Saturday, March 31, 2012

'ஒரேயடியாக 37 சதவீத உயர்வா... ஓட்டுப்போட்டவங்களுக்கு ஜெ பரிசு இது'- கருணாநிதி

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள 37 விழுக்காடு மின்கட்டண உயர்வுக்கு திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஓட்டுப் போட்ட மக்களுக்கு ஜெயலலிதா தந்துள்ள 'பெரிய பரிசு' இது என அவர் கிண்டலடித்துள்ளார்.

இது தொடர்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பத்து த காலத்தில் பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, ஆகியவற்றைத் தொடர்ந்து மின் கட்டண உயர்வினை 5 சதவிகித உயர்வு, 10 சதவிகித உயர்வு அல்ல, ஒரேயடியாக ஒரே நேரத்தில் 37 சதவிகித அளவிற்கு உயர்த்தி அறிவித்து விட்டார்கள்.

சசிகலா மீதான நடவடிக்கையை ரத்து செய்தார் ஜெயலலிதா- உறவுகளை துண்டித்ததால் திருப்தி

சென்னை: உடன்பிறவா சகோதரி சசிகலா மீதான கட்சி ரீதியான ஒழுங்குநடவடிக்கைகளை அதிமுக பொதுச்செயலாலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், தவறு செய்த உறவினர்களின் தொடர்புகளை துண்டித்துக் கொள்வதாக சசிகலா அறிக்கை மூலம் தெரிவித்திருந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு அவரை அதிமுகவிலிருந்து நீக்கிய நடவடிக்கையை ரத்து செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

Thursday, March 29, 2012

பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாடு பணிகள் - மார்ச் மாத ரிப்போர்ட்


சென்னை:
1. சென்னையில் எம்.டி. படிப்பிற்காக ஒரு மாணவனுக்கு ரூபாய் 40,000 கடனாக வழங்கப்பட்டது.

2. நான்காம் வகுப்பு படிக்கும் அல்லாஹ் பக்ஷ் என்ற மாணவனுக்கு ரூபாய்  3460/- வழங்கப்பட்டது. மற்றொரு மாணவனுக்கு ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.

3. இராயபுரத்தில் கேன்சர் சிகிசைக்காக ஒரு நபருக்கு ரூபாய் 10,000/- வழங்கப்பட்டது. 

4. உனைஸ் ரஹ்மான் என்ற 13 மாத குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்காக ரூபாய் 15,000 வழங்கப்பட்டது.

5. டயாலிஸிஸ் செய்வதற்காக ஒருவருக்கு ரூபாய் 1300/- உதவித்தொகை வழங்கப்பட்டது. 

6. வியாபாரம் செய்ய ஒருவருக்கு ரூபாய் 5000/- வழங்கப்பட்டது.

7. சென்னை துறைமுகம் தொகுதியிலிருந்து ஏழை பெண்ணின் திருமணத்திற்காக‌ ரூபாய் 3000/- வழங்கப்பட்டது.

கோவா : முஸ்லிம் வியாபாரிகளின் முதுகெலும்பை முறிக்கும் பா.ஜ.க. அரசு!


5 மாநில தேர்தல் முடிவுகளில், ஆறுதல் பரிசாக கோவாவில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, தனது முஸ்லிம் விரோத போக்கை செயல்படுத்த துவங்கி விட்டது.
முழுக்க முழுக்க சுற்றுலா தளமாக செயல்படும், கோவாவில் பல்லாண்டுகளாக காஷ்மீர் முஸ்லிம்கள் கடைகளை நடத்தி வருகின்றனர். காஷ்மீரிகளுக்கு சொந்தமான, நூற்றுக்கணக்கான கடைகளில், மொத்தம் 4000 காஷ்மீர் முஸ்லிம்கள் கோவா சுற்றுலா தளத்தில், தங்கள் மாநில தயாரிப்பு சாதனங்களை சந்தை படுத்தி வருகின்றனர். 

இந்தியாவைப் போர்க் குற்ற வழக்கில் நிறுத்தப் போகும் இலங்கை! காஷ்மீர் படுகொலைகள் மீண்டும் கிளறப்படுமா?


ஈழப் போரில் இலங்கையின் வெற்றிகளுக்குப் பின் நின்றோரில் கணிசமான பங்களிப்பினை வழங்கியது இந்தியா என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். முப்பதாண்டு காலத் தார்மீகப் போரை முடிவிற்கு கொண்டு வருவதில் இலங்கையினை விட,இந்தியா தான் பல வழிகளிலும் ஆக்ரோசத்துடன் நின்று தனது பங்களிப்பினை போர்க் களத்தில் வளங்கியிருந்தது. கடற் கண்காணிப்பு, விமானங்களைக் கண்காணிக்கும் ரேடர் (ராடர்) உதவி, கள முனையில் திட்டமிடல் உதவி, உட்பட பல உதவிகளைச் செய்ததோடு, இலங்கையினைச் சர்வதேச யுத்த மீறல் விசாரணைகளிலுருந்தும் பாதுகாத்து வந்த பெருமை இந்தியாவிற்கும், இந்திய காங்கிரஸ் மத்திய அரசிற்குமே உரியது.

'மீண்டும் எப்போது போயஸ் தோட்டத்துக்கு'?-சிரித்தபடியே பதில் சொல்லாமல் சென்ற சசிகலா


Sasikalaபெங்களூர்: என் அக்காதான் எல்லாமே. அவருக்காக எனது வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டேன். இனி அவருக்காக சேவை செய்ய காத்துள்ளேன் என்று காலையில் அறிக்கை வெளியிட்ட சசிகலா, நேற்று மாலையில் பெங்களூர் புறப்பட்டுச் சென்றார்.
அவருடன் இளவரசி உள்ளிட்ட ஏகப்பட்ட பேரும் உற்சாகமாக கிளம்பிப் போயுள்ளனராம்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு அதிமுகவை விட்டு நீக்கப்பட்டார் சசிகலா. அவரது குடும்பத்தினரும் கூண்டோடு நீக்கப்பட்டனர். இருப்பினும் இளவரசி மீது மட்டும் முதல்வர் ஜெயலலிதா கை வைக்கவில்லை.

Wednesday, March 28, 2012

ஆஸி.க்கு சொந்தமான கோக்கோஸ் தீவில் கடற்படை தளம் அமைக்கிறது அமெரிக்கா!


Cocos Islandவாஷிங்டன்: இந்தியப் பெருங்கடலில் ஆஸ்திரேலியாவுக்கு சொந்தமான கோக்கோஸ் தீவில் ஆளில்லா வேவு விமான தளத்துடன் கூடிய பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமைக்க அந்நாடு அனுமதி அளித்துள்ளது.
கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆஸ்திரேலியா பயணத்தின் போது இருநாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதுடன் ஆஸ்திரேலியாவின் டார்வின் தீவில் அமெரிக்க படைகளை நிலைநிறுத்தவும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான காக்கோஸ் தீவில் பிரம்மாண்ட கடற்படை தளத்தை அமெரிக்கா அமைக்க உள்ளது.

2050-ல் சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியா முதலிடம் வகிக்கும்- ஆய்வறிக்கை


Indiaடெல்லி: உலக அளவில் 2050-ல் இந்தியாவின் பொருளாதாரத்தில் முதலிடம் பெறும் என்று சிட்டி வங்கியின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியா மற்றும் சர்வதேச அளவில் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார எதிர்காலம் பற்றிய இந்த அறிக்கையில், வட அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பியநாடுகளின் பொருளாதார நிலையானது 2050-ல் கடும் சரிவை சந்திக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2010-ல் 41 சதவீதமாக இருக்கும்இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சியானது 2050-ல் 18சதவீதமாக குறைந்துவிடும் என்கிறது அந்த அறிக்கை.

Tuesday, March 27, 2012

12 நாடுகள் மீது விரைவில் பொருளாதார தடைகள்: அமெரிக்கா அதிரடி

ஈரானிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வரும் 12 நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஈரான் அணு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என அந்நாட்டின் மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் புகார் தெரிவித்து வருகின்றன. இதனால் ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐ.நாவின் திட்டத்தை ஏற்றுக் கொண்டது சிரியா



சிரியாவில் நடந்து கொண்டிருக்கும் வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வரச் செய்யும் ஆறு அம்ச திட்டத்தை சிரியா ஏற்றுக் கொண்டுள்ளது. இத்தகவலை ஐ.நா மற்றும் அரபு லீக்கின் தூதராக செயல்படும் கோபி அன்னானின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆறு அம்ச திட்டத்தில் ஐ.நா கண்காணிப்பின் கீழ் போர் நிறுத்தம் செய்வது, எதிர்கட்சியினர் கட்டுப்பாட்டில் இருக்கும் நகரங்களில் இருந்து அரச துருப்புக்களை திரும்பப் பெறுவது, மனித நேயப் பணிகளை மேம்படுத்துவது போன்றவை அடங்கும்.

கூடங்குளம்: அரசு- போராட்டக் குழு பேச்சுவார்த்தை- உண்ணாவிரதம் வாபஸ்!


Kudankulam Protestersராதாபுரம்: கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் குறித்து போராட்டக் குழுவுடன் அரசு அதிகாரிகள் நடத்தி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதையடுத்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனையி்ல் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட்டக்காரர்கள் திடீரென்று பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தனர். பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தது ஏன் என்பது குறித்த பின்னனி தகவல்கள் வெளியாகியுள்ளன.



கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை கண்டித்து போராட்டகுழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் உள்பட 15 பேர் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்கள் இன்று 9வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

Monday, March 26, 2012

நானும் வறுமைக் கோடும்


காலை 07:30 மணியளவில் புழுக்கம் குறைந்த, மிதமான சூரிய வெளிச்சத்துடன் தொடர்ந்த பொழுதில் பசிப்பதாய் உணர்கிறேன். இறைவனின் உதவியால் நான் ஒரு நாளும் பசியால் வாடியிருந்ததில்லை. உடலின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய உணவருந்த அமர்ந்தேன். என் இந்திய தேசத்தில் திட்ட கமிஷன் என்ற அறிவாளிகளின் கூடாரத்திலிருந்து வெளியான வறுமைக் கோட்டிற்கான வரையறை மனதில் ஆடியது. நாளொன்றுக்கு ரூ. 28.65 (மாதமொன்றிற்கு ரூ. 859.60) சம்பாதிக்கும் (அ) செலவழிக்கும் திராணி உடைய யாரும் வறுமை கோட்டிற்குள் வர மாட்டார்கள் என்ற அதிர்ச்சியான அறிவிப்பை பற்றியே மனம் ஓடியது. 

இந்த சென்னை முழுவதும் தேடினாலும் இப்படி ஒரு ஏழைத் தமிழனை (அ) இந்தியனைக் காண முடியுமா? வறுமைக் கோட்டிற்கான இன்றைய சமன்பாடு இதுவென்றால், கடந்த 5 வருடங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கூறியிருப்பதற்கு பயன்படுத்தப் பட்ட வாய்ப்பாடு என்னவாக இருக்கும்?

தமிழக பட்ஜெட் 2012 முக்கிய அம்சங்கள்


O Panner Selvamதமிழக பட்ஜெட்டில் ரூ. 1500 கோடிக்குப் புதிய வரிகள்

ஆதி திராவிட மாணவர் விடுதிகளில் மாணவர்களுக்கு கட்டில் வசதி 


ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ரூ. 740 கோடி ஒதுக்கீடு

7000 கிராமங்களில் குடிநீர் வசதியை மேம்படுத்த சிறப்புத் திட்டம்

சென்னை பெருநகர வளர்ச்சிக்கு ரூ. 500 கோடி

ரூ.1500 கோடிக்கு புதிய வரி-சமையல் எண்ணெய் விலை உயரும், கோதுமை- இன்சுலின் விலை குறையும்

Tamil Nadu Budget 2012சென்னை: தமிழக பட்ஜெட்டில் ரூ. 1500 கோடிக்குப் புதிய வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சமையல் எண்ணெய், வெளி மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்யப்படும் மதுபானங்களின் விலை உள்ளிட்டவை உயருகின்றன.

இதுதொடர்பாக தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளதாவது:

சமையல் எண்ணெய் மீதான மதிப்புக் கூட்டு வரி 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்திலிருந்து கொள்முதல் செய்யப்படும் மது வகைகள் மீதான மதிப்புக் கூட்டு வரி 14.5 சதவீத வரி அதிகரிக்கப்படும். பட்ஜெட் சமர்ப்பிப்பதற்கு முன்னர் நடத்தப்பட்ட வணிகர்கள், தொழில் கூட்டமைப்புகளுக்கான கூட்டத்தில் எழுப்பப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும், இதர கோரிக்கைகளின் அடிப்படையிலும் நுகர்வோருக்கு பயன் அளிக்கும் வகையில் கீழ்க்கண்ட பொருட்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும்.

Sunday, March 25, 2012

முட்டையிடும் சீன மனிதர்கள்!

fake-egg4.jpg

வேறு வழி இல்லை இப்படித்தான் இந்தக் கட்டுரைக்கு தலைப்பிட வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தன்னுடைய ‘கைத்திறமை’ யைக் காட்டி வந்த சீனா, தற்போது கோழி முட்டை தயாரிப்பிலும் கைத்திறமையைக் காட்டி வருகிறது. கோழி முட்டையை கோழி மட்டும் தான் போட வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் சீனாவில் போலி கோழி முட்டைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர். அதுகுறித்த விவரம் தான் இது.

Saturday, March 24, 2012

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 8 உயர்கிறது!


Petrol Priceடெல்லி: கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ 8 வரை உயர்த்த அரசு எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்று தெரிகிறது. இந்தியாவில் பெட்ரோலின் விலையை எண்ணை நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை உயர்வால் கடும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் கச்சா எண்ணை பேரலுக்கு 109 அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஆனால் தற்போது 134 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துவிட்டது. இந்த விலை உயர்வால் எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்துக்குள்ளாகியுள்ளனவாம். தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் பெட்ரோலால் லிட்டருக்கு ரூ.7.20 வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது.

காஜ்மியின் விடுதலைக்காக வீதியில் இறங்கி போராடிய முஸ்லிம்கள்!


லக்னோ: தங்களுக்குள் இருக்கின்ற வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு சமூகத்தின்விடுதலைக்காகவும், வரும் தலைமுறையினரின் பாதுகாப்பிற்காகவும் இந்த முஸ்லிம் சமூகம் போராட முன்வரவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருக்கிறது. அவ்வப்போது நமது தேசத்தில் அதற்கான சாத்தியக்கூறுகள் ஆங்காங்கே நடைபெற்று வருவதையும் நம்மால் காணமுடிகிறது. சமீபத்தில் இஸ்ரேலிய தூதர் கார் குண்டுவெடிப்பில் கைது செய்யப்பட்ட பத்திரிக்கையாள செய்யது முஹம்மது காஜிமியின் விடுதலைக்காக தங்களுக்குள் பிரிவு இருப்பினும் அவற்றையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு ஷியா சன்னி முஸ்லிம்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) வீதியில் இறங்கி போராடியுள்ளார்கள்.

இஸ்ரேலிய குடியேற்றங்கள் - சர்வதேச விசாரணைக்கு ஐ.நா உத்தரவு: ஜெனீவாவில் தீர்மானம்


UNHRCஜெனீவா: இஸ்ரேலிய குடியேற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணையை நடத்த உத்தரவிடும் தீர்மானம் ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இஸ்ரேலிய குடியேற்றத் திட்டங்கள், பாலஸ்தீனர்களின் உரிமைகளை மீறுகிறதா என்பதை ஆராய்வதற்கான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்பது உட்பட இஸ்ரேலுக்கு எதிரான 5 தீர்மானங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பில் நிறைவேற்றப்பட்டுள்ளன. எல்லைப் பகுதியில் இஸ்ரேலிய குடியிருப்புகளை அமைக்கும் இத்திட்டத்தின் மூலம் தங்களது பகுதியை ஆக்கிரமிக்கிறது என்பது பாலஸ்தீனத்தின் குற்றச்சாட்டு.

Wednesday, March 21, 2012

குஜராத் சட்டமன்ற இடைத் தேர்தலில் பாஜக படுதோல்வி!


அகமதாபாத்: குஜராத்தில் நடந்த சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தனது தொகுதியை காங்கிரஸ் வசம் இழந்து பாஜக தோல்வியடைந்துள்ளது. 1995ம் ஆண்டு முதல் பாஜக வசம் மன்சா தொகுதியை முதன் முறையாக காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

குஜராத் தலைநகரான காந்திநகர் மாவட்டத்தில் இந்தத் தொகுதி உள்ளது. இந்தத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த மங்கல்தாஸ் படேல் மறைவையடுத்து இங்கு இடைத் தேர்தல் நடந்தது. இந்தத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பாபுஜி தாகூர் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் தசரத் படேலை தோற்கடித்தார்.

குஜராத் சட்டசபையில் பெண்களின் ஆபாச படம் பார்த்த 2 பாஜக எம்எல்ஏக்கள்!


Gujarat Assemblyஅகமதாபாத்: கர்நாடக சட்டசபையில் பாஜக அமைச்சர்கள் 3 பேர் செல்போனில் ஆபாச வீடியோ பார்த்தது பரபரப்பான நிலையில், குஜராத் சட்டசபையிலும் 2 பாஜக எம்எல்ஏக்கள் ஐ-பேடில் ஆபாச படங்கள் பார்த்து பிடிபட்டுள்ளனர். சங்கர்பாய் லகாதிர்பாய் செளத்ரி, ஜேதாபாய் கெலாபாய் அகிர் பர்வாட் ஆகிய இருவர் தான் இந்த பாஜக எம்எல்ஏக்கள் ஆவர்.

சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, நீர்வளத்துறை அமைச்சர் எழுந்து பதில் சொல்லிக் கொண்டிருக்க, இந்த இருவரும் ஆபாச படங்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். இதை ஒரு தனியார் செய்தித் தொலைக்காட்சி படமும் பிடித்துள்ளது. இவர்கள் ஆபாச படங்கள் பார்த்ததை முதலில் கண்ட குஜராத் பத்திரிக்கையின் நிருபர் ஜானக்பாய் புரோகித் கூறுகையில்,

சங்கரன்கோவில்-68,757 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி வெற்றி


சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி 68,757 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் அதிமுக தொடர்ச்சியாக 5வது முறையாக வெற்றி பெற்று தனது கோட்டையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதிமுக வேட்பாளர் முத்துச்செல்விக்கு 94,977 வாக்குகள் கிடைத்தன. 2வது இடத்தைப் பிடித்த திமுகவின் ஜவஹர் சூரியக்குமாருக்கு வெறும் 26,220 வாக்குகளே கிடைத்தன.

Tuesday, March 20, 2012

மக்கள் புடை சூழ மாதா கோவிலில் உதயக்குமார்- கைது செய்யத் தவிக்கும் போலீஸ்!


Udayakumarஇடிந்தகரை: கூடங்குளம் அணு மின் நிலையப் போராட்டக் குழுத் தலைவர் உதயக்குமார் ஆயிரக்கணக்கான மக்கள் புடை சூழ இடிந்தகரையில் உள்ள புனித லூர்துமாதா சர்ச் வளாகத்தில் உண்ணாவிரதம் இருந்து வருவதால், மக்கள் தடுப்பை மீறிச் சென்று அவரைக் கைது செய்ய முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இருப்பினும் எந்த நேரத்திலும் அவரைக் கைது செய்வோம் என்று தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் கூறியுள்ளார்.


முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தின்போது தேனி மாவட்ட மக்கள் லட்சக்கணக்கில் அலை அலையாக திரண்டு சென்று போராடிய போராட்டத்தை தடியடி உள்ளிட்டவை மூலம் தடுத்தப் புகழுக்குரியவர் ராஜேஷ் தாஸ் என்பதால் உதயக்குமாரை எந்த ரூபத்தில் இவர் கைது செய்யப்போகிறாரோ என்ற பதைபதைப்பும், பரபரப்பும் கூடங்குளம், இடிந்தகரை பகுதிகளில் நிலவுகிறது.

சங்கரன்கோவிலில் நாளை 'திராணி' எண்ணிக்கை... வெல்லப் போவது யாரோ?


Votersநெல்லை: சங்கரன்கோவில் இடைத்தேர்தலின்போது பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இந்நிலையில் இடைத்தேர்தலில் தபால் வாக்கு செலுத்துவதற்கான படிவம் பெற்றவர்கள் நாளை (21ம் தேதி) காலை 6 மணி வரை ஓட்டு போடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. இதில் அதிமுக, திமுக, தேமுதிக, மதிமுக, பாஜக வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிட்டனர். அதிகபட்சமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கும் எண்ணும் மையமான புளியங்குடியில் உள்ள வீரசாமி செட்டியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. அந்த கல்லூரிக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

Monday, March 19, 2012

ரூ8 ஆயிரம் கோடி விமான ஊழல்: வழக்கு பதிவு செய்யக் காத்திருக்கும் சிபிஐ


Praful Patelடெல்லி: இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு விமானங்களை வாங்கியதில் ரூ8 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறப்படும் வழக்கில் 6 விமானத்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு சி.பி.ஐ. மீண்டும் கடிதம் எழுதி உள்ளது.


43 விமானங்கள்

இந்திய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு கடந்த 2005-ம் ஆண்டு ஏர் பஸ் நிறுவனத்திடம் இருந்து 43 விமானங்கள் வாங்கியதில் ரூ.8 ஆயிரம் கோடிக்கு அதிகமாக ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. முதல் நிலை விசாரணை அறிக்கை பதிவு செய்துள்ளது. 

கோத்ரா கலவரம்: மோடி அரசு, நானாவதி கமி்ஷனுக்கு சு்ப்ரீம் கோர்ட் நோட்டீஸ்


அகமதாபாத்:  கோத்ரா கலவரம் தொடர்பாக நானாவதி கமிஷன் முன்பு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆஜராகக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தொடர்பாக குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் குஜராத்தில் படுகொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்த நீதிபதி நானாவதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

சங்கரன்கோவில் தேர்தல் முடிந்தது... கூடங்குளத்தில் கைது தொடங்கியது: இதுவரை 150 பேர் கைது!


Kudankulam Power Plantகூடங்குளம்: கூடுதல் டிஜிபி ஜார்ஜ் தலைமையில் 10 மாவட்ட எஸ்.பிக்கள் மற்றும் பெருமளவில் ஆயுதப் போலீஸார் கூடங்குளத்தில் குவிக்கப்பட்ட நிலையில், இன்று காலை அதிரடியாக அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவைச் சேர்ந்த 10 பேரை போலீஸார் கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் மீது தமிழக காவல்துறை தற்போது தனது முதல் கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அதன் ஒரு கட்டமாக 10 பேரை போலீஸார் இன்று காலை கைது செய்தனர். இதனால் கூடங்குளம் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பதட்டமும் நிலவுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர் வக்கீல் சிவசுப்பிரமணியம். இவர் கூடங்குளம் அணு மின் நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவில் முக்கிய உறுப்பினர் ஆவார். போராட்டக் குழுவில் இடம் பெற்று முதல்வர் ஜெயலலிதாவை இரண்டு முறை இவர் சந்தித்துள்ளார். அதேபோல பிரதமரை சந்தித்த குழுவிலும் இடம் பெற்றிருந்தார்.

Sunday, March 18, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக் கூடாதாம் - ஆர்எஸ்எஸ் 'புதுக் கரடி'!


Rssடெல்லி: இலங்கை அரசுக்கு எதிராக ஐநாவில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்கூடாது என்று ஆர்எஸ்எஸ் திடீர் எதிர்ப்பு காட்டியுள்ளது. சுப்பிரமணியசாமி போன்ற ஒரு சிலர் தவிர, பிற மாநிலத்தவர் கூட ஈழத்தமிழருக்கு இலங்கைப் போரில் நிகழ்ந்த கொடூரத்தைப் பார்த்து ஆவேசப்பட்டு வருகின்றனர். மனிதாபிமானமும், தன் சொந்த மக்கள் மேல் அபிமானமும் இல்லாத இலங்கை அரசுக்கு சர்வதேச அளவில் பெரிய அளவிலான தண்டனை தரப்பட்டே தீர வேண்டும் என பல நாட்டு மக்களும் கருத்து கூறி வருகின்றனர்.

மகா அமைதியாக முடிந்தது சங்கரன்கோயில் இடைத் தேர்தல் - 78 சதவீத வாக்குப் பதிவு!

By Poll
சங்கரன்கோயில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் மிக அமைதியாக நடந்து முடிந்தது. தோராயமாக 78 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்பட 13 பேர் போட்டியிடுகிறார்கள்.

காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப் பதிவு மிகவும் விறுவிறுப்பாக நடந்தது. வாக்காளர்கள் பெரும் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வேட்பாளர்களும் தங்கள் வாக்குகளை செலுத்தினர். அதிமுக வேட்பாளர் முத்துச்செல்வி, காலையிலேயே தனது வாக்கைப் பதிவு செய்தார். தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமார், தே.மு.தி.க. வேட்பாளர் முத்துக்குமார் மற்றும் சுயேட்சைகள் உள்ளிட்ட 8 வேட்பாளர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

மார்ச் 26-ல் தமிழக பட்ஜெட்... மக்களுக்கு ஏதாவது 'தேறுமா'?


St George Fortசென்னை: மார்ச் 26-ம் தேதி 2012-13-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்கிறார். ஜெயலலிதா அரசு பதவி ஏற்ற பிறகு சமர்ப்பிக்கப்படும் முழுமையான முதல் பட்ஜெட் இது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற மார்ச். 26-ந் தேதி தொடங்கி ஒரு மாத காலம் வரை நடைபெற உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழகத்தின் 2012-2013-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச்.26-ந் தேதி சட்டசபையில் தாக்கல் செய்வார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Saturday, March 17, 2012

பீகார் உள்ளாட்சி தேர்தல் : முஸ்லிம்களுக்கு எதிராக பா.ஜ.க, கூட்டணி அரசு சதி!


பீகார் மாநிலத்தில், வரும் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதத்திற்குள், மாநிலத்தின் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும், தேர்தல் நடை பெற உள்ளது. இந்த உள்ளாட்சி அமைப்புக்களில், முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை, குறைப்பதற்கான, வேலைகளை அங்கு ஆளும், நிதிஷ்குமார் தலைமையிலான, பா.ஜ.க, கூட்டணி அரசு கச்சிதமாக செய்து முடித்து விட்டது.  அது தான், Bihar Municipal Corporation Act 11/2007. இந்த சட்டத்தின்படி,   14/04/2008 க்கு பிறகு, யாராவது 3வது குழந்தையை பெற்றிருந்தால், அந்த குழந்தையின், தாயோ தந்தையோ, உள்ளாட்சி தேர்தலின் எந்த பதவிக்கும் போட்டியிட முடியாது. 

சங்கரன்கோயில் இடைத் தேர்தல் - மக்கள் ஓட்டு காசுக்கா, ஆட்சிக்கா?


Jayalalitha, Vaiko ,Karunanidhi and Vijayakanthசென்னை: தமிழகமே ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் சங்கரன்கோயில் இடைத் தேர்தல் நாளை நடக்கிறது. பதவிக்கு வந்து கிட்டத்தட்ட 1 ஆண்டை நெருங்கும் அதிமுக ஆட்சி, பல்வேறு துறைகளிலும் சறுக்கல்களைச் சந்தித்துள்ளது. மின்வெட்டுப் பிரச்சினையில் மக்களை கிட்டத்தட்ட நரகத்தில் தள்ளிவிட்டது. சிறு, குறு தொழில்கள் முற்றாக ஸ்தம்பித்துவிட்டன. எனவே ஆட்சி குறித்த மக்களின் மதிப்பீடுதான் இந்தத் தேர்தல் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் நடப்பதைப் பார்த்தால் மக்களை அப்படியெல்லாம் 'தப்பாக' எடைபோட்டுவிடக் கூடாது என்றே தோன்றுகிறது.

அடிக்கடி பாராசிட்டமால் சாப்பிடுறீங்களா? இதப்படிங்க!

Death Risk From Staggered Paracetamol Overdosesகாய்ச்சல், தலைவலி, கால்வலி, உடல்வலி இப்படி எல்லா வலிகளுக்கும் கொடுக்கப்படும் மாத்திரைதான் பாராசிட்டமால். அரசு மருத்துவமனைக்கு சென்றால் போதும் பாக்கெட் பாக்கெட்டாக கொடுப்பது பாராசிட்டமலைதான். இந்த மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடனடி உயிரிழப்பு ஏற்படும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மனிதர்களின் உயிரிழப்பு குறித்து எடின்பர்க் நகர பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் தொடர்ந்து அளவுக்கதிகமாக பாராசிட்டமால் வலி நிவாரணி மருந்தை உட்கொண்டுவரும் ஆட்களுக்கு படிப்படியாக உடலில் சேர்ந்தாலும்கூட மருந்தின் அளவு கூடிப்போய் மரணம் ஏற்படலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Friday, March 16, 2012

சங்கரன்கோவிலில் பிரச்சாரம் ஓய்ந்தது-ஞாயிறுக்கிழமை தேர்தல்!


Muthuselvi, Jawahar, SathanThirumalaikumar and Muthukumarசங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதியில் நாளை மறுநாள் (18ம் தேதி) இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. இதையடுத்து இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. சங்கரன்கோவில் இடைத்தேர்தல் நாளை மறுநாள் (18ம் தேதி) நடக்கிறது. 


இந்த தேர்தலில் அதி்முக வேட்பாளர் முத்துசெல்வி, தி்முக வேட்பாளர் ஜவகர் சூரியகுமார், தேமுதிக வேட்பாளர் முத்துகுமார், மதிமுக வேட்பாளர் டாக்டர் சதன் திருமலைக்குமார், பாஜக வேட்பாளர் முருகன் உள்பட 13 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடந்தது. தொடர்ந்து வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடத்தப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. 

ஈரான் உறவை கைவிடாவிட்டால் பொருளாதாரத் தடை: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை


நியூயார்க்: ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கக் கூடும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானை தவிர்த்து சவூதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

இது தொடர்பாக ஜூன் மாதம் இறுதியில் முடிவெடுக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்திருப்பதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் ஈரானை கை கழுவுவது தொடர்பாக ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

பட்ஜெட் 2012: பர்ஸை பதம் பார்க்கும் பொருள்கள் என்னென்ன?


Union Budget Price Hikeடெல்லி: பிரணாப் முகர்ஜி சமர்ப்பித்த இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் பெரும்பாலான பொருள்களின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. ஒரு சில பொருள்களின் விலை உயர்வு தவிர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் ஆர்வம் காட்டும் பொருள்களின் விலையில்தான் பிரணாப் கை வைத்துள்ளார். ஏஸி, பிரிட்ஜ் போன்றவை மிக அத்தியாவசியமானவையாகவே மாறிவிட்டன, நடுத்தர வர்க்கத்தினருக்கு. இவற்றின் விலை கணிசமாக உயரப் போகிறது.
மொபைல் போன்களுக்கான உதிரி பாகங்கள் விலை மற்றும் போன் கட்டணங்களும் உயரவிருக்கின்றன. சிகரெட் விலை வழக்கம்போல இந்த பட்ஜெட்டிலும் உயர்த்தப்பட்டுள்ளது (என்னதான் சிகரெட்டே கதி என்று கிடக்கும் அறிவு ஜீவியாக இருந்தாலும், இந்த ஒரு விஷயத்தை மட்டும் வெளிப்படையாக கண்டிக்க முடியாது என்ற நம்பிக்கை அரசுக்கு!). பீடி விலையும் உயர்கிறது! கார்களின் விலையும் இந்த பட்ஜெட் மூலம் உயர்கிறது. காரணம், ஆடம்பர, பெரிய வகைக் கார்களுக்கான எக்ஸைஸ் வரிகள் 24 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

Thursday, March 15, 2012

சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: வாக்கு பதிவு இயந்திரங்களில் வாக்கு சீட்டு பொருத்தும் பணி நிறைவு


சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் மின்னனு இயந்திரங்களில் சின்னங்கள் மற்றும் பெயர்கள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. பதற்றமான வாக்கு சாவடிகளில் பயன்படுத்த லேப்டாப்களும் தயார் நிலையில் உள்ளன. 

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் இம்மாதம் 18ல் நடக்கிறது. மொத்தம் 242 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதிமுக, திமுக, மதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட பிரதான கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 13 பேர் களத்தில் உள்ளனர். 

உத்தரப் பிரதேச முதல்வராக பதவியேற்றார் அகிலேஷ் யாதவ்


Akhilesh Yadavலக்னோ: சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் உத்தர பிரதேச மாநில முதல்வராக இன்று பதவியேற்றுக் கொண்டார். உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி அமோக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 403 தொகுதிகள்ல 224 இடங்களில் அக்கட்சி கைப்பற்றியது. இதையடுத்து கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் முதல்வராக பதவியேற்பார் என்று கூறப்பட்டது. சட்டசபை தேர்தலில் அக்கட்சி அமோக வெற்றி பெற முலாயமின் மகன் அகிலேஷ் சிங் யாதவ் தான் காரணம் என்றும், அதனால் அவர் தான் முதல்வராக வேண்டும் என்றும் மக்களும், கட்சியினர் பலரும் விரும்பினர். 

வெளிமாநில மாணவர்களின் உரிமை: உள்துறை செயலாளருக்கு பிஎஃப்ஐ கோரிக்கை!


வெளிமாநில மாணவர்களின் உரிமை: உள்துறை செயலாளருக்கு பிஎஃப்ஐ கோரிக்கை!சென்னை வேளச்சேரியில் வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறி வட மாநிலத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் போலிஸாரால் சுட்டு கொல்லப்பட்டதை தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின்படி, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படித்து வரும் வெளிமாநில மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய முழு விவரங்களை மாநகர காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர், இத்தகைய செயல்பாடு வெளிமாநில மாணவர்களின் உள்ளத்தில் ஒரு வித குற்ற உணர்வை ஏற்படுத்துவதோடு பிற மாணவர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்படவும் காரணமாக அமையும். 

Wednesday, March 14, 2012

முதல்வராக இருந்த 5 ஆண்டுகளில் 2 மடங்காக அதிகரி்த்த மாயாவதியின் சொத்து


டெல்லி: ராஜ்யசபா எம்.பி. பதவிக்காக பகுஜன்சமாஜ் கட்சித் தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி தாக்கல் செய்துள்ள மனுவில் தனக்கு ரூ.111.26 கோடி சொததுக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். 

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ராஜ்யசபா எம்.பி. பதவிக்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது சொத்து விவரங்களையும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார். கடந்த 2007ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.52 கோடி சொத்து வைத்திருந்த அவர் தற்போது ரூ.111.26 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வைத்துள்ளார். அவர் உத்தர பிரதேச முதல்வராக இருந்த கடந்த 5 ஆண்டுகளில் தான் அவரது சொத்து இரண்டு மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.

SDPI தலைவர் மீதான பொய் வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் !


அமீர் சுல்தான்சென்னை:கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட எஸ்.டி.பி.ஐயின் துறைமுக தொகுதி தலைவர் அமீர் சுல்தான் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் பொய்வழக்கு என்று கூறி தள்ளுபடி செய்தது. எஸ்.டி.பி.ஐயின் துறைமுக தொகுதி தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் அமீர் சுல்தான். பல சமூக நலப்பணிகளின் மூலம் இவர் அப்பகுதி மக்களிடையே மிகப்பெரும் ஆதரவை நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.

சட்டமன்ற உறுப்பினராகவோ, கவுன்சிலராகவோ இருந்து செய்ய வேண்டிய பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வந்ததால் பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அமீர் சுல்தான் மேல் பொறாமையும், காழ்புணர்ச்சியும் ஏற்பட்டது. அதே சமயம் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் துறைமுகம் தொகுதிக்கு உட்பட்ட 60வது வார்டில் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு தான் செய்த சேவையின் மூலமாக 1250 வாக்குகளை பெற்று நான்காவது இடத்தை பிடித்தார்.

ரெயில்வே பட்ஜெட் தாக்கல்:பாதுகாப்பிற்கு முன்னுரிமை – அனைத்து வகுப்புக் கட்டணமும் உயர்வு !


Railway Budget 2012
புதுடெல்லி:தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள ரெயில்வே அமைச்சர் திரிவேதி டிக்கெட் கட்டணத்தை உயர்த்தியுள்ளார். அனைத்து வகுப்பு கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2 பைஸா முதல் 30 பைஸா வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் முதன் முறையாக ரெயில்வே டிக்கெட் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 


ரெயில்வேயின் பாதுகாப்பு மற்றும் நவீனமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளித்து இம்முறை ரெயில்வே பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. 2012-13 ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட் ஒரு கண்ணோட்டம்: 

Tuesday, March 13, 2012

இஸ்ரேலியர்களுக்கு ஆயுள்தண்டனை: எகிப்து நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு !


கெய்ரோ: கடந்த திங்கட்கிழமை (12.03.2012) எகிப்திய எல்லைக்கு ஊடாக சட்டவிரோதமாக ஆயுதங்களைக் கடத்திய குற்றத்துக்காக இரண்டு இஸ்ரேலியர்களுக்கும் ஒரு உக்ரேன் நாட்டவருக்கும் எகிப்திய நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. எகிப்திய எல்லையில் கடத்தப்பட்ட ஆயுதங்களுடன் பாதுகாப்பு அதிகாரிகளிடம் அகப்பட்டுக்கொண்ட மூவரும் விளக்க மறியலில் அடைக்கப்பட்டனர்.

தரையிறங்கும்போது ரன்வேயில் மோதிய ஏர் இந்தியா விமானத்தின் வால் பகுதி


மும்பை: அகமதாபாத்தில் இருந்து மும்பை வந்த ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது அதன் வால் பகுதி ரன்வேயில் தரை தட்டியது. சுமார் 10 அடி தூரம் தரையில் உராய்ந்து கொண்டு சென்ற பின் அந்த விமானம் நின்றது. இதையடுத்து விமானத்தின் இரு பைலட்களையும் சஸ்பெண்ட் செய்துள்ள மத்திய விமானப் போக்குவரத்துத்துறை, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இதில் ஒருவர் பெண் பைலட் ஆவார்.

Sunday, March 11, 2012

எடியூரப்பாவுக்கு மீண்டும் ஏமாற்றம்: முதல்வராக்க கட்காரி மறுப்பு !


பெங்களூர் : தன்மீது சுமத்தப்பட்டிருந்த சுரங்க மோசடி புகார் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் தன்னை முதல்வராக்க வேண்டுமென கோரிக்கை விடுத்த எடியூரப்பாவின் கோரிக்கையைப் பாஜக தலைவர் நிதின் கட்காரி நிராகரித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் முதல்வராக பதவியிலிருக்கும்போது சுரங்க மோசடியில் ஈடுபட்டதாக எடியூரப்பாமீது லோக்ஆயுக்தா அறிக்கை குற்றம் சுமத்தியது. இதனைத் தொடர்ந்து எடியூரப்பாவைப் பாஜக முதல்வர் பதவியிலிருந்து நீக்கியது.

ஜப்பானை நிலநடுக்கம், சுனாமி தாக்கி ஒரு வருடம் நிறைவு: மக்கள் கண்ணீர் அஞ்சலி


Japan Tsunamiடோக்கியோ:  ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம், சுனாமி ஆகிய இரட்டைப் பேரழிவுகளுக்கு 16,000 பேர் பலியான சம்பவம் நடந்து இன்றுடன் ஒரு வருடமாகிறது. இதையடுத்து பலியானவர்களுக்கு ஜப்பானியர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


11-3-2011 அன்று பிற்பகல் 2.26 மணிக்கு வடகிழக்கு ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 9 ஆக பதிவானது. இதையடுத்து சுனாமி பேரலைகள் எழுந்து அப்பகுதியை சின்னாபின்னமாக்கியது. ஜப்பான் வரலாற்றிலேயே மோசமான இயற்கை பேரழிவு இது தான். இந்த இரட்டைப் பேரழிவுகளால் ஃபுகுஷிமாவில் உள்ள 6 அணுஉலைகளில் 4 உலைகள் வெடித்துச் சிதறின. இதனால் அங்கு கதிர் வீச்சு அபாயம் ஏற்பட்டது. 

நாடாளுமன்றம் நாளை கூடுகிறது... இந்தமுறையும் பிரச்சினைகள் புயலைக் கிளப்பும்!


வழக்கம் போல பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. பல்வேறு பிரச்சினைகளைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.


5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு நடைபெறும் இந்த தேர்தலில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளன. வழக்கமாக ரயில்வே பட்ஜெட் மற்றும் மத்திய பட்ஜெட் பிப்ரவரி மாத இறுதியில் தாக்கல் செய்யப்படும். எனினும் உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி மாதத்தில் நடைபெற்றதால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது தள்ளி வைக்கப்பட்டது.

Saturday, March 10, 2012

அமெரிக்காவில் 34 லட்சம் இந்தியர் - 10 ஆண்டுகளில் கிடு கிடு உயர்வு!


American Indiansவாஷிங்டன்: அமெரிக்காவில் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துவிட்டது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி அங்கு 34 லட்சம் இந்தியர்கள் வசிப்பதாகவும், இவர்களில் 10 லட்சம் பேர் வாக்குரிமை பெற்றவர்கள் என்றும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் மூன்றாவது பெரிய இனமாக ஆசிய - அமெரிக்கர்கள் உயர்ந்துள்ளனர். பத்தாண்டுகளில் 68 சதவீத வளர்ச்சி கண்டுள்ளனர் இந்தியர்கள், எண்ணிக்கையில்.



அமெரிக்காவில் அதிகளவில் உள்ள பிற இனத்தவர்களில் அமெரிக்க சீனர்கள் முதலிடம் வகிக்கின்றனர். எண்ணிக்கையில் அவர்கள் கிட்டத்தட்ட 40 லட்சம் பேர். இவர்களுக்கு அடுத்து பிலிப்பினோ - அமெரிக்கர்கர்கள். அவர்களின் எண்ணிக்கை 34.2 லட்சம். அடுத்து இந்தியர்கள் 34 லட்சம் பேர் (இவர்களில் பெருமளவு தெலுங்கு மற்றும் தமிழர்கள்). இவர்களில் வாக்குரிமை பெற்ற இந்தியர் எண்ணிக்கை 10 லட்சம். அதாவது 1 மில்லியன். 2000-ம் ஆண்டில் இது 5 லட்சமாக இருந்தது. 10 ஆண்டுகளில் 100 சதவீதமாக வாக்குரிமை பெற்றோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

பத்திரிக்கையாளர் கைது : இந்தியாவில் நடப்பது UPA ஆட்சியா? அல்லது மொசாத் - CIA ஆட்சியா? - டெல்லி இமாம்

பிரபல பத்திரிக்கையாளர், முஹம்மது அஹ்மது காஜிமி' மீது, தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு, கைது செய்யப்பட்டதை கண்டித்து, தலை நகரம் டெல்லியில் பல தரப்பிலிருந்தும் ஆதரவுக்குரல்கள் ஓங்கி ஒலிக்க துவங்கி விட்டது.
Press club of india,  Delhi union of journalists போன்ற அமைப்புக்கள், பிரதமர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களை தொடர்பு கொண்டு,  பத்திரிக்கையாளர் முஹம்மது அஹ்மது காஜிமி' யின் விடுதலைக்காக குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர். மேலும் இவர்களுக்கு ஆதரவாக சட்ட மன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் களத்தில் உள்ளனர். டெல்லி ஜாமியா மசூதி இமாம் புகாரி அவர்களும்,  காஜிமி'யின் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்திற்கு, தாம் ஆதரவாக இருப்பேன் என்றும் உறுதி அளித்தார். 

Friday, March 9, 2012

சுரங்க முறைகேடு வழக்கிலிருந்து விடுபட்டதால் மீண்டும் முதல்வராவேன்-எடியூரப்பா

Yeddyurappaபெங்களூர்: சுரங்க முறைகேடு வழக்கிலிருந்து தாம் விடுவிக்கப்பட்டுவிட்டதால் நிச்சயமாக தம்மை பாஜக மேலிடம் முதல்வ்ராக்கிவிடும் என்று 100 சதவீத்ம் நம்பிக்கை இருப்பதாக கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
சுரங்க முறைகேடு வழக்கில் எடியூரப்பா மீதான எப்.ஐ.ஆரை நேற்று முன்தினம் கர்நாடக நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. இதைய்டுத்து நேற்று தமது ஆதரவாளர்களுடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தினார்.