாயை : விக்கிலீக்ஸ் அசாஞ்ஜே


wiki asange

புதுடெல்லி:உலகெங்கும் உள்ள அரசாங்கங்கள் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்கிறோம் எனும் போர்வையில் தனி மனித சுதந்திரத்தை அளவுக்கு மீறி கட்டுப்படுத்துவதாகவும் தனி நபர்களின் அனுமதியில்லாமல் அவர்களின் தொலைபேசி உரையாடல்களையும் மின்னஞ்சல்களையும் கண்காணிப்பதன் மூலம் அவர்களின் அந்தரங்கத்தில் தலையிடுவதாகவும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ஜே பரபரப்பு தகவலை தெரிவித்தார்.
லண்டனிலிருந்து வீடியோ கான்பரசிங் மூலம் பேசிய அசாஞ்ஜே தன் உரையில் இந்தியர்களின் சுவிஸ் வங்கி விபரம் அடுத்த ஆண்டு வெளிவரலாம் என்றும்  மேலும் இந்தியாவின் சிபிஐ மற்றும் மத்திய அரசின் மெயில்களை ஹேக் செய்து தகவல்களை சீனா உறிஞ்சுவதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக சீனா இக்காரியத்தை செய்வதாகவும் உலகெங்கும் உள்ள அரசாங்கங்கள் மின்னஞ்சல்களையும் தொலைபேசிகளையும் கண்காணிப்பது தீவிரவாதிகளை பிடிப்பதற்காக அல்ல என்றும் தங்கள் அரசின் வளர்ச்சிக்கே என்றும் கூறினார்
அமெரிக்க நிறுவனங்களான லாக்ஹீட் மார்டின் மற்றும் போயிங் போன்றவைகள் இது மாதிரி தகவல்களை திருடி விற்பதில் முண்ணணியில் உள்ளன என்றும் எச்சரித்த அசாஞ்சே இஸ்லாமிய தீவிரவாதம் எனும் மாயை இவர்களின் சதித்திட்டத்தை மறைக்கவே என்றும் கூறினார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தை அமுல்படுத்தியதின் மூலம் மேற்கு நாடுகளை விட தனி நபர் சுதந்திரம் இந்தியாவில் மேம்பட்டதாக இருக்கிறது என்றும் அசாஞ்சே கூறினார்.

Thursday, December 1, 2011

இஸ்ரேலை தாக்க ஏவுகணைகள் தயார் – ஈரான்


ahmad vahidi

டெஹ்ரான்:இஸ்லாமிய குடியரசான ஈரானை தாக்க முற்பட்டால் இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் புகட்டப்படும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சரும் பிரிகேடியருமான ஜெனரல் அஹ்மத் வாஹிதி தெரிவித்துள்ளார்.
வாஹிதி கடந்த ஞாயிறு அன்று ஈரானுக்கு எதிராக போர் தொடுத்தால் இஸ்ரேல் பிழைக்க குறைந்த வாய்ப்பே இருக்கும் என்றும் ஈரான் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை இஸ்ரேலின் மீது ஏவும் என்றும் கூறியுள்ளதாக பார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேல் எத்தனை போர் கப்பல்களை மற்றும் போர் தளவாடங்களை இழக்க தயார்செய்து வைத்துள்ளது என்ற கேள்விக்கு முதலில் அவர்கள் பதில் கூறட்டும். எதற்காக இந்த ஜியோனிச நாடு எங்களை பயமுறுத்திப் பார்க்க நினைக்கின்றது. எங்கள் நாட்டின் மீது போடா எத்தனை ஏவுகணைகளை தயார் செய்து வைத்துள்ளது 10,000? 20,000? 50,000? 100,000? அல்லது 150,000 ? என்று அவர் கேட்டுள்ளார்.
போர் தொடுப்பதற்கு முன்னர் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் எங்கள் பலத்தை முதல் தெரிந்துக் கொள்ளட்டும். மேலும் அவர் போர் தொடுத்தால் நாங்கள் அமெரிக்காவிற்கு உண்மையான போர் எப்படி இருக்கும் என்றும் ராணுவ வீரர்கள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்றும் பாடம் புகட்ட தயாராக உள்ளோம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் வாஹிதி கூறியதாவது; ‘ஈரானின் ராணுவம் எங்கள் நாட்டினுடைய இறையாண்மையை காக்க ஒருபோதும் தயங்காது என்றும் இந்த ஜியோனிச நாடு மீண்டும் மீண்டும் ஈரானை பயமுறுத்த முற்பட்டால் ஈரானின் “பாசிஜ் ராணுவம்” அதற்கு பழி தீர்க்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக குற்றம் சாட்டி டெஹ்ரான் மீது போர் தொடுக்கப் போவதாக கூறிவருகிறது. ஆனால் ஈரானோ இந்த குற்றக் சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து வருவதுடன் தாங்கள் அணு ஆயுத தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்து இட்டுள்ளதால் அது போன்று எந்த அணுஆயுதமும் தயார் செய்யவில்லை என்றும் மேலும் சர்வதேச அணு சக்தி நிறுவனத்தில் உறுப்பினராக இருப்பதாகவும் எனவே ஆக்கப் பூர்வமான காரியங்களுக்காக அணு தொழிநுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள தங்களுக்கு அனுமதி உண்டு என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேல்தான் அணு ஆயுத தடுப்பு உடன்படிக்கையில் கையெழுத்து போட மறுத்து வருவதாகவும் சர்வதேச அணு சக்தி நிறுவனம் இஸ்ரேலில் சென்று சோதனை மேற்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேல் சமீபத்தில் அணுஆயுதத்தை சுமந்து சென்று தொலை தூரத்தை தாக்கும் ஏவுகணையை தயாரித்து சோதனை செய்துள்ளதாகவும் அது 10,000  கிலோ மீட்டர்கள் வரை சென்று தாக்கக்கூடிய தன்மையுடையதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இது போன்ற அனுஆயதம் ஏற்றிசெல்லும் ஏவுகணைச் சோதனைகள் ஏன் மேற்குலகிற்கு ஆபத்தானதாக தெரியவில்லை? என்றும் ஈரான் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

எகிப்து தேர்தல்:இஃவானுல் முஸ்லிமீன் முன்னணி


800_egypt_election_ballots_ap_111130

கெய்ரோ:துனீசியாவையும், மொரோக்கோவையும் பின்தொடர்ந்து எகிப்து தேர்தலிலும் இஸ்லாமிய கட்சி முன்னேறுகிறது.ஜனநாயக புரட்சியின் மூலமாக ஹுஸ்னி முபாரக் பதவி விலகியபிறகு நடந்த முதல் கட்ட தேர்தலில் இஃவானுல் முஸ்லிமீன்(முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம்) தலைமையிலான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சி 40 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும்.
வருகிற டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறும் இரண்டாவது மற்றும் 3-வது கட்ட தேர்தல்களில் இதே நிலை தொடர்ந்தால், தற்காலிக ராணுவ அரசிடமிருந்து அதிகாரத்தை மீட்க இஃவான்களால் இயலும். பழமைவாத கட்சியான அந்நூர் கட்சியும், ப்ரோக்ரஸிவ் கட்சியான எகிப்தியன் ப்ளாக்கும் அடுத்த இடங்களை பிடித்துள்ளன.
498 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களுக்கு கட்சி ரீதியாகவும், மூன்றில் ஒரு பகுதி இடங்களுக்கு தனிநபர்களிடையேயும் தேர்தல் நடைபெறும்.